இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இண்டர்நெட் இல்லாமல் எந்த மொபைலிலும் பேஸ்புக் பார்க்கலாம்!
நீங்க பழைய கைபேசி வகையை சார்ந்த Nokia 1100 போன்ற கைபேசிகளை வைத்திருக்கிறீர்களா?. உங்கள் ஃபோன்ல இணையத்தை பார்க்கும் browser வசதி இல்லையா?. இல்லை இணைய வசதியே இல்லாத ஊர்ல, அதாவது (EGDE/GPRS/3G) போன்ற வசதி இல்லாத இடத்தில போய் மாட்டிகிட்டிங்களா?.
சரி கவலைய விடுங்க.. இந்த மாதிரி நேரத்திலும் இடத்திலும் நீங்க இருந்தா கூட இப்போ ஃபேஸ்புக்கை பயன்படுத்த முடியும். ஆச்சர்யமாய் இருக்கா?. கைபேசியிலிருந்து நீங்கள் இதை பயன்படுத்த, *325# என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும், அது போதும் நீங்க ஃபேஸ்புக் பயன்படுத்த முடியும். கீழே இருக்கிற படங்களை பாருங்க உங்களுக்கே புரியும்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
உங்கள் கைபேசியில் இருந்து *325# தொடர்ப்பு கொண்டு, உங்கள் ஃபேஸ்புக் பயனர் கணக்கு விவரங்களை கொடுத்து இந்த சேவையை பயன்படுத்த முடியும். பேஸ்புக் பல்வேறு அம்சங்களை பெற எண் அடிப்படையில் கட்டளைகளை (number based commands) அனுப்பி உங்கள் நண்பருடன் கலந்துரையாட, ஒருவரை நண்பராக்கி கொள்ள, மேலும் பல ஃபேஸ்புக் சேவைகளை பெற முடிகிறது.
நான் இந்த சேவையை சிறிது நேரம் பயன்படுத்தி பார்த்தேன், இது ஒரு வித்தியாசமான அனுபவமாய் இருந்தது. இந்தியாவில் இந்த சேவை தற்போது ஏர்டெல், ஏர்செல், ஐடியா மற்றும் டாடா டோகோமோ பயனர்களுக்கு கிடைக்கும் என Fonetwish கூறுகிறது.
இதன் மூலம் உங்கள் ஃபேஸ்புக் news feed ல் உள்ளவற்றை ஒவ்வொன்றாக பார்ப்பதற்க்குள் அலுத்துவிடும். ஆனால் உங்களின் ஃபேஸ்புக்கின் status ஐ update செய்ய, நண்பர்களுடன் உரையாட இது மிகவும் பயன்படும்.
இதை பயன்படுத்துவதற்க்கு நாள் ஒன்றிற்க்கு ரூபாய் ஒன்று செலவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக