வெள்ளி, ஜனவரி 13, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

பொற்கால ஆட்சியை கொடுத்தது காமராஜரா? அண்ணாவா?


 



சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது... எல்லோரும் காமராஜர் ஆட்சியமைப்போம் என்றுதான் சொல்கிறார்கள். ஏன் யாரும் அண்ணா ஆட்சியமைப்போம் என்று சொல்வதில்லை? காமராஜர்தான் பொற்கால ஆட்சியை கொடுத்தாரா? அண்ணா தரவில்லையா? என்று கேட்டார்.

இது வழக்கமாக எல்லோருக்கும் ஏற்படும் கேள்விதான் என்றாலும் என்னால் சரியான விளக்கம் தரமுடியவில்லை. இருந்தாலும் சமாளித்துவைப்போம் என்று சில விளக்கங்களை கொடுத்தேன். அதாவது.....

தமிழ்நாட்டில் காமராஜர் முதல் அமைச்சராக இருந்தது 1954-லிருந்து 1963 வரை 9 ஆண்டுகள். அண்ணாவோ 1967-லிருந்து 1969 வரை இரண்டு ஆண்டுகள் தான். ஆகவே, தமிழ்நாட்டை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது அண்ணாவை விட காமராஜரே..... அப்படி அதிக நாட்கள் ஆட்சியிலிருந்ததால் அவருக்கு நல்லது செய்யவும் வாய்ப்புகள் அதிகம் இருந்தது. ஆனால், அண்ணாவோ மிக குறுகிய காலமே ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். அப்படியிருக்கும்போது அண்ணா சிறந்த ஆட்சியை கொடுத்தாரா? காமராஜர் சிறந்த ஆட்சியை கொடுத்தாரா என்ற கேள்வி எழவே கூடாது. ஒரு வேளை காமராஜரை விட, அண்ணா அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்திருந்தால் நிறைய செய்திருப்பாரோ என்னவோ? என்ன  நான் சொன்ன  பதில் சரிதானே.

காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி என்பதற்கான சில காரணங்கள்.

காமராஜர் தண்ணீருக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். அதனால்தான்.....
பரம்பிக்குளம்-ஆழியாறு அணை
கீழ்பவானி நீர்த்தேக்கம்
சாத்தனூர் நீர்த்தேர்க்கம்
மணிமுத்தாறு திட்டம்
வைகை அணைக்கட்டு திட்டம்

போன்றவைகள் காமராஜர் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும்,
திருச்சி பாய்லர் தொழிற்சாலை,
ஆவடி ராணுவ டாங்கி தொழிற்சாலை,
நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன்
பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை
நீலகிரி ஃபிலிம் தொழிற்சாலை
கிண்டி ஹிந்துஸ்தான் டெலிபிரிண்ட் தொழிற்சாலை
அம்பத்தூர், ராணிப்பேட்டை தொழிற்பேட்டை

முதலியவை காமராஜர் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டவைகள் தான்
.http://www.rahimgazzali.com/2012/01/who-was-given-golden-period.html

கருத்துகள் இல்லை: