செவ்வாய், பிப்ரவரி 28, 2012



GOOGLE(கூகிள்) உருவான கதை  Google Story

இன்று கூகிள் என்றாலே
தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள்
அப்படிப்பட்ட கூகிள் உருவான கதை எத்தனை பேருக்கு தெரியும்
இதோ உங்களுக்காக,
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
தெரியாதவருக்கு இந்த பதிவு உதவும் ..
தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள் ..
ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.
அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட உள்ளக படங்களையெல்லாம் இணைத்திருக்கிறேன். இது எவ்வளவு ஜாலியான கம்பனின்னு படங்களை பார்த்தாலே தெரியும்.


ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரியJustify Fullஅமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்?

வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தேங்க்ஸ்!'' என்றார்.

""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''

இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.

லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.

கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில்
தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை.Sun-னும் IBM-மும் சில Sun Ultra II,F50 IBM RS/6000
செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்க விலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது.(அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள் என்னவாயிருக்கும்?...யூகிக்க கூட இயலவில்லை.)

நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச்  சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?

கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!

கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாக மட்டும்தான் இருந்தது. மசால் தோசை என்று தேடினால் இன்டர்நெட்டில் இருக்கும் கோடியோ கோடிக்கணக்கான தகவல் பக்கங்களில் புகுந்து புறப்பட்டுத் தேடி வினாடி நேரத்தில் விடை கொண்டு வந்துவிடும். இந்த மின்னல் வேகத் தேடல் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவர்கள் பேஜும் பின்னும்தான். இதைச் செய்ய அவர்கள் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எதையும் உபயோகிக்கவில்லை; சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் எட்டணா கம்ப்யூட்டர்களை ஏராளமான எண்ணிக்கையில் வாங்கிப் போட்டு அவற்றை ஒத்துழைக்க வைத்த சாப்ட்வேர் சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது.


கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் ஆபீஸ் வேலை, ஒரு நாள் சொந்த வேலை. அதாவது, உங்களுக்கு ஏதாவது புது ஐடியா தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி காசில் வசதி செய்து தருகிறார்கள். கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஆளாளுக்கு குருட்டாம்போக்கில் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான். ""ஒவ்வோர் ஐடியாவும் ஒரு வைரம்; "தினப்படி வேலையில் பிசியாக இருக்கிறேன், யோசிக்க நேரமில்லை' என்பதனால் எந்த நல்ல ஐடியாவும் வீணாகிவிடக் கூடாது'' என்பது கூகிள் கொள்கை.

கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. ""எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்'' என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?)

கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள்.

கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம்.

கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது;

கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும் வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது.

லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள்.

பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள்.

பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம்  கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.)

கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள்.

உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்; மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜி மெயில்தான் இப்போது சூடான மெயிலை விட அதிகம் நாடப்படுகிறது. எல்லா இ-மெயில் கம்பெனிகளும் பிசுகிப் பிசுகி ஐம்பது மெகாபைட், நூறு மெகாபைட் என்று இடம் தந்துகொண்டிருந்தபோது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்துப் போட்டியாளர்களைப் பதறி ஓட வைத்தார்கள். பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது.

இன்டர்நெட் பூராவும் அநியாயத்துக்குக் கொட்டிக் கிடக்கும் மற்றொரு விஷயம் செக்ஸ். குழந்தைகள் கூகிளில் தேடும்போது பலான சமாச்சாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பதற்காக முக்கியமான வார்த்தைகளை வைத்து மேற்படி சரக்கா என்பதை நிர்ணயித்து வடிகட்டி விடுகிறார்கள். ஆனால் படங்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டருக்கு கண்ணில்லை. ஒரு படத்தைக் காட்டி பக்திப் படமா, பலான படமா என்று கம்ப்யூட்டரை சரியாகச் சொல்ல வைத்துவிட்டால் கேள்வி கேட்காமல் டாக்டர் பட்டம் கொடுக்கலாம். சில கூகிள் விஞ்ஞானிகள் சேர்ந்து இதற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

மனித வடிவம், தோல் நிறம் எல்லாவற்றையும் எண்களாக மாற்றி ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குப் போட்டு படத்திலிருப்பது சம்திங் சம்திங்தான் என்பதை பெரும்பாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

எந்த வார்த்தையை எந்த ஊர் ஜனங்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று தேதி வாரியாகப் படம் வரைந்து காட்டுகிறார்கள்.

அப்துல் கலாம் என்ற பெயரை கோவை மக்கள்தான் அதிகம் தேடுகிறார்கள்.

ஷகீலாவை கேரளத்து ரசிகர்கள் கூகிள் பூராத் தேடித் துரத்தியிருக்கிறார்கள்.

இந்தியாவின் டாப் டென் என்று பார்த்தால் பொதுவாக நாம் கிரிக்கெட் பற்றித்தான் அதிகம் விசாரித்திருக்கிறோம். அடுத்தபடி சானியா மிர்ஸா, ப்ரியங்கா சோப்ரா, நமீதா வருகிறார்கள்.

சில படிக்கிற பையன்கள் இந்திரா காந்தி யுனிவர்சிட்டியையும் தேடியிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள்.

கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்!!!

Tag:
Google Story,google,story google,the google story,Google Story,GOOGLE(கூகிள்) உருவான கதை,google,google,google,google,google, add my website,search,google,Google Story,google,story google,the google story,Google Story,GOOGLE(கூகிள்) உருவான கதை,google,google,google,google,google, add my website,search,google
THANKS:

கூகிள் வெப் ஹிஸ்டரி நீக்க கடைசி நாள்


நண்பர்களே கூகிள் வெப் ஹிஸ்டரி குறித்த நண்பரின் பதிவு இன்று வெளியாகியுள்ளது.    நண்பர்க் கிரி அவர்கள் எழுதிவரும் தளத்தில் விரிவாக எழுதியுள்ளார்  நம் தளத்தின் நண்பர்களுக்கு தெரிந்து கொள்ள  வேண்டும் என்ற நோக்கிலே இங்கே அவருடைய பதிவினை இங்கே மறுபதிப்பிக்கிறேன்.

மார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இருப்பீர்கள் பலர் அறிந்து இருக்க மாட்டீர்கள் ஆனால் கூகுள் உங்களிடம் இதை மாற்றப்போவதாக அறிவித்து உங்களுக்கு தகவலை அறிவித்து இருக்கும் நீங்களும் வழக்கம் போல ஓகே கொடுத்து போய் இருப்பீர்கள் icon smile கூகுள் வெப் ஹிஸ்டரியை (Web History) நீக்க நாளையே கடைசி நாள் நாம என்னைக்கு இதை எல்லாம் படித்து இருக்கிறோம். கணக்கு துவங்கும் போது ஒரு பெரிய Agreement வரும் 99 % மக்கள் அதை படிக்காமலே Accept செய்து விடுவோம். இது போல ஒன்றில் தான் ஒரு சிலர் நமக்கு வேட்டு வைத்து விடுகிறார்கள்.


நீங்கள் கூகுள் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் சமீபத்தில் நீங்கள் நிச்சயம் இதை கவனிக்காமல் இருந்து இருக்க முடியாது. தன்னுடைய விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது அதாவது தன்னுடைய சேவைகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை கொண்டு வரப்போவதாகவும் இதை மார்ச் 1 முதல் செயல்படுத்தப்போவதாகவும் கூகுள் அறிவித்து இருந்தது.
இதில் ஒரு முக்கியமான விஷயம் Google Web History ஆகும். இது தான் தற்போது இணையம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

Google Web History என்றால் என்ன?

நீங்கள் எந்த உலவியை (Browser) பயன்படுத்தினாலும் நீங்கள் எந்தெந்த தளங்கள் சென்றீர்கள் என்பது பற்றிய தகவல்கள் உலவியின் History யில் சேமிக்கப்பட்டு இருக்கும் நீங்கள் வைத்து இருக்கும் settings ஐ பொறுத்து. யாராவது விஷயம் தெரிந்தவர் என்றால் இதை நோண்டினால் நீங்கள் எந்தெந்த தளம் சென்றீர்கள் இணையத்தில் என்னென்ன பார்த்தீர்கள் என்று எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள்.

இதையே கூகுள் எப்படி செய்கிறது என்றால்…கூகுள் சேவைகளில் நாம் என்னென்ன தளம் போகிறோம் எதை தேடுகிறோம் நம்முடைய விருப்பங்கள் என்னென்ன என்பது அனைத்தையும் சேமித்துக்கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் கூகுள் தளத்தில் உங்கள் பயனர் கணக்கு கொடுத்து உள்ளே சென்று இருக்கும் போது கூகுள் தேடுதலில் என்னென்ன செய்கிறீர்களோ அனைத்தும் சேமிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும். நீங்கள் How to remove the google web history என்று தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் பின் அந்தப் பக்கத்தை மூடி விட்டு புதிய பக்கத்தில் திரும்ப இதே வரியை தட்டச்சு செய்தீர்கள் என்றால் நீங்கள் ஏற்கனவே இதை தட்டச்சு செய்து இருந்ததால் அதுவே ஏற்கனவே நீங்கள் தட்டச்சு செய்த பழைய வரியைக் காட்டும். இது போல பல சேவைகளில் நீங்கள் செய்தது எல்லாம் சேமிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும்.
இதில் என்ன பிரச்சனை என்றால் நீங்கள் ஏதாவது விவகாரமா தேடி இருந்தால் அதுவும் இதில் இருக்கும். மொத்தத்தில் உங்கள் ஜாதகமே இதைப் பார்த்தால் தெரியும். நாளை உங்கள் கணக்கை யாராவது ஹேக் செய்து ஆட்டையப்போட்டு இதில் போய்ப் பார்த்தால் உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறி விடும். எதை எதை தேடினீர்கள் என்று புட்டு புட்டு வைத்து விடும். கூகுளும் உங்கள் தேடுதலை அடிப்படையாக வைத்து செய்திகளை விளம்பரங்களை அனுப்பிக்கொண்டு இருக்கும்.

இதை எல்லாம் நீக்க நாளையே (29 Feb 2012) கடைசி நாள் அதனால் மறக்காமல் ஒத்திப்போடாமல் உடனே செய்து விடுங்கள். மார்ச் 1 க்கு பிறகு முடியாது. கூகுள் உங்கள் தகவல்களை சேமித்து வைத்து விடும்.

இதை எப்படி நீக்குவது?

https://www.google.com/history/ தளம் செல்லுங்கள் உங்கள் பயனர் கணக்கு கடவுச்சொல்லை (Password) கொடுத்தவுடன் பின்வரும் படம் போல வரும் இதில் நீங்கள் “Remove all web history” என்பதை க்ளிக் செய்தால் அனைத்து History யும் நீக்கி விடும் அதோடு இனி இது போல சேமிக்காது Pause செய்து விடும் உங்களுக்கு தேவை என்றால் On செய்து கொள்ளலாம் ஆனால் On (Resume) செய்ய வேண்டாம். கூகுள் தொடர்ந்து உங்கள் தகவல்களை எடுக்க முடியும் ஆனால் அனானிமஸ் ஆகத்தான் எடுக்க முடியும் உங்களையுடைய தகவல்கள் என்று கூற முடியாது.
இதை செய்ய 2 நிமிடம் கூட ஆகாது வழக்கம் போல சோம்பேறித்தனப்பட்டு மறந்து விடாதீர்கள். நீங்கள் பல்வேறு கூகுள் கணக்குகளை வைத்து இருந்தால் அனைத்திற்கும் இது போல தனித்தனியாக செய்ய வேண்டும்.
நாளை தான் கூறலாம் என்று நினைத்தேன் இது பற்றி தெரியாதவர்கள் கடைசி நாளில் கவனிக்காமல் இருந்து விட வாய்ப்புண்டு என்பதால் இன்றே கூறி விட்டேன். என்னுடைய தளத்தை படிப்பவர்களுக்கு இது கூட செய்யவில்லை என்றால் எப்படி icon smile கூகுள் வெப் ஹிஸ்டரியை (Web History) நீக்க நாளையே கடைசி நாள் உங்கள் நண்பர்களிடமும் இந்த செய்தி பற்றி தெரிவித்து அவர்களையும் எச்சரிக்கை செய்து விடவும்.
ஆங்கிலத்தளங்கள் இது பற்றி அதிகம் எழுதிக்கொண்டு இருக்கின்றன தமிழில் ஏன் முக்கியத்தளங்கள் இது பற்றி அமைதி காக்கின்றன என்று புரியவில்லை.

இந்த பதிவு மற்றும் படங்கள் அவரின் சம்மதத்துடன் இங்கே வெளியிடப்படுகிறது.  நன்றி கிரி கிரி Blog



நன்றி :
http://www.gouthaminfotech.com/2012/02/last-day-of-web-history-removing.html

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனவிலங்குகளை வீடியோவுடன் காட்டும் அசத்தலான தளம்.


அரிய வனவிலங்குகளைப் பற்றிய அனைத்து வீடியோக்கள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோக்களையும் ஒரே இடத்தில் இருந்து காட்ட ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
ஆன்லைன் மூலம் வனவிலங்குகள் தொடர்பான அனைத்து வீடியோக்கள், விளையாட்டுகள் மற்றும் போட்டிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் விரிவாகவும் முழுமையாகவும் தெரிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.itvwild.com
Itv Wild என்ற இத்தளத்திற்கு சென்று உலக அளவில் பிரபலமான வனவிலங்குகளின் வீடியோக்களையும் இதற்காக நடத்தும் போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.அரிய பல விலங்குகளின் வீடியோக்கள் இத்தளத்தில் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது, எந்த விலங்கைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த விலங்கின் பெயரை Search என்று இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து சொடுக்கினால் போதும். குறிப்பிட்ட விலங்கு சார்ந்த அனைத்து வீடியோக்களும் நமக்கு காட்டப்படும். வனவிலங்குகள் பற்றி தெரிந்துகொள்வதற்காக குவிஸ் போட்டியும் நடத்துகின்றனர், குழந்தைகளுக்கும் வனவிலங்கு பற்றி தகவல்களை சேகரிப்பவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
நாம் சேமித்து வைத்து இருக்கும் அரிய பொக்கிஷங்களை உலகறியச் செய்யலாம்.
கூகுள் குரோம் உலாவியின் வேகத்தை சோதிக்கும் அரிய வீடியோ
பெளதிகம் மற்றும் வானியல் தொடர்புடைய அரிய 60 குறியீடுகளுக்கான விளக்கங்கள் வீடியோவுடன்.
டைட்டானிக் கப்பலின் அரிய பல தகவல்களை வீடியோவுடன் சொல்லும் பயனுள்ள தளம்.
THANKS:
http://winmani.wordpress.com/2012/02/18/itv-wild/

பள்ளிக்குழந்தைகளுக்கு கட்டாய "ஓவர்டைம்" ! தொழிற்சாலைகளுக்கு கட்டாய "மின் விடுமுறை" - பிரமாதம்!

இந்தக்கட்டுரை ஒரு திமுக ஆதரவு கட்டுரை கிடையாது. கிடையவே கிடையாது. ஒரு சாதாரண இரு நிகழ்வுகள். நடந்த மற்றும் நடந்து கொண்டிருக்கும் இரு நிகழ்வுகள். இதில் என் கேள்வி நடுநிலைவாதிகளை நோக்கித்தான். நேரிடையாக பாதிக்கப்படாமல் இருப்பவர்களுக்கு இக்கட்டுரை அயற்சியை தரலாம். அதனால் கட்டுரையின் கடைசி பாராவுக்கு நேரிடையாக போய் படித்து விட்டு போகவும்.

2011ம் ஆண்டு மே 13ம் தேதி முதல் இந்த அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது. சுமார் பத்து மாதம் முன்பு. ஆட்சிக்கு வந்து ஒரு பதினைந்து தினத்தில் பள்ளிகள் திறக்க இருந்தன. புதிய பாடங்கள். நிபுனர் குழுவினரை வைத்து நான்கு ஆண்டுகள் பல வித ஆராய்சிகளுக்கு பின்னர் தயாரிக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள். புத்தகங்கள் எல்லாம் தயார். ஆனால் ஆட்சிக்கட்டிலில் ஏறிய அதிமுக அடுத்த ஓரிரு நாட்களில் ஒரு அறிவிப்பை வெளியிடுகின்றது. சமச்சீர் பாடத்திட்டம் கிடையாது. பழைய பாடத்திட்டம் தான். அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் எல்லாம் கிடையாது. புதிதாக புத்தகங்கள் அச்சடிக்கப்படும். அது அச்சடித்து வெளிவரும் வரை பள்ளி திறக்கப்படாது என ஒரு அறிவிப்பு செய்கின்றது.

பெற்றவர்கள் தலையில் இடி. அதுவும் பத்தாவது மாணவர்களுக்கு பேரிடி. ஏனனில் பத்தாம் வகுப்பு என்பது அவனுக்கு வாழ்க்கையின் திருப்பு முனை நேரம். ஏற்கனவே இருந்த அரசு இணையத்தில் அந்த சமச்சீர் பாடங்கள் எல்லாம் வெளியிட அதை தரவிறக்கம் செய்து வசதி படைத்த மாணவர்கள் படிக்க ஆரம்பித்து விட்ட நிலையில் இப்படி ஒரு அரசு ஆணை எல்லோரையும் செயலிழக்க செய்கின்றது.ஆயிற்று... உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் எல்லாம் அரசின் செயலை கண்டித்தது. தண்டித்தது. சமச்சீர் கல்விக்கு ஆதரவாய் நீதி வழங்கியது. அதல்லாம் பழைய கதை. இதில் விஷயம் என்னவெனில் அதற்குள் இரண்டு மாதங்கள் ஆகிவிடுகின்றது. கிட்டதட்ட ஒரு மாதம் கழித்து திறந்த பள்ளிகள் எல்லாம் பாடப்புத்தகம் எது என தெரியாமல் செய்வதறியாமல் நிற்க... ஒரு வழியாக சமச்சீர் பாடப்புத்தகங்களே கொடுக்கப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட குறிப்பிட்ட சில நாட்கள் குறித்து அந்த நாட்களுக்குள் புத்தகங்கள் மாணவர்களுக்கு வினியோகம் செய்து விட வேண்டும் என சொல்லப்பட ஆனால் அதுவும் அரசால் செய்யப்படவில்லை.

அடித்து வைத்த புத்தகங்களை முழுமையாக மாணவர்களுக்கு வினியோகித்து முடித்த போது செப்டம்பர் மாதம் கிட்ட தட்ட முடிந்தே விட்டது. மொத்தம் மூன்று மாதங்கள் யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் வெட்டியாக போனது. நேரிடையாக அரையாண்டு தேர்வுக்கு போகிறார்கள் மாணவர்கள். பாடம் நடத்தக்கூட ஆசிரியர்களுக்கு காலம் போதவில்லை. சரி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வாவது தள்ளிப்போகும் என நினைத்த பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அதற்கும் மேல் ஆசிரியர்களுக்கும் பேரதிர்ச்சி. எல்லா வருடம் போல இந்த வருடமும் அதே மார்ச் மாதம் பள்ளி இறுதித்தேர்வு என அட்டவணை வெளியாகிவிட்டது.

பொதுவாகவே மாணவர்கள் சனி, ஞாயிறு இரு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் திங்கள் கிழமை பள்ளிக்கு போவதற்கே கொஞ்சம் மன உளைச்சலில் தான் போவர். இது உண்மையோ உண்மை. வாரம் இரு நாட்கள் விடுமுறை கொடுத்தாலே இப்படியான ஒரு மனோநிலையில் இருக்கும் பெரும்பாலான மாணவ மாணவியர்கள் இப்போது இந்த கல்வியாண்டில் முதல் மூன்று மாதங்கள் அரசு செய்த குழப்பத்தால் பாடங்கள் இல்லாமையால் ஆசிரியர்களால் சனிக்கிழமை கண்டிப்பாக பள்ளி உண்டு, ஞாயிறு சிறப்பு வகுப்பு உண்டு என பள்ளிக்கு வரவழைக்கப்பட்டதால் ... ஆசிரியர்களுக்கும் வேறு வழி இல்லை, அதே போல பெற்றோர்களுக்கும் வேறு வழியே இல்லை... மாணவர்கள் போய் தான் ஆக வேண்டும். அப்படி போவதால் அவனுக்கு விளையாட போக முடியாது, ஒரு திருமணம், ஒரு கோவில், ஒரு கண்காட்சி, ஒரு குடும்பவிழா என எதிலும் தன் கவனத்தை திசை திருப்ப இயலாத ஒரு சூழல். மிகுந்த மன உளைச்சல் காரணமாக ஆசிரியரை கழுத்தில் கத்தியால் குத்தும் நிலைக்கு அவன் தள்ளப்படுகிறான்..... விடுமுறை கொடுத்து, விளையாட சொல்லி, பொழுது போக்காக அவன் மனதை மாற்றி மாற்றி அவனை படிப்பில் ஈடுபட செய்யாமல் தன் சொந்த ஈகோவின் காரணமாக இந்த அரசு செயல்பட்ட விதம் ஒரு மாணவ சமுதாயத்தையே ஒரு படுகுழியில் தள்ளியதை பார்த்தோம். பார்த்து கொண்டு இருக்கின்றோம். விடுமுறையே உனக்கு கிடையாது என குழந்தைகளை மன உளைச்சலுக்கு தள்ளியது இந்த அரசு என்பது ஒருபுறம் இருக்கட்டும்....

நிற்க...

நேற்று முதல் ஒரு புதிய அறிவிப்பு இந்த அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பெயர் சற்றே வினோதம். ஆமாம் "தொழிற்சாலைகளுக்கு மின்விடுமுறை". என்ன கொடுமை இதல்லாம். சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு வாரம் ஒரு நாள் "மின்விடுமுறை" என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் குடும்பத்தலைவர்களில் நாற்பது சதம் பேர் ஏதாவது ஒரு தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மட்டுமே. அவர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை என்பது தவிர இன்னும் ஒரு நாள் அரசு இப்போது அளித்துள்ள "மின்விடுமுறை" ஒரு முழு நாள். தனக்கு நியாயமாக கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையில் கூட ஓவர் டைம் செய்து அதன் வருமானத்தை குடும்பத்துக்கு செலவு செய்த அந்த தொழிலாளி இப்போது அதுவும் முடியாமல், அதை தவிர கூடுதலாக இன்னும் ஒரு நாள் வாரத்தில் கட்டாய விடுமுறைக்கு தள்ளப்படுகிறான்.

நன்றாக நினைத்துப்பாருங்கள். ஏற்கனவே சிறு மற்றும் குறுந்தொழில் செய்யும் முதலாளிகள் அரசின் மின்வெட்டால் நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில் அந்த தொழிலாளி வேலை செய்யாத அரசு அறிவித்த "மின்விடுமுறை"க்கு சம்பளமா கொடுக்கப்போகின்றனர்? ஆக வேலையில் இருக்கும் ஒரு தொழிலாளி மாதம் நான்கு நாட்கள் வேலையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகப்போகிறான். ஏற்கனவே ஏறிவிட்ட விலைவாசியால் குறிப்பாக பால்விலை, பேருந்துகட்டணம் இதோ அடுத்த மாதம் ஏறப்போகும் மின்சாரக்கட்டணம் என வரிசையாக அவன் கழுத்தில் விழுந்து அழுத்தும் தூக்கு கயிற்றை சமாளிக்க அவனோ "ஓவர் டைம்" செய்து சமாளிக்கலாம் என இருந்த இந்த நேரத்தில் இருக்கும் வேலைக்கே உலை வைத்து கட்டாய விடுமுறை கொடுத்தால் அவன் இந்த உலகில் வாழ்வதா? அல்லது சாவதா? அதிலும் தொழிற்சாலைக்கு இன்று அரசின் மின்வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விட்டது. என்ன தெரியுமா? வாரம் ஒரு நாள் உங்களுக்கான விடுமுறையில் கண்டிப்பாக விடுமுறை அளித்தே தீர வேண்டும். அதே போல இன்னும் ஒரு நாள் அரசு வழங்கும் "மின்விடுமுறையும்" கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். உங்கள் தொழிற்சாலையில் 100 ஹெச் பி மோட்டார் இருந்தால் அந்த "மின்விடுமுறை நாளில்" பத்து சதம் மட்டுமே பயன் படுத்த வேண்டும். (அதாவது மோட்டார் இயக்காமல் சும்மா லைட், ஃபேன் , டிவின்னு போட்டு கிட்டு உட்காந்து இருக்கலாம்) அதை மீறி இயக்கினால் அபராதம் மற்றும் இரண்டு நாட்கள் முழு மின்வெட்டு (இது முதல் முறைக்கான அபராதம்) அடுத்த முறை கண்டுபிடிக்கப்பட்டால் இன்னும் அதிகம்... இப்படியாக....

ஒரு நூறு ஹெச் பி இருக்கும் தொழிற்சாலைக்கு ஒரு நாளைக்கு ஆகும் "உற்பத்தி" மதிப்பு சராசரியாக பத்து லட்சம் ரூபாய் எனில் அதற்கு வரியாக 5 சதம் முதல் 14.5 சதம் வரை அரசுக்கு வரும். இது ஒரு சிறுதொழில் நிறுவனத்துக்கான மதிப்பீடு மட்டுமே. ஒட்டு மொத்தமாக நமது அரசுக்கு ஏற்படும் நஷ்டம் என கணக்கிட்டு பிரம்மித்து கொள்ளுங்கள்.

ஆக விடுமுறை கொடுக்கப்பட வேண்டிய மாணவர்களுக்கு கட்டாய ஓவர் டைம். ஓவர் டைம் கொடுக்கப்பட வேண்டிய தொழிற்சாலைக்கு கட்டாய விடுமுறை.... ஒ இதற்கு பெயர் தான் "புரட்சி"யோ????
THANKS:
 http://abiappa.blogspot.in/2012/02/blog-post_26.html

சனி, பிப்ரவரி 25, 2012

தமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்

>> Feb 13, 2012


இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் பெரும்பாலும் இணையத்தில் தான் படிக்கின்ற மாதிரி இருக்கிறது. அதனால் இணையம் இருப்பின் மட்டுமே பார்த்துக் கொள்ளும் படி இருந்தது. அந்தக்குறையைப் போக்கும் வகையில் குரான் நூலானது தமிழிலும் பயன்படுத்துகிற வகையில் சிறப்பாக மென்பொருள் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் குரானை உங்கள் கணிணியிலேயே வைத்துப் படிக்கலாம். பயன்படுத்தலாம். Zekr என்ற இந்த மென்பொருள் நேர்த்தியான வடிவமைப்புடன் எளிதாகப் பயன்படுத்தும் படியும் இருக்கிறது.

இந்த மென்பொருளின் மூலம் குரானை எளிதாகப் படிக்கலாம். சூராக்கள் (அத்தியாயங்கள்), ஆயத்துகள் வழியாக குறிப்பிட்ட வசனத்தைத் தேடலாம். சுராக்கள், ஆயத்துகளை முன்னோக்கி பின்னோக்கி செல்லலாம். குறிப்பிட்ட பக்கங்கள் வழியாகவும் தேடலாம். பிடித்த வசனங்களை புக்மார்க் செய்து கொள்ளலாம். மேலும் அனைத்து வசனங்களையும் ஆடியோ வடிவில் கேட்க முடியும். குரானை பல மொழிகளில் படிக்கவும் முடியும். மேலும் இந்த மென்பொருளை முற்றிலும் தமிழ் உள்பட சில மொழிகளில் பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியில் சென்று தரவிறக்கவும்.
http://zekr.org/quran/
இந்த மென்பொருளைப் பயன்படுத்த Java Runtime Environment தேவைப்படும். இல்லாதவர்கள் கீழே சென்று தரவிறக்குங்கள்.
http://www.filehippo.com/download_jre_32/

இந்த மென்பொருளில் இயல்பாக ஆங்கிலம் மற்றும் குறிப்பிட்ட மொழிகளில் குரானைப் படிப்பதாக இருக்கிறது. உங்களுக்கு தமிழ் மற்றும் பல மொழிகள் வேண்டுமானால் கீழே சென்று தரவிறக்க வேண்டும். அதாவது இவையெல்லாம் குரானை Translation செய்து காட்டும்.

தமிழ் மொழிக் கோப்பு - http://tanzil.net/trans/ta.tamil.trans.zip
பிற மொழிகளுக்கு - http://zekr.org/resources.html

பின்னர் இந்த மென்பொருளில் Tools->Add->Translation என்பதில் சென்று தரவிறக்கிய கோப்பைத் தேர்வு செய்தால் நீங்கள் தமிழில் குரானைப் படிக்கலாம். View->Layout இல் சென்று Mixed என்று வைத்துக் கொண்டால் மென்பொருளில் உருது மற்றும் தமிழில் குரானை எளிதாகப் படிக்கலாம்.
Tamil User Interface

இதன் இடைமுகத்தையும் தமிழிலிலேயே காணவும் பயன்படுத்தவும் முடியும். இதற்கு Tools மெனுவில் options செல்லவும். அதில் language என்பதில் தமிழைத் தேர்வு செய்தால் தமிழிலேயே இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருள் இஸ்லாமிய நண்பர்கள் மட்டுமின்றி குரானைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாகப் பயன்படுத்திப் பார்க்க வேண்டிய மென்பொருள்.


THANKS:
http://ponmalars.blogspot.in/2012/02/blog-post.html 

திங்கள், பிப்ரவரி 20, 2012


கை, கால்கள் இல்லாமல் வாழ்வில் முன்னுக்கு வந்து ஹவாய் தீவில் ஹனிமூனைக் கொண்டாடிய நபர்! 


கைகள் மற்றும் கால்களே இல்லாமல் பிறந்து உலகின் மிகச் சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளனாக வலம் வரும் Nick Vujicic பற்றி உங்களில் பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.
ஆம், உண்மையில் ஒரு ஹீரோ, ரோல் மொடல் இவர் தான். இவர் திருமணத்தின் பின்னர் ஹவாய் தீவில் உள்ள கடற்கரையில் மனைவியோடு சந்தோசமாக பொழுதைப் போக்கும் காட்சிகளே இவை.
Tetra-amelia என்ற அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் பிறந்த Nick Vujicic தற்போது தனது காதல் மனைவியுடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருக்ன்றார்.
சிறுவனாக இருக்கும் போது மாபெரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட Nick Vujicic இன்று உலகெங்கும் அதிகம் விற்கப்படும் புத்தக எழுத்தாளர்.
கைகள் கால்கள் இருக்கும் மனிதர்கள் செய்யும் எல்லாக் காரியங்களையும் இவரும் செய்கின்றார்.
எழுதுதல், ரைப் பண்ணுதல், ரம்ஸ் வாசித்தல், பல் துலக்கல் என்று எல்லா அன்றாட செயற்பாடுகளையும் தானே செய்கின்றார்.
29 வயதான Nick Vujicic இதுவரை 25 நாடுகளுக்குச் சென்று 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களைச் சந்தித்து தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாகப் பேசியுள்ளார்.




 


 THANKS:

http://tamilcnn.com/moreartical.php?newsid=12410&cat=world&sel=current&subcat=22&utm

உடல் நலம் பற்றிய அனைத்து வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.

மனிதனாக பிறந்த அனைவருக்குமே உடல் நலம் பற்றிய ஒரு விழிப்புணர்வு  இருக்கும் ஆனால் பல நேரங்களில் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு கூட்டங்களுக்கு சென்று பங்கேற்க நேரம் இருக்காது இப்படி பல விதமான காரணங்களினால் உடல் நலம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம் நமக்கு ஆன்லைன் மூலம் உடல் நலம் பற்றிய அனைத்து தகவல்களையும் கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான்  இந்தப்பதிவு.
படம் 1
அடிக்கடி தலைவலி வருகிறது என்ன காரணம் என்று தெரியவில்லை இப்படி நமக்கு எழும் பல விதமான காரணங்களுக்கு பதில்
அளிப்பதற்காகவும் உடல் நலம் மேல் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் வீடியோவுடன் பதில் சொல்ல ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி : http://icyou.com
இத்தளத்திற்கு சென்று நாம் உடல் நலனில் நமக்கு எந்தப்பிரச்சினை தொடர்பாக வீடியோக்களை பார்க்க வேண்டுமோ அதை Search என்று இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து தேடலாம், அடுத்து வரும் திரையில் நாம் தேடிய நோய் சம்பந்தப்பட்ட அனைத்து வீடியோக்களும் வரும் மருத்துவரின் பதிலில் ஆரம்பித்து நோயாளியின் நேரடி அனுபவம் வரை அனைத்தையும் தெளிவாக காட்டுகிறது. பல்லில் இரத்தம் வருகிறது என்பதில் தொடங்கி கேன்சர் வரை அனைத்துக்குமான தகவல்களும் வீடியோவுடன் கிடைக்கிறது.இதைத்தவிர உடல் நலம் பற்றிய ஒவ்வொரு  துறை சார்ந்த வீடியோக்களும் அழகாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.  மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் நம்மவர்களுக்கும் உடல் நலம் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
நம் உடல் வியாதிகளுக்கு தீர்வு சொல்ல இலவச மருத்துவர் இருக்கிறார்.
மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள்.
தாய்மார்களுக்கு உதவும் கர்ப்ப கால அறிவுரைகளை துல்லியமாக கொடுக்கும் மருத்துவ காலண்டர்.
ஒவ்வொரு குறியீட்டுக்கும் (Symbol) அதன் அர்த்தத்தை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

THANKS:
http://winmani.wordpress.com/2012/02/12/icyou/ 

சனி, பிப்ரவரி 18, 2012

கணினி மற்றும் இண்டநெட்-ல் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு தெளிவான விளக்கம் கொடுக்க ஒரு தளம் உள்ளது.

டிக்ஸ்னரியில் சென்று தேடினாலும் சில கணினியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் கிடைக்காது, பல தளங்களில் சென்று தேடிதான் விளக்கம் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை மாறி தற்போது கணினி மற்றும் இணையத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்வதற்காக ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
கணினி தொடர்பான விளக்கங்களை தெரிந்து கொள்வதற்காக ஒரு டிக்ஸ்னரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் கணினி மற்றும் இணைய கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி:http://www.webopedia.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search என்று இருக்கும் கட்டத்திற்குள் என்ன வார்த்தைக்கான விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு  நாம் தேடிய கணினி சம்பந்தமான வார்த்தைகளுக்கான விளக்கம் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது. கணினி சம்பந்தப்பட்ட ஒரு முழுமையான டிக்ஸ்னரி இல்லையே என்று கவலையை இத்தளம் போக்கியுள்ளது. குழந்தைகள் முதல் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
அனைவருக்கும் உதவும் விரிவான அதிகவேக லைவ் ஆங்கில டிக்ஸ்னரி
ஆன்லைன்-ல் வீடியோ டிக்ஸ்னரி புதுமையிலும் புதுமை
அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி
கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல புதுமைகளுடன்
THANKS:
http://winmani.wordpress.com/2012/02/13/webopedia/
 


பிள்ளை-வளர்ப்பு“பனிரெண்டு வயது சிறுவன் அப்பாவைக் கன்னத்தில் அறைந்து காயம்” என்ற செய்தியை உங்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா? அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் எங்கள் பகுதியிலிருக்கும் அந்த அப்பா. அவர் மாதம் 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர். அவரது மனைவியும் ஒரு அரசு ஊழியர்.
இப்படிப்பட்ட பின்னணியில் இருப்பவர்கள் ஒரே செல்ல மகனை சாதாரண லெவலுக்கு வளர்க்க விரும்புவார்களா? பையனுக்கு காலையில் கராத்தே வகுப்பு, பிறகு கான்வென்ட் பள்ளிக்கூடம். மாலை ஸ்பெசல் டியூசன், பிறகு கம்யூட்டர் கிளாஸ் இப்படி 24 மணிநேரமும் பையனை கடிகார முன்னாய் நகர்த்திக் கொண்டிருப்பவர் அந்த அரசு ஊழியர். ஒரு நாள் மாலை நேரம் பையன் தெருவில் இறங்கி விளையாடப் போய்விட்டான்.
பையனைத் தேடிப்பார்த்த தந்தைக்கு தலைக்கேறியது கோபம். “வீட்லதான் விளையாட கம்யூட்டர் கேம்ஸ் வாங்கித் தந்துருக்கேன்ல. டியூசன் போய்விட்டு வந்து அதுல விளையாடறது. காச கொட்டி சேர்த்துவிட்டா கம்யூட்டர் கிளாஸ் போகாம, கண்ட கண்ட பசங்களோட சேர்ந்துகிட்டு தட்டான் புடிக்கவா போற? போடா கிளாசுக்கு” என்று அவர் கைய ஓங்கி அதட்டியதுதான் தாமதம் இறுகிய முகத்துடன் வீடு திரும்பிய பையன் ஓங்கி ஒரு அறைவிட்டான் அப்பாவை. அதுவும் வாசல்படியிலேயே பதிலுக்கு விளாசித் தள்ளிவிட்டாலும் அந்த அதிர்ச்சியிலிர்ந்து அவரால் இன்னும் மீள முடியவில்லை. இது சேருவார் தோஷமா இல்லை செய்வினையா என்று குழம்பித் தவித்தார்.
ஆம்! உண்மையில் இது செய்வினைதான் அதாவது ”உன்னைப்பார் உலகத்தை பார்க்காதே.போட்டி போட்டு முன்னேறு” என்று முதலாளித்துவ வாழ்க்கை முறையின் ஒரு வித செய்வினைதான் என்பதை கொஞ்சம் குழந்தைகள் வளர்ப்பு சமாச்சாரத்தின் உள்ளேபோய் பார்த்தால் ஒத்துக்கொள்ளத் தோன்றும்.
உலகத்தை நெருங்கி, நெருங்கி – அது என்ன? இது என்ன? ஏன் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மாதிரி இருக்கின்றன, இயங்குகின்றன என்று – அறியத்துடிக்கும் ஆர்வம் ததும்பும் பிள்ளைப் பருவத்திற்கும், ஒண்ணாந் தேதி சம்பளத்தையும் ஒவ்வொரு நுகர்பொருளும் வாங்குவதற்குவொரு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் மட்டும் மனதில் வைத்துக் கொண்டு  “அந்த உலகத்தை அறியத் துடிக்கும்” அரசு ஊழியர்க்கும் உள்ள இயல்பான முரண்பாட்டின் விளைவே மேற்சொன்ன சம்பவம்.
கொம்பு சீவுவனையே குத்திப்பதம் பார்த்துவிடும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காளையைப்போல போட்டி உலகின் கட்டுக் காளையைப்போல போட்டி உலகின் அவஸ்தை தாங்காமல் குழந்தை வடிவத்தில் இருக்கும் மனிதன். முதலாளிய வாழ்க்கை முறையின் செய்வினைக்குப் பதிலை அப்பாவின் முகத்தில் திருப்பித்தரும் அதியமும் சில நேரங்களில் நடக்கத் தான் செய்யும்.
ஒரு ஈடுக்கு எத்தனைக் குஞ்சு பொறிக்கும், அதற்கு என்ன தீவனத்தை போடலாம் என்ற முதலாளியின் கணக்கைப்போல போட்டி மயமான இந்த உலகில் தமது பிள்ளைகள் போணியாக வேண்டுமென்றால் கம்யூட்டர், கேம்ஸ், கராத்தே, வாய்ப்பாட்டு, கருவி இசை என்று எல்லாத் துறைகளிலும் ஒண்ணாம் நம்பரா இருந்தால்தான் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ முடியும் என்பது உயர் நடுத்தர வர்க்கத்தின் கருத்து.
இப்படி குழந்தைகளுக்கு வகை வகையான தீவனம் போட வசதி இல்லாவிட்டாலும் அவரவர் நிலைமைக்கு ஏற்றவாறு பிள்ளைகளை அடைகாக்க முயற்ச்சிக்கும் பண்பாடு கோழி செல்லைப் போல பெற்றோர்களின் மனதில் அரித்துக் கொண்டிருக்கிறது.
கோழி வியாபாரிக்காவது ஒரு ஈடுபொய்த்து விட்டாலும் அடுத்த ஈடுவரைக்கும் காத்திருக்கும் பொறுமையு நிதானமும் இருக்கிறது. இப்படி குறி வைத்து வளர்க்கும் பெற்றோர்களுக்கோ தன்னுடைய குஞ்சுகள் ஒரே ஈடில் கோழிகளாக சிறகடிக்க வேண்டும் என்ற அவசரமும் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்றால் பிள்ளைகள் மேல் ஆத்திரமும் வருகிறது.
ஆனால் குழந்தைகள் உலகமோ இதற்கு நேர்மாறானது. இந்த உலகத்தை உற்று பார்த்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற தேவையிலிருந்து அவர்கள் பார்வை தொடங்கவில்லை. இந்த உலகில் என்ன இருக்கிறது என்ற தேடலிலிருந்து அவர்கள் பார்க்கத் தொடங்குகின்றார்கள்.
முடியவில்லாத மலைத் தொடர்கள், ஓய்வில்லாத அலைகளின் ஓட்டகம், இலைகளின் பின்னணியை ஆராயத் தொடங்குகிறது அவர்கள் மனம். மேகத்திற்குள் மறைந்த  நிலவு வெளிவரும் சோற்றையும் தட்டிவிட்டுவிட்டு நிலவை ஆராய்கிறது பிள்ளைமனம். இப்படி இயற்கையை மட்டுமல்ல மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பொருள்கள், அவற்றின் இயக்கம். சிலர் கையில் அவைகள் இருப்பதும், பலரிடம் இல்லாததும், கட்டிடங்கள் பக்கத்திலேயே குடிசைகள் இருப்பதும் ஏன்,ஏன் என்ற கேள்விகள் பிள்ளைப்பருவத்தின் ஆர்வத்தை அள்ளி வருகின்றன.
தனித்தனியாக காணக் கிடக்கும் இந்த காட்சிகள் குறித்த புரிதலை ஒருங்கிணைந்த முறையில் பெறுவதுதான் குழந்தைகளின் முதல் தேவை. ஆனால் அனைத்தையும் அழித்து தான்மட்டும் வாழத்துடிக்கும் முதலாளித்துவமோ பல சிறு தொழில்களை அழித்தால்தான் பெரிய பன்னாட்டுக் கம்பெனி வாழ முடியும் என்ற தனது பொருளாதார கொள்கையையே, குடும்பத்தின் இலக்கணமாகக் கொண்டுவந்து “ உன்னைப்பார் உலகைப் பார்க்காதே” “போட்டி போட்டு முன்னேறு! சகமனிதர்கள் மீதான போட்டியில் வெற்றி பெறு. அதுவே உனது வாழ்க்கை லட்சியம். கனவு” என குட்டி இளவரசர்களுக்கு முடிசூட்டி விடுகிறது.
உயிர்களின் தோற்றத்தையும், பரிணாமத்தையும் இடையறாது ஆராய்ந்து உழைப்பைச் செலுத்தி டார்வின் பரிணாமக் கொள்கை, தனிமனித முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சி அல்ல.
ஆனால் (முதலாளித்துவம்) சுயநலமனம் கொண்ட குடும்பங்களோ குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று கண்டுபிடித்துவிட்டால் குடும்பம் நடத்த முடியுமா? எங்களுக்கு டார்வினைப் போல ஆராய்ச்சி மனம் படைத்த ஒரு மனிதன் தேவையில்லை. கோடீஸ்வரன் முத்திரையைச் சரியாகப் பயன்படுத்தி கட்டங்கட்டமாகத் தாவி வெற்றி பெறும் ஒரு குரங்கு போதும் என்கின்றனர். அதாவது சமுதாயத்தை ஒண்ணாம் நம்பராக்கும் அறிவு தேவையில்லை. இந்த சமுதாயத்தில் நான் ஒண்ணாம் நம்பராகும் வழியைச் சொல் என்கிறது நடுத்தர வர்க்கம்.
குழந்தைகளின் ஆர்வத்தைத் தட்டி எழுப்புவது, அவர்கள் மனம் விரும்பிய விளையாட்டை பழக அனுமதிப்பது, முக்கியமாக சமுதாய உறுப்பினர்களான சக மனிதர்களுடன் கூடி இயங்க விடுவது என்ற கருத்தெல்லாம் இல்லாமல், 2500 மைல்களுக்கு அப்பால் குறி வைத்து ஏவக்கூடிய ஒரு ஏவுகனையைப் போல பெற்றோர்கள் அந்தஸ்தான வாழ்க்கைதரக் கூடிய ஒரு கனவுப் பிரதேசத்துக்கு பிள்ளைகளை ஏவிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நடக்கிறது.
இதனால்தான் பிள்ளைகள் கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகியவற்றை நோக்கில் பயன்படுத்தும்போது “இது உருப்படறதுக்கு வழியா!” என்று அலறித் துடிக்கிறார்கள். இது குழந்தைகளிடமிருந்து குழந்தைத்தனத்தைப் பறித்தெடுக்கும் பலாத்தார நடவடிக்கையாக மேலோட்டமாகப் பார்த்தால் தெரியும். கொஞ்சம் உள்ளே நுழைந்து பார்த்தால் குழந்தைகளாய் இருக்கும் மனிதர்களிடம் முதலாளித்துவத்திற்கு தேவையான வளர்ப்பும், சுரண்டலும் ஆரம்பமாகி விட்டது என்ற அபாயம் புரியும்.
”சரக்கு உற்பத்தியின் போட்டா போட்டியில் கல்வி,பண்பாடு, மனிதர்களையும் கூட முதலாளித்துவம் ஒரு சரக்காக மாற்றி விடுகிறது” என்று கார்ல் மார்க்ஸ் இந்த அபாயத்தைக் கோடிட்டுக் காண்பித்தார். இரண்டு வழிகளில் இந்த அபாயத்தை முதலாளித்துவம் அரங்கேற்றி வருகிறது. ஒன்று சாதாரண உழைக்கும் மக்களின் கைகளிலிருந்து கைத்தொழில் சிறு தொழில்களைப் பிடுங்கி எறித்துவிட்டு அவர்கள் வீட்டுப் பிள்ளைகளின் பிள்ளைப் பருவக் கனவுகளை அழித்து அவர்களையும் தனது சுரண்டலுக்கு குழந்தைப் பணியாளர்களாய் மாற்றிவிடுகிறது.
ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேரம் உணவு விடுதிகளில் மேசை துடைக்கும் சிறுவனின் உள்ளத்திலிருந்து அவனுக்கு விருப்பமான படைப்புணர்ச்சியை பிள்ளைப் பருவத்திலேயே துடைத்தெறிந்து விடுகிறது முதலாளித்துத்துவச் சமுதாயம் இன்னொருபுறம் மேட்டிக்குடி, நடுத்தர வர்க்க குழந்தைகளிடம் இந்தா பிடி சாப்ட்வேர், மேல்படி ஜாவா, ஈகாம் இப்பொழுதே, நல்ல எதிர் காலத்துக்கான திறமையை வளர்த்துக் கொள் என்று அவர்களுடைய பிள்ளைப் பருவத்தையும் தங்கள் சுரண்டலுக்கான அச்சாரமாக மாற்றிக் கொள்கிறது. இதை கோட்பாடாகக் கேட்பதற்கு மிகையாகத் தோன்றலாம். குடும்பங்களின் நடைமுறையைக் கவனித்தால் பெற்றோர்கள் தமது
பிள்ளைகளை ஒரு நல்ல ‘பொசிசனுக்கு’க் கொண்டுவர அவர்களை வளரும் சரக்காக வளர்த்தெடுக்கும் முறைகளைக் கவனித்தால் இந்த உண்மை புரியும்.
பிள்ளைகளிடம் குழந்தைத்தனம் பறிக்கப்படுகிறது. கல்விச் சுமை ஏற்றப்படுகிறது, குழந்தை  உழைப்பு தடுக்கப்பட வேண்டும் என்று கண்டிக்கும் அறிவாளிகள் கூட இவற்றுக்குக் காரணமான முதலாளித்துவச் சுரண்டல் சமூக அமைப்பைத் தூக்கியெறியந்தாலொழிய இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்ற உண்மையை ஊருக்குச் சொல்வதில்லை. குழந்தைப் பருவத்தின் தேடல்களைத் தொலைத்துவிட்டு குழந்தையும் சேர்ந்து உழைத்தால் தான் குடும்பத்தில் சோறாக்க முடியும் என்ற சமூக நிலைமையைப் பாதுகாக்கும் அரசை எதிர்த்துப் போராடாமல் ஒரு வேளைச் சோற்றுக்கு வயிற்றுப் பிள்ளையையும் தூக்கிக் கொண்டு தீச்குச்சி அடுக்கப் போகும் பெண்களிடம் போய் உங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பாதீர்கள் குழந்தைகளை குழந்தைகளாய் வாழ விடுங்கள் என்று அறிவொளி இயக்கம் நடத்துகிறார்கள் இந்த அறிவாளிகள்.
மாற்றாக மக்கள் சீனத்திலும், சோசலிச சோவியத் ரசியாவிலும் தனியுடைமைச் சுரண்டலை ஒழித்துக் கட்டியதன் மூலம் பிள்ளைகளுடைய கல்வி வளர்ப்பு அனைத்தையும் அரசின் கடமையென உறுதி செய்யப்பட்டதுடன் பிள்ளைகளின் தனிப்பட்ட திறமைகள் இந்தச் சமுதாயத்தையே முன்னேற்றிக் காட்டின. சகமனிதர்களைத் தோற்கடித்து அவனை அழித்தாவது தான் முன்னேற வேண்டும் என்ற முதலாளித்துவ வளர்ப்பு முறையினால் தனது இச்சைக்கு எதிராக இருக்கும் பெற்றோரைக் கூடத் தீர்த்துவிடும் குழந்தைகளை முதலாளித்துவம் உருவாக்குகிறது.
ஆனால் நாட்டு மக்களின் நலனுக்காக இட்லரை எதிர்த்த போரில் ரசியச் சிறுவர்கள் தன்னிகரில்லாமல் உதவிய ‘த இவான்’ நாவலில் பார்க்க முடிகிறது. இப்படி சமூக நோக்கில் குழந்தை வளர்க்கப்பட  வேண்டும் என்று சொன்னால் “எங்கள் பிள்ளைகளை எங்கள் விருப்பப்படி வளர்க்கும் உரிமைகூட எங்களுக்குக் கிடையாதா? என்று அறிக்கையில் பெற்றோர்களைப் பார்த்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இப்படிப் பேசுகிறது.
“குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரால் சுரண்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்றா எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? நாங்கள் இந்தக் குற்றத்தைப் புரிகிறவர்கள்தான். ஒப்புக்கொள்கிறோம்…. உங்களுடைய கல்வி இருக்கிறதே, அதுமட்டும் என்னவாம்? அதுவும் சமூக முறையிலான கல்விதானே?….. கல்வியில் சமுதாயம் தலையிடுதல் என்பது கம்யூனிஸ்டுகளுடைய கண்டுபிடிப்பு அல்ல; இந்தத் தலையீட்டின் இயல்பினை மாற்றவும், ஆளும் வர்க்கத்தினுடைய செல்வாக்கிலிருந்து கல்வியை விடுவிக்கவுமே கம்யூனிஸ்டுகள் முயலுகிறார்கள்…”
“குடும்பம், கல்வி என்றும், பெற்றோருகும் குழந்தைக்குமுள்ள புனித உறவு என்றும் பேசப்படும் முதலாளித்துவப் பகட்டுப் பேச்சுகள் மேலும் மேலும் அருவெறுக்கத் தக்கனவாகி வருகின்றன. ஏனெனில் நவீனத் தொழில்துறையின் செயலால் பாட்டாளிகளிடையே குடும்பப் பந்தங்கள் மேலும் மேலும் துண்டிக்கப்பட்டு, பாட்டாளிகளது குழந்தைகள் சாதாரண வாணிபச் சரக்குகளாகவும் உழைப்புக் கருவிகளாகவும் மாற்றப்படுகிறார்கள்.”
இப்பொழுது இந்தக் கட்டுரைகயின் துவக்கத்தில் சொன்ன சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். தனது குழந்தைப் பருவத்தைச் சுரண்டுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல் ஆளாக்கிய அப்பாவின் கன்னத்திலேயே அறைந்து விட்டான் அந்தச் சிறுவன். சமுதாயத்தையே இந்த சுரண்டல் நிலைமைக்கு ஆளாக்கிய அப்பனான முதலாளித்துவத்தின் கன்னத்தில் நீங்கள் அறையப் போவது எப்போது?
___________________________________________________
 THANKS:

-துரை. சண்முகம், புதிய கலாச்சாரம் மே,2001
http://www.vinavu.com/2012/02/18/growing-up-a-kid/ 


வியாழன், பிப்ரவரி 16, 2012

'Earthflight' இல் பறக்கலாம் வாங்க...!



சமீபத்தில் பிபிசியில்  நான் பார்த்து மிகவும் ரசித்து வியந்தத் தொடர்க் காணொளி... 'Earthflight' என்ற அருமையான ஆவணப்படம். ஜான் டவ்னர் [John Downer] தயாரிப்பில், நடிகர் டேவிட் டெனன்ட் [David Tennant] வர்ணனையில், பிபிசி நிறுவனம் வழங்கிய உள்ளத்தைக் கொள்ளைக்கொள்ளும் விருந்தை நாம் அனைவரும் பகிந்துக்கொள்ளலாம்!
பொதுவாக நம் அனைவருக்கும் சிறுவயது முதல் ஒருப் பறவையைப்போல் பறக்கவேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருந்திருக்கவே வேண்டும். வழக்கம்போல,பிபிசி இந்தப் படத்தின் மூலம் நம்மை ஒரு பறவையின் பார்வையோடு, பல நாடுகளையும், கண்டங்களையும், பறவைகளோடு பறவையாக நாம் பறந்துக் கடக்கப்பன்னியுள்ளது என்றால் அது மிகையல்ல !

ஆறு பகுதிகளாக உள்ள இந்தத் தொடர்க்காணொளி வட அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியா & ஆஸ்திரேலியா போன்ற தலைப்புகளில், அந்தந்தக் கண்டங்களைச் சேர்ந்தப் பறவைகள் எப்படி கண்டம் விட்டு கண்டம் புலம்பெயர்கின்றன என்பதை, நவீன தொழில்நுட்ப கேமரா மற்றும் கருவிகளைக்கொண்டு, ஏதோ நாமும் அவைகளோடு பறந்துச் செல்வதைப் போன்ற பிரம்மையை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்தப்படங்களைப் பார்த்தால் பறவைகளைப்பற்றிய நம்முடைய எண்ணமும் மரியாதையும் நிச்சயம் அதிகரிக்கும் என்பது உறுதி... அவைகள் நம் தோட்டத்தில் இருந்தாலும் சரி... நம் டைனிங் டேபிள் மீது இருந்தாலும் சரி!


ஒன்றுவிடாமல் பாருங்க... கடைசியில் வரும் காணொளியில், இந்தத் தொடரை எடுக்க எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள் என்றும்  இந்த காணொளிகளின்  பின்னே எவ்வளவு உழைப்பு உள்ளது என்பதையும் நாம் அறிய முடியும். Hats off to you guys!  Thank you BBC...!  


முதலில் ட்ரைலர்...



வட அமெரிக்கா...






ஆப்ரிக்கா...





ஐரோப்பா...





தென் அமெரிக்கா...





ஆசியா & ஆஸ்திரேலியா...





காட்சிகளின் பின்னே...



 

இவர்கள் இதற்குமுன் தயாரித்த 'Polar Bear - Spy on the Ice' படப்பிடிப்பில் நடந்த தமாஷ்!