இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 2
டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி
எந்த ஒரு துறையாய் இருந்தாலும் அதன் அடிப்படை விதிகளையும், formet
method-களையும் புரிந்து கொண்டோமானால் அந்த துறையில் சும்மா புகுந்து
விளையாடலாம். CNC field-ல் அடிப்படை விஷயங்கள் மிக எளிமையானவையே. அந்த
அடிப்படையை உங்களுக்கு புரிய வைப்பதே இந்த கட்டுரை தொடரின் நோக்கம் ஆகும்.
இன்றைய தேதியில் CNC கற்றுத் தருவதற்கான institutes ஒவொரு ஊரிலும்
மிகுதியாகி விட்டது. அங்கே பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலும் அனுபவம்
இல்லாதவர்களே. என்னடா, இது அனுபவம் இல்லாதவர்கள் எப்படி CNC பற்றி சொல்லித்
தர ஆசிரியராக முடியும் என நினைக்கிறீர்களா?
CNC basic formet களை அவர்கள் புரிந்து கொண்டதாலையே அவர்களால் ஆசிரியராக இருக்க முடிகிறது. அவர்களிடம் ஏதேனும் சந்தேகம் கேட்டுப்
பாருங்களேன். நாம ப்ளாக்-ல் template கமெண்ட் போடுவோமே, அதே போல அவர்கள்
சில template விளக்கங்கள் வைத்திருப்பார்கள். எப்பிடி சந்தேகம்
கேட்டாலும் அவர்களிடமிருந்து அந்த template பதிலை தவிர வேற விளக்கங்களை
எதிர் பார்க்க முடியாது. Template விளக்கம் வைத்திருப்பதும் நல்ல விஷயம்
தான். அந்த விளக்கத்தை பலமுறை சொல்லிக் கொடுத்து நன்கு பழகி இருப்பார்கள் .
ஆனால் கற்றலில் ஆர்வம் இருக்கிற மாணவனுக்கு அந்த விளக்கம் போதாது. அனுபவம்
சார்ந்த விளக்கமாக இருக்க வேண்டும். அப்போது தான் அவன் தேடலுக்கான
விளக்கம் அவனுக்கு கிடைக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அந்த துறையில் ஆர்வம் இருந்தால்
மட்டுமே சாத்தியம்.
எனக்கும் சில காலம் ஒரு institute இல் பணிபுரிந்த அனுபவம் இருப்பதால்
எவ்வாறு விளக்கம் சொன்னால் உங்களுக்கு புரியும் என்பதை நன்றாக அறிவேன்.
இன்னும் CNC-யை பற்றி சொல்லாமல் சும்மா கதை பேசிக்கொண்டு இருக்கிறேன் என
நினைகிறீர்களா?
சரி நண்பர்களே, CNC-யை பற்றி ஒரு வீடியோ பகிர்வு மூலம் ஆரம்பிக்கிறேன். CNC Machine மூலம் என்னென்ன செய்யலாம் என பாருங்கள்.
இத்தொடர் இன்னும் வாராவாரம் வர இருக்கிறது. CNC BASIC பற்றிய உங்கள் சந்தேகங்களை thaiprakash1@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக