வெள்ளி, ஜனவரி 06, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

தமிழில் எழுதியதை வாசித்துக் காட்டும் ஒரு அற்புதமான இலவச மென்பொருள் !! 

http://softwareshops.blogspot.com/2012/01/text-to-audio-converting-website-for.html

Text to Audio Converter  for Language Tamil  
வணக்கம் அன்பு நெஞ்சங்களே..! வலைப்பக்கம் வந்து நாட்கள் பல ஆகிவிட்டது. இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதியில் எதுவும் சாத்தியமே..! அந்த வகையில் நாம் இன்று பார்க்கப்போவது ஒரு அருமையான தளத்தைப் பற்றி. அதில் உள்ள ஒரு பயன்மிக்க மென்பொருளைப் பற்றியதுதான் இந்த பதிவு. ஆம். நண்பர்களே.. நாம் ஆங்கிலத்தில் எழுதியதை ஒலி வடிவமாக மாற்றித்தரும் மென்பொருள்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆங்கிலத்தில் தட்டச்சிட்டதை வாசிக்க செய்யும் இத்தகைய மென்பொருள்களை நம்மில் ஒரு சிலர் பயன்படுத்தியும் இருக்கலாம்.


அதுபோலவே நம் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழில் தட்டச்சிட்டதை வாசித்துக்காட்டுகிறது இந்த மென்பொருள். இந்த மென்பொருளை பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் என்பவர் உருவாக்கி இருக்கிறார். 

மேற்காணும் இணைப்பைச்சொடுக்கி இந்த தளத்திற்கு செல்லவும். தமிழில் யுனிக்கோட் முறையில் எழுதப்பட்ட வரிகளை, கட்டுரைகளை, இங்கு இருக்கும் பெட்டியில் உள்ளிட்டு Submit என்பதை சொடுக்கினால் போதும். (அல்லது இணையத்தில் உள்ள ஏதேனும் தங்களுக்கு விருப்பப்பட்ட தமிழ் தளத்தில் உள்ள கட்டுரைகளை காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம்.) 



Submit  கொடுத்ததும் உடனே அடுத்த பக்கத்திற்கு போகும்.

அங்கு இவ்வாறான ஒரு வாக்கியங்கள் இருக்கும். 


அதில் click here என்பதை சொடுக்கி நீங்கள் உள்ளிட்ட கட்டுரைகள் அல்லது வார்த்தைகளின் ஒலிவடிவ கோப்பை தரவிறக்கிக் கொள்ளலாம். 

இவ்வாறு நான் இந்த தளத்தின் மூலம் உருவாக்கிய ஒலிவடிவ கோப்பு.. கேட்டுப் பாருங்களேன்..!!
நம் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழில் தட்டச்சிட்டதை வாசித்துக்காட்டுகிறது இந்த மென்பொருள். இந்த மென்பொருளை பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் என்பவர் உருவாக்கி இருக்கிறார். இந்த வரிகளைத்தான் கீழே கேட்கப்போகிறீர்கள்.







என்ன நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தமிழில் உள்ளிட்ட வார்த்தைகளை ஒலிவடிவில் உங்களால் கேட்க முடிந்ததா? உங்கள் எண்ணங்களை கருத்துப் பெட்டியினூடே எழுத்துங்கள்.. காத்திருக்கிறேன்.  பதிவு பிடித்திருந்தால் உங்களுக்குப் பிடித்த சமூதளங்களில் பகிர்ந்துகொள்ளுங்கள்..உங்கள் நண்பர்களையும் பதிவு சென்றடையட்டும். நன்றி நண்பர்களே..!!!

கருத்துகள் இல்லை: