புதன், ஜனவரி 11, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

டப்பர்வேர் பாத்து ஓடாதீங்க!! - 2

டப்பர்வேர் பொருட்கள் பத்தி தெரியும். ஆனா அதை வாங்கனும்னா
எனக்கு பயம். விலையாலதான். ஆனாலும் எப்படியோ ஆசைப்பட்டதை
வாங்கி கிச்சனை அழகு செய்யலாம், அதோட பொருட்களும் பத்திரம
இருக்குமேன்னு நான் இலங்கையில் இருந்து இந்தியா வந்த ஒரு
சமயம் சென்னையில் இருக்கும் என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட்
டப்பர்வேர் கன்ஸல்டண்ட் என்பதால அவங்க கிட்ட வேணுங்கறதை
சொல்லியிருந்தேன். சுமார் 5000 ஆச்சு. அதுக்கு ஒரே ஒரு சின்ன
டப்பா கிஃப்டா கொடுத்திருந்தாங்க.!!!!

அது முடிஞ்சு மதுரையில் எங்க சித்தியைப் பாக்க போயிருந்தேன்.
மதுரை அக்ரிணி குடியிருப்பில் சித்தி இருக்காங்க. அங்க நிறைய்ய
டப்பர்வேர் கன்ஸல்டண்ட். அங்க போனதக்கப்புறம்தான் எனக்கு
நிறைய்ய தெரிஞ்சது. எங்க சித்தி மெம்பர் ஆனாங்க. இப்ப எங்க
சித்தி ஒரு டப்பர்வேர் மேனேஜர்.


எங்க சித்தி மெம்பரா சேந்ததற்கப்புறம் தான் எனக்கு பல உண்மைகள்
புரிஞ்சது. MRP ரேட்டில் 24 சதவிகிதம் கன்ஸல்டண்டுக்கு போகும்.
இதைத் தவிர இவ்வளவு பணத்துக்கு ஆர்டர் கொடுத்தா ஆக்டிவிட்டி
கிஃப்ட் ஒண்ணும் கிடைக்கும். இது ஒவ்வொரு வாரத்துக்கும் மாறும்.
உதாரணமா இந்த வாரம் 3000 ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்தா ஆனியன்
கீப்பர் டப்பா ஃப்ரி. இந்த 3000த்தில் கம்பெனிக்கு கொடுக்க வேண்டியது
2660 தான்!!

எனக்குத் தேவையான பொருட்களை சித்திகிட்ட ஆர்டர் செஞ்சு
வெச்சிடுவேன். இல்லை நான் அங்கு போகும் பொழுது வாங்கிக்குவேன்.
சித்திக்கு கிடைக்கும் கன்சல்டண்ட் ரேட்டிலேயே எனக்கு கிடைக்கும்.
சித்திக்கும் டார்கெட் அச்சீவ் செய்ய ஈசியா இருக்கும். எல்லோருக்கும்
இந்த மாதிரி உறவினர்கள் மெம்பரா இருக்க மாட்டாங்கல்ல!! இருந்தாலும்
தனக்கு வரும் லாபத்தை குறைச்சுக்கவும் சிலர் விரும்ப மாட்டாங்க.
அதனால டப்பர்வேர் பொருட்கள் வாங்கணும்னா இந்த மாதிரி செய்யலாம்.

1. சென்ற பதிவுல ராமலக்‌ஷ்மி பின்னூட்டத்துல சொல்லியிருக்கற
மாதிரி அவங்க இஷ்டப்படி பொருட்களை வாங்காம, எனக்கு என்ன
தேவையோ அதை வாங்கிக்கறேன்னு கண்டிப்பா சொல்லணும்.
அவங்க கிட்ட ஃப்ளையர்னு டப்பர்வேர் புத்தகம் இருக்கும். அதை
வாங்கி நமக்குத் தேவையானதை செலக்ட் செய்யலாம்.

2. அதைத் தவிர சில பொருட்கள் ஆஃபரில் வரும். ட்ராபிகல் ட்வின்ஸ்னு
ஒரு டப்பா இருக்கு அது 4 வாங்கினா 1 இலவசம். இந்த மாதிரி
வாங்கும் பொழுது நமக்கும் லாபம். அந்த சமயத்துல என்ன ஆஃபர்
இருக்குன்னு தெரிஞ்சிகிட்டு அது நமக்குத் தேவைன்னா வாங்குவது
புத்திசாலித்தனம்.


3. அவங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கண்டிப்பா பேசுங்க.
அதாவது எம் ஆர் பியில் டிஸ்கவுண்ட் குறைஞ்ச பட்சம் 10 பர்சண்ட்
வேணும்னு சொல்லுங்க. இரண்டாவதா 3000 அதுக்கு மேலன்னு ஒரே
சமயம் ஆர்டர் செய்தா அதுக்கு உண்டான ஆக்டிவிட்டி கிஃப்டும்
எனக்கு வேணும்னு சொல்லுங்க.



4. இன்னொரு வழி நாமளே மெம்பர் ஆவது. 700 ரூவா கட்டினா
அதுக்கு ஒரு பேக் 3 டப்பர்வேர் சாமான் எல்லாம் கொடுப்பாங்க.
அப்ளிகேஷன் ரெடி செஞ்சு கொடுத்தா நாமும் மெம்பர் ஆகலாம்.
நாம மெம்பர் ஆன 26 சதவிகிதம் நமக்கு கிடைக்கும். நமக்கு
டப்பர்வேர் சாமான்கள் வீட்டுக்கு வாங்கணும் எனும் பொழுது
இதுதான் பெஸ்ட் ஆப்ஷன். MRPயை விட குறைந்த விலையில்
நாம சாமான்கள் வாங்கலாம்.

5. நல்லா புரிந்துகொள்ளும் நட்பு இருக்கறவங்க நாலு பேர் சேர்ந்து
பணம் போட்டு ஒருத்தரை மெம்பராக்கி ஆர்டர் வெச்சு சாமான்கள்
வாங்கிக்கலாம். இதனால குறைந்த விலையில் எல்லோருக்கும்
கிடைக்கும். அதே சமயம் மெம்பரானா தொடர்ந்து ஆர்டர் போடணும்னு
இருக்கறதையும் சமாளிக்கலாம். குறைந்த பட்சம் 2000 ஆர்டர்
போடணும். வாராவாரம். (2000 ஆர்டர் என்றாலும் 1600 தான்
கம்பெனிக்கு கொடுக்கணும்)உடனே வாங்கலாம் எனும் நிலையில்
இருக்கும் தோழிகள், நட்புக்கள் ஒண்ணா சேர்ந்து பலம் பெறலாம்.

6. சில டீலர்கள் மெம்பரானா நீங்க உங்க தேவையின் பொழுது
மட்டும் ஆர்டர் போட்டு வாங்கிக்கங்க, நான் பாத்துகறேன்னு
சொல்வாங்க. அப்படி சொல்லும் பொழுது கறாரா எனக்கு
எப்பத் தேவையோ அப்ப மட்டும் போடுறேன்னு சொல்லி
தோழிகளுக்குத் தேவையான பொழுது ஆர்டர் போட்டு வாங்கிக்கலாம்.
கம்பெனியில வாங்கும் விலைக்கே நாம் தோழிகளிடம்
பகிர்ந்துக்கும் பொழுது நமக்கு லாபம் இருக்காது. ஆனா
குறைந்த விலையில் டப்பர்வேர் சாமான் நாம சேர்க்கலாம்.

7. இப்ப பரிசுப்பொருளா டப்பர்வேர் பொருட்கள் கொடுப்பதில்
நல்ல வரவேற்பு இருக்கு. இந்தப் பொருள் சீக்கிரம் பாழாகாது
என்பதாலும் இதன் மதிப்பு தெரிந்ததாலும் பலரும் இப்ப
கல்யாணம், பிறந்தநாள் எல்லாவற்றிற்கும் டப்பர்வேர் டப்பாக்கள்தான்
தர்றாங்க. சமீபத்தில் நான் கூட என் உறவினருக்கு இப்படி
பரிசளித்தேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். மெம்பரானவங்க
எம் ஆர் பி விலைக்கும் குறைச்சலாத்தான் பணம் கட்டி
எடுத்திருப்பாங்க. ஆனா கொடுக்கும் பொழுது நிறைக்க கொடுத்தது
போல இருக்கும்.


இந்த பீகாக் கலெக்‌ஷன் இப்ப சூப்பரா இருக்கு. இதுலயே யானை,
ஒட்டகம் எல்லாம் போட்டும் வருது. கொடுக்கவும் நல்லா இருக்கும்.
MRP 595.

நாமளே மெம்பர் ஆனா டப்பர்வேர் சாமான்களை பரிசளிக்க ரொம்ப
ஈசி. விலையும் குறைவா இருக்கும். தரமான பொருளை பரிசளித்த
திருப்தியும் கிடைக்கும். இப்ப வெள்ளியில் கூட பரிசுப்பொருள்
வாங்க முடிவதில்லை. அதே 500 ரூபாய்க்கு இரண்டு டப்பாக்கள்
மேலே சொல்லியிருக்கும் பீகாக் கலெக்‌ஷன் கொடுக்கலாம். இதை
ஃபிரிட்ஜில் தான் வைக்க முடியாது. மற்றபடி ட்ரை ஸ்டோரேஜாக
உபயோகிக்கலாம்.





இப்ப BUYER'S MARKET தான். அதனால எனக்கு இவ்வளவு பர்சண்ட்
கமிஷன் வேணும்னு தாரளமா கேளுங்க. முன்ன மாதிரி எல்லாம்
இல்ல. எனக்குத் தெரிஞ்சு பலர் இப்ப கம்பெனி ரேட்டுக்கே
கொடுக்கறாங்க. அவங்களுக்கும் பணத்தட்டுப்பாடு இல்லாம இருக்கும்.
அந்த வாரத்துக்கான ஆர்டர் போடவும் வசதியா இருக்கும்னு தான்.
நல்லாத் தெரிஞ்சவங்க கிட்ட பேசி அப்புறம் நமக்குத் தேவையானதை
மட்டும் வாங்கிகணும். இது ரொம்ப முக்கியம்.

எனக்குத் தெரிஞ்சதை இங்கே பகிர்ந்துகிட்டேன். இன்னும் வேற
ஐடியாக்கள் யாருக்கும் தெரிஞ்சா தயவு செஞ்சு பகிர்ந்துக்கொள்ளும்
படி கேட்டுக்கறேன். எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்.
http://tupperwareindia.com/product-range/dry-storage/mm-ovals
 

கருத்துகள் இல்லை: