புதன், ஜனவரி 11, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

ஓடாதீங்க!ஓடாதீங்கtupperwareபாத்து ஓடாதீங்க

நம்ம உறவுலயோ இல்ல நட்பு வட்டத்துலயோ, இல்ல தெறிஞ்சவங்களோ
அவங்க இன்சுயூரன்ஸ் ஏஜெண்டா இருந்துட்டா அவங்களைக் கண்டாலே
ஓடுவோம். அவங்க டார்கெட் அச்சீவ் செய்ய நம்மை வற்புறுத்தறாங்களேன்னு
ஒரு பயம் தான். ஆனா சேமிப்பு எவ்வளவு அவசியம்னு தெரிஞ்சா
அவங்களை கூப்பிட்டு உக்கார வெச்சு விவரம் தெரிஞ்சிப்போம். இந்த
சேமிப்புகளில் இருந்து நமக்கு வருமானவரி விலக்கு கொஞ்சம் கிடைக்கும்
என்பது பலருக்குத் தெரியாது, அத்தோடு நமக்குத் தெரியாம ”சிறுதுளி
பெருவெள்ளமா” சேமிப்பது பிற்காலத்துல உதவும்னு புரியாம பலர்
கையில இருப்பதையெல்லாம் செலவழிச்சிடுவாங்க. இப்ப டாபிக்
அதைப்பத்தி இல்ல. இந்த இன்ஸ்யூரன்ஸ் ஏஜண்ட்களைப்பார்த்து
ஓடுவது போல இன்னொருத்தங்க கிட்டேயிருந்து தப்பிக்க பாப்பது
யாரா இருக்கும்னா அது TUPPERWARE சாமான்கள் விக்கறவங்களாத்தான்
இருக்கும்.

TUPPERWARE ப்ளாஸ்டிக் பொருள் என்பதாலும், அதுக்கு போய்
அம்புட்டு விலை கொடுக்கணுமா? என்பதாலும் தான் நாம ஓடுவது.
மாவுக்கேத்த பணியாரம்னு சொல்வாங்க பாருங்க. அதுமாதிரி
நாம கொடுக்கும் காசுக்கு ஏத்தமாதிரிதான் பொருளும் இருக்கும்.
http://pudugaithendral.blogspot.com/2011/11/tupperware.html
நாம பொதுவா என்ன செய்வோம். இந்த pearlpet, sunpet,
போன்ற டப்பாக்களைத்தான் அதிகம் சமையற்கட்டில் சாமான்கள்
போட வெச்சிருப்போம். pepsi, கோக் பாட்டில்களில்தான்
தண்ணி நிறைச்சு வெச்சிருப்போம். உண்மையில் நாம
அந்தமாதிரி பொருட்களை உபயோகிக்க கூடாது. அந்த மாதிரி
பாட்டில்களின் அடியில் பார்த்தா 1,3,5 அப்படின்னு நம்பர்கள்
இருக்கும். இது அந்த பாட்டில்களை நாம எத்தனை மறுபடி
உபயோகிக்கலாம்(கழுவி) என்பதை குறிக்குமாம். உங்க வீட்டுல
இருக்கும் எந்த ப்ளாஸ்டிக் பாட்டில் அல்லது டப்பாவின் அடியில்
பாருங்க நம்பர் கண்டிப்பா இருக்கும். அப்படி நம்பரே இல்லையென்றால்
அது உபயோகிக்கவே லாயக்கற்றது என அர்த்தம்.

கீழே கொடுத்திருக்கும் பட்டியலைப் பாருங்க. அந்தந்த
சாமான்களை பேக்கிங் செய்யன்னு ஒரு நம்பர் கொடுத்திருக்காங்க.
அதை ஒரு முறை உபயோகித்தற்கப்புறம் திரும்ப உபயோகப்படுத்த
கூடாது. ஜிப் லாக் கவர்களும் இப்படித்தான். ஒரு முறை
உபயோகிக்க மட்டும்தான்.


ஃபிரிட்ஜ்ல வைக்க கூட அதற்கென நிர்ணயிக்கப்பட்ட பொருளாத்தான்
இருக்கணும். கீழே கொடுத்திருக்கும் சிம்பல்களை பாருங்க.



கப் & ஃபோர்க் இது பல டப்பர்வேர் பொருட்களில் இருக்கும். இதுதான்
ஃபுட் க்ரேட் ப்ளாஸ்டிக் என்பதன் அடையாளம். ஃபிர்ட்ஜ்ல வைக்க,
மைக்ரோ அவனில் உபயோகிக்கன்னு அதற்கென குறியிடப்பட்டுள்ள
பொருளை வாங்குவதுதான் புத்திசாலித்தனம். சாதாராண ப்ளாஸ்டிக்
டப்பாவில் பிள்ளைகளுக்கு உணவு கொடுத்தனுப்பவதற்கும், டப்பர்வேர்
டிபன் டப்பாவில் கொடுப்பதற்கும் நிறைய்ய வித்தியாசம் இருக்கு.


டப்பர்வேர் டப்பாக்களில் ஆப்பிள் போன்ற பழங்களை நறுக்கி
கொடுத்தனுப்பினா 11 மணி வாக்கில் பிள்ளைகள் சாப்பிடும்பொழுது
கறுத்து போகாது. பிள்ளைகள் தயிர் சாதம் எடுத்துச் செல்ல வெறுக்கும்
காரணம் அது புளித்து போகும். பாலும்,கொஞ்சமா தயிரும் ஊற்றி பிசைந்து
வைத்துவிட்டால் பிள்ளைகள் மதியம் சாப்பிடும் பொழுது தயிர் சோறு
சுவையா இருக்கும்.

வாரத்துக்கு ஒரு முறை இட்லி தோசைக்கு மாவாட்டி டப்பர்வேர்
டப்பாவில் போட்டு வைத்துவிட்டால் புளிக்காத மாவில் சூப்பரா
இட்லி, தோசை செஞ்சு கொடுக்கலாம்.

இப்போ பல ஐடி கம்பெனிகளில் அலுவலகத்திலேயே மைக்ரோ அவன்
இருக்கு. இந்த டப்பேர் டப்பாக்களில் உணவைக்கொடுத்து அனுப்பும்
பொழுது 20 செகண்ட் அவனில் வைத்து சூடாக்கி சாப்பிடலாம்.

காலை நேர அவசரத்தில் காய்கறி நறுக்கிக்கிட்டு இருக்க முடியாது.
கத்திரிக்காய், உருளை கறி செய்வதாக இருந்தால் தவிர முதல் நாள்
இரவே காய்கறிகளை வெட்டி டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து
விடுவேன் இதனால என்னோட காலை நேரம் வேலை ஈசியா
முடிஞ்சிடுது.

DRY STORAGE அப்படின்னு ஒரு வகை ப்ராடக்ட் இருக்கு டப்பர்வேரில்.
இதில் பருப்பு வகைகள், அரிசிமாவு, கடலைமாவு போன்றவை வைக்கலாம்.
பூச்சி வராது என்பது ப்ளஸ்.

இந்த மாதிரி டப்பாவில் அரிசி போட்டு வைக்கும் பொழுது வண்டு,
பூச்சி வராமல் இருக்கும். (வேப்பிலையைக் துணியில் கட்டிப்
போட்டு வைக்கும் வேலை இல்லை.)

இன்னொரு முக்கியமான விஷயம். வெள்ளிப்பாத்திரங்கள்.
இந்த வெள்ளிப்பாத்திரங்கள் காற்று படுவதால் கறுத்து போய் விடும்.
மர அலமாரி தவிர காட்ரேஜ் பீரோ போன்றவற்றில் வைத்தாலும்
கறுத்து விடும். என்னதான் செய்ய? இருக்கவே இருக்கு டப்பர்வேர்.

டப்பர்வேர் டப்பாக்கள் காற்றுபுகாத வகையில் இருக்கும். அதனால
பெரிய சைஸ் டப்பாக்கள் (நம்ம அலமாரியில் வைக்கும் வகையில்)
வாங்கி அதில் வெள்ளிப்பாத்திரங்களைப் போட்டு மூடிவைத்து
விட்டால் தேவையான பொழுது எடுத்துக்கொள்ளலாம். அதே
பளபளப்புடன்.

சரி. டப்பர்வேரில் இவ்வளவு நன்மைகள் இருக்கு. ஆனா
அதோட விலை. கண்ணைக்கட்டுதே!!! வாங்கனும்னு நினைச்சாலே
பயப்படுத்துவது அதன் விலைதான். மாவுக்கேத்த பணியாரம்
சொலவடை இங்கே நமக்கு நல்லா புரியுது. ஆனாலும் டப்பர்வேர்
வாங்கும் முன் சில டெக்னிக்குகள் இருக்கு.

கருத்துகள் இல்லை: