புதன், ஜனவரி 04, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


ஈபே (eBay)
இணையதளம் 1995 ல் நிறுவப்பட்டது. இவ்விணையதளம் பொருட்களின் ஏல மற்றும் விற்பனை சந்தை போல் செயல்பட்டுவருகிறது. ஈபே மூலம் லட்சக்கணக்கான பொருட்கள் தினமும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது, ebay ல் பொருட்களை விற்பதன் மூலம் விற்பனையாளர்கள் நிறைய லாபங்களை ஈட்டிவருகின்றனர். நீங்களும் இதில் சேர்ந்து பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன. ஈபேயில் கிடைக்கும் வருமானம் உங்களுக்கு பகுதி நேர பணமாக (Part Time Cash) இருக்கலாம், ஏன் இதை நீங்கள் முயன்றால் முழு நேர தொழிலாகவும் (Full time Business) செய்ய முடியும்.
ஈபே ஒரு வணிக தளம், இதில் பொருட்களை விற்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பது வரை சரி. ஆனால் எப்படிப்பட்ட பொருட்களை விற்பது?, அதை எப்படி தயாரிப்பு நிறுவனங்களிடமோ அல்லது தனியாரிடமோ பெறுவது?. மேலும் அப்படி விற்க்கப்படும் பொருட்களின் மூலம் இதை எப்படி ஒரு தொழிலாக மாற்றி ஈபேயில் PowerSeller (PowerSeller என்பது விற்பனையாளர்களின் உயர் தகுதி ஆகும்) அந்தஸ்தை பெறுவது? போன்ற கேள்விகள் உங்களிடம் தோன்றலாம். அதற்க்கு விடைகான இந்த பதிவு உங்களுக்கு உதவும்.
உண்மையில் சொல்லபோனால், ஈபேயில் பணம் சம்பாதிக்க தொடங்குவதென்பது எளிதான காரியம் தான். உங்களுக்கான விற்பனையாளர் கணக்கை தொடங்கிய பின், உங்களிடமுள்ள பழைய அல்லது உங்களுக்கு தேவைப்படாத பொருள்கள் ஏதும் இருந்தால் அதனை விற்பதற்கான முயற்சியை செய்து பார்க்கலாம். ஒருவேளை நீங்கள் மற்றவர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி விற்க முற்படும் (start buying stock to resell) முன், இவ்வகையான அடிப்படை விற்பனையில் ஈடுபடும் பட்சத்தில் இது சிறந்த அனுபவங்களை தரலாம்.
நீங்கள் பொருட்களை வாங்கி விற்க்கும் (Reselling) முறையில், எந்த மாதிரியான பொருட்களை விற்க்கும் விற்பனையாளராக (seller) விரும்புகிறீர்கள் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். நிச்சயமாக நீங்கள் எந்த வகையான பொருட்களையும் விற்கமுடியும், ஆனால் ஒரு பெயர்பெற்ற (Famous) விற்பனையாளராக நீங்கள் மாற வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட வகையான பொருட்களை விற்பது தான் சிறந்ததாக இருக்கும்.
அதற்காக உங்களின் விற்பனை பொருட்கள் ஒரு குறுகிய வட்டத்தில் தான் இருக்கவேண்டும் என்பது அர்த்தமில்லை. நீங்கள் விற்பனை செய்வதாக இருக்கும் பொருள் பிரபலமாக மற்றும் அதிகமாக விற்பனையாக கூடியதாக இருக்கவேண்டும். இதை கண்டறிய ஈபேயின் மேம்ப்பட்ட தேடல் (ebay’s Advanced Search) வசதியை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வகை பொருள்களின் விற்பனை விகிதம் மற்றும் அதன் விலை நிர்ணயம் போன்றவற்றை தெரிந்து கொள்வது நல்லது.
உதாரணத்திற்க்கு நீங்கள் கணினி விளையாட்டு மென்பொருள்களை (computer Games) விற்க நினைக்கிறீர்கள் என்றால், நீங்கள் வாங்கி விற்பதற்க்கு ஆயிரக்கணக்கான விளையாட்டு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் எவை உங்களுக்கு அதிகமாக விற்று லாபமீட்டி தரும் அல்லது எவை உங்களை நட்டப்படுத்தும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். நீங்கள் தவறான பொருட்களை வாங்கி வைத்து விற்பனை செய்ய முடியாமல், பணத்தை இழக்க முடியாது. எனவே ஈபேயின் தேடுதல் மூலம் பட்டியலிட்டுள்ள பொருட்களில் எவை தொடந்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது, மேலும் எவை உங்களுக்கு அதிக லாபம் பெற்று தரும் என்பதையும் அறிந்து கொள்வது சிறந்தது.
சரி, எந்த பொருட்களை விற்று லாபம் சம்பாதிப்பது என்பதை தெரிந்து கொண்டீருப்பீர்கள், இப்பொழுது அதை நீங்கள் எங்கே வாங்க வேண்டும் என்பதை பார்க்கலாம். விற்பனையாளர்கள் (sellers) யாரும் அவர்கள் எங்கே பொருட்களை வாங்கி விற்கிறார்கள் என்பதை உங்களுக்கு சொல்லமாட்டார்கள். அவ்வாறு சொல்வது அவர்களின் பணப்பெட்டியின் சாவியை உங்கள் கையில் கொடுப்பதை போன்றதாக கருதுவார்கள். அது தான் உண்மையும் கூட. எனவே நீங்கள் அதை தெரிந்து கொள்ள உங்கள் மூளைக்கும் கால்களுக்கும் சிறிது வேலைக்கொடுத்தாக வேண்டும்.
தயாரிப்பு பொருள்களை வாங்க நீங்கள் இரண்டு முக்கியமான இடங்களை நாட வேண்டும். மொத்த விற்பனையாளர்கள் (wholesalers) அல்லது dropshippers. இரண்டு வகையிலும் நீங்கள் பொருட்களை வாங்க அவர்களுக்கே உரித்தான சில விதிமுறைகள் உள்ளன. அதில் எதை நீங்கள் பின்பற்ற போகிறீர்கள் என்பது உங்களை பொருத்தது.
Dropshippers உங்களுக்கான பொருட்களின் கையிருப்பை (product stock) அவர்களே வைத்திருப்பார்கள். எனவே உங்கள் வாடிக்கையாளரிடமிருந்து (Customer) பணத்தை பெற்றபின், Dropshippers க்கு பணத்தை கொடுத்தால் போதுமானதாக இருக்கும். அதற்காக நீங்கள் அவர்களின் குறிப்பிட்ட சில திட்டங்களில் (scheme) ஒன்றில் இணைந்திருக்க வேண்டும்.

நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொத்த விற்பனையாளர்கள் (wholesaler) தேர்வு செய்திருந்தால், உங்களுக்கு பொருட்களை வாங்கி வைக்க அறை (stock room), மற்றும் முன்கூட்டியே அதை வாங்க பணம் (Investment) வேண்டும். சில நேரங்களில் நீங்கள் வாங்கிய பொருளை விற்க இயலவில்லையெனில், இம்முறை உங்களை நட்ட படுத்த நேரிடலாம். அதனால் நான் ஏற்கனவே சொன்னதை போல் தேடல்களின் பட்டியல் முடிவை பொருத்து இதை தந்திரமாக செய்யலாம். அப்படி செய்வதன் மூலம் ரீஸ்க் குறையலாம்.
சரி, மீண்டும் தயாரிப்பு பொருட்களை எங்கே வாங்குவது என்பதிற்க்கு செல்வோம். ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு பொருளை வாங்கி விற்க திட்டமிட்டு விட்டிர்களெனில், எளிமையான வழியென்னவெனில் அந்த பொருளின் pack ல் பெரும்பாலும் சப்ளையர் பெயரை பார்க்க முடியும். அதன் மூலம் அவர்களின் இணைய முகவரிக்கு சென்று மேலும் விவரங்களை திரட்ட முடியும்.
மற்றொரு எளிய முறை நீங்கள் Google இல் தேடுவது. இவ்வாறு தேடுவதன் மூலம் சில சிறந்த மொத்த விற்பனையாளர்களை கண்டறிய முடியும். காலப்போக்கில் நீங்கள் பொருட்களை பெற பல ஆதாரங்களை பெறுவதன் மூலம், ஒரு மொத்த விற்பனையாளரிடமிருந்து மற்றவரிடம் செல்ல நேரிடும். மற்றும் நீங்கள் விற்பனையில் வளர உங்கள் தயாரிப்பு அளவுகளையும் கட்டமைக்க முடியும்.
விற்பனை சேவை பற்றிய கருத்துகளை (feedback) தெரிந்து கொள்வது உங்கள் தொழிலை மேலும் வளர்க்க உதவும் முக்கியமான ஒன்று. கருத்துகளை(feedback) தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் செயல்படுவது உங்களை மேம்படுத்தப்பட்ட விற்பனையாளராக மாற்றும் என்பதில் ஐயமில்லை. மேலும் அவ்வாறாக செயல் படுவதன் மூலம் நீங்கள் ஈபேயில் powerseller என்ற தகுதியை பெற இயலும்.
PowerSeller சின்னம் என்பது பல வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் உங்களை மிகவும் தீவிரமான ஈபே விற்பனையாளராக காண்பிக்கும். இதில் ஐந்து நிலைகள் உள்ளன. நீங்கள் PowerSeller என்பதை அடைய ஒரு இலக்கை நிர்ணயித்தது இருக்கும் போது, உங்கள் தயாரிப்பு அளவு கட்டமைக்க மற்றும் படிப்படியாக உங்கள் விற்பனையை அதிகரிக்க வெறும் மூன்று மாதங்களில் அதை செய்ய முடியும் என்றே கருதுகிறேன்.
பல விற்பனையாளர்கள் ஈபேயில் தங்களுக்கென ஒரு தனி விற்பனை நிலையத்தையே (Own ebay shop) வைத்துள்ளனர். ஆனால் நீங்கள் முதன் முதலில் பொருட்களை விற்க்க துவங்கும் போது இது தேவையில்லை. ஏனேனில் உங்கள் விற்பனை நிலைய பக்கம் பொருட்களே இல்லாமல் வெறுமையாக இருக்கலாம். எனவே உங்கள் விற்பனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதற்க்கு பிறகு இவ்வகை தனி விற்பனை நிலையத்தையே (Own ebay shop) வைத்துக்கொள்ளலாம்.
கடைசியாக நீங்கள் சிந்திக்க வேண்டியது, எவ்வகை விலை வரம்பு (price range) பொருட்களை விற்க வேண்டுமென்பதை தான். மேலும் எந்த பொருட்களை நீங்கள் விரும்பி விற்க்க முடியும் என்பது மிக முக்கியமானது. அதிக விலை பொருட்கள் அதிக லாபத்தை தரலாம் என்ற காரணத்தால் மட்டும் அதை விற்க முடிவெடுக்க வேண்டாம். உங்களுக்கு பிடித்த மற்றும் உங்களுக்கு சரியானதாக எது இருக்கும் என்று தேர்வு செய்து அதில் கவனம் செலுத்தவும். அப்படி செலுத்தினால் அதில் உங்களுக்கு மிக பெரிய வெற்றி காத்திருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு வெற்றிகரமான விற்பனை வணிகத்தை (selling business) உருவாக்க காலம் எடுத்து கொள்ளும் என்பதை நினைவில் கொள்க. – ஆனால் நீங்கள் ஈபேயில், உண்மையாக வெற்றியை அடைய தீர்மானித்துவிட்டிர்கள் என்றால், இந்த பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஈபேயில் (eBay) பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பற்றிய இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதை பற்றிய உங்களது கருத்துக்களை comment செய்யவும்.
Popularity: 3% [?]
http://saranr.in/ebay-panam-sampathippathu-eppadi/?

கருத்துகள் இல்லை: