திங்கள், ஏப்ரல் 30, 2012

என்னை உங்களுக்கு தெரிகிறதா?

,

    ன்னை உங்களுக்கு தெரிகிறதா? நிச்சயம் நன்றாக தெரிந்திருக்கும் மறந்து போயிருப்பிர்கள் நீங்கள் தினசரி மனதில் நினைத்து பார்க்கும் அளவுக்கு நான் பெரியமனுஷன் அல்ல ஆனாலும் உங்கள் வாழ்க்கையில் எதாவது ஒரு மூலையில் என்னை சந்திக்காமல் உங்களால் இருக்க முடியாது போதும் பீடிகை நீங்கள் யார் என்று சொல்லலாமே என்று நீங்கள் கேட்பது என் மந்தமான செவியில் லேசாக விழுகிறது என் கதையை சொல்லுகிறேன் கேளுங்கள் அதன் பிறகு நான் உங்களுக்கு மிகவும் தெரிந்தவன் தான் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

நான் சாம்பசிவம் என்னை பருத்தி வியாபாரி சாம்பசிவம் என்றால் சொடுக்கு போடும் நேரத்தில் அப்போது எல்லோரும் அடடே அவரா எனக்கு நன்றாக தெரியுமே வெள்ளை வேட்டி சட்டையும் வாய்நிறைய வெற்றிலையும் கக்கத்தில் பழைய மான்மார்க் குடையும் இடிக்கி கொண்டு வருவாரே அவர் தானே என்று எல்லோரும் அடையாளம் சொல்லிவிடுவார்கள் அந்த அளவிற்கு என் ஏரியாவில் எனக்கு பரிச்சயம் ஜாஸ்தி தோற்றத்தில் மட்டுமல்ல வியாபாரத்திலும் நேர்மையை கடைபிடித்ததனால் பெரிய பெரிய வியாபாரிகளும் கூட என்னிடம் மரியாதை காட்டுவார்கள் நேற்று நூறு ரூபாய்க்கு விலைபேசி பருத்திக்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டேன் என்றால் இன்று சரக்கை கொடுக்கும் போது இருநூறு ரூபாய்க்கு விலையேறினாலும் நேற்று பேசிய விலையை மாற்ற மாட்டேன்.

நேர்மையாக இருந்தாலும் நான் ஒன்றும் லட்ச கணக்கில் போட்டு புரட்டும் பெரிய வியாபாரி இல்லை விவாசாயி நிலத்தில் போய் சரக்குக்கு விலைபேசி வாங்கி மார்கட் கமிட்டியில் கொண்டு விற்று அதன் பிறகு சரக்குக்கான காசை கொடுத்துவிடுவேன் ஒருவகையில் இது தரகு வியாபாரம் என்றாலும் என்னமோ முதல்போட்டு வியாபாரம் செய்பவனை போல் நினைத்து கொள்வேன் மற்றவர்களும் அப்படி தான் என்னை நினைப்பார்கள் கிடைக்கும் வருவாயில் சிறுக சிறுக சேர்த்து சொந்தமாக வீடு நிலம் என்று ஓரளவு சம்பாதித்தும் வைத்திருந்தேன் எனக்கு இரண்டு பையனும் ஒரு பெண்ணும் என் மனைவி மிகவும் நல்லவள் அவளை மட்டும் நான் மனைவியாக பெறவில்லை என்றால் வருகிற சொற்ப வருவாய்க்கு நடுத்தெருவில் நின்றிருப்பேன் சிக்கனம் என்றால் அவளிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு புடவை கிழிந்து போய்விட்டால் அதை உடனடியாக தூக்கி தூர வீசி விட மாட்டாள் என் மரகதம் கிழிந்த புடவையை படுக்கையாக விரிப்பாள் அதற்கும் உதாவாமல் போகும் போது கிழித்து தலையணை உரையாக பயன்படுத்துவாள் அப்போதும் கிழிந்து விட்டால் தலையணைக்குள் பஞ்சாக அடைத்து விடுவாள் அதற்காக அவளை கருமி என்றோ கஞ்சத்தனம் மிகுந்தவள் என்றோ சொல்ல முடியாது. அக்கம் பக்கத்து வீட்டு பெண்மணிகள் எதாவது உதவி என்று வந்து கேட்டால் வெறுங்கையாக அனுப்ப மாட்டாள் தன்னால் முடிந்ததை செய்வாள் பொருளாக கொடுக்க முடியவில்லை என்றால் கூட அவர்களுக்காக ஓடியாடி ஒத்தாசை புரிவாள் அவளை யாருமே ஏன் விரோதி கூட குறை சொல்ல மாட்டார்கள்.

புருசனையும் பிள்ளைகளையும் கவனிப்பதற்கு மரகதத்திடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தாயால் கூட தரமுடியாத அரவணைப்பை கணவனுக்கு தருவாள் என் முகம் மாறுவதை வைத்தே என் உடம்பிற்கு என்ன? மனதிற்கு என்ன? என்பதை ஒரு நொடியில் கணித்து விடுவாள். ஆறுதலும் தைரியமும் அவளிடமிருந்து பெற்று விட்டால் காலகாலமாக வருகின்ற துயரங்கள் எல்லாம் ஒரு துரும்பை போல் தெரியும் அவ்வளவு தெளிவானவள் மதிநுட்பம் மிகுந்தவள். குழந்தைகளுக்கு குளிப்பாட்டி விடுவதில் இருந்து பாடம் சொல்லி கொடுப்பதுவரையில் அவள் கடைபிடிக்கும் நேர்த்தி பெரிய பேராசிரியருக்கு கூட வராது.

அடுத்த மாசி மாதம் பிறந்தால் எனக்கு எண்பத்திமூன்று வயது பூர்த்தியாகிறது. எழுபது வயது வரையில் நான் ஒரு இடத்தில் அமர்ந்தது கிடையாது பருத்தி எங்கெல்லாம் இருக்கிறது என்று தகவல் வருமோ அங்கெல்லாம் சைக்கிளை எடுத்து கொண்டு அலைவேன் மழைவராத காலம் பருத்தி அதிகம் விளையாத காலம் என்று வந்தால் கூட வேறு எதாவது தொழிலை எடுத்து செய்வேனே தவிர வீட்டில் சும்மா இருக்க எனக்கு முடியாது. ஐயோ போதும் எனக்கு வயதாகி விட்டது என்று உட்கார்ந்திருந்தால் பெண்ணுக்கு ஐம்பது சவரன் போட்டு கல்யாணம் நடத்தி வைத்திருக்க முடியுமா? மூத்தவனை இன்ஜினியராகவும் இளையவனை பேராசிரியராகவும் படிக்க வைத்து வேலைவாங்கி கொடுத்திருக்க முடியுமா? அவர்களுக்கு அப்பன் சம்பாதித்த சொத்து என்று சிறிதளவாவது நிலத்தை வைத்திருக்க முடியுமா? எல்லாம் எனது நிற்காத ஓட்டத்தால் கிடைத்தது தான்.

எழுபது வயது வரை எனக்கு சலிப்பே தட்டியது கிடையாது. இன்னும் சொல்ல போனால் எனக்கு எழுபது வயதானது கூட தெரியாது. எதோ நேற்று தான் மீசை முளைத்தவன் போல் நினைத்து கொண்டிருந்தேன். ஒருநாள் அதிகாலை உறங்கி கொண்டிருந்த மரகதத்தை தட்டி எழுப்பினேன் என் குரல் கேட்டாலே எழுந்துகொள்ளும் மரகதம் அன்று நான் கதறி புலம்பிய போது கூட எழவில்லை அவள் கழுத்து துவண்டு சாய்ந்த பிறகு தான் ஐயோ எனது அருமை செல்வம் உறக்கத்திலேயே போய்விட்டாளே என்று உணர்ந்து அழுதேன். அவள் மறைவுக்கு பிறகு தான் என் வயதும் என் தளர்ச்சியும் எனக்கு புரிந்தது அதுவரை பத்து மையில் என்றாலும் சலிக்காமல் சைக்கிள் மிதித்த என் கால்கள் துவண்டு போக ஆரம்பித்தது கண்மங்கியது தலைகிறுகிறுத்தது. மூச்சிறைதத்து. சாய்வு நாற்காலியில் படுத்து ஓய்வெடுக்க வேண்டும் என்று தோன்றியது.

ஆச்சி பதிமூன்று வருடம் ஓடி போயாச்சி நிறையப்பேர் என்னை மறந்தும் போயிருப்பார்கள் இப்படி ஒரு மனிதன் இருந்தானே நாம் பார்க்கும் நேரமெல்லாம் குறுக்கும் நெடுக்கும் நடமாடினானே அவனை தீடிர் என்று காணவில்லையே எங்கே போயிருப்பான் என்னவாயிருப்பான் என்று யாரும் யோசித்ததாக தெரியவில்லை வெளியில் உள்ளவர்களை விட்டுவிடுவோம் நான் பாடுபட்டு வளர்த்தேனே என் பிள்ளைகள் அவர்கள் கூட என்னை நினைத்து பார்க்கவில்லையே இதுதான் தலையெழுத்து என்பதோ? இதை தான் உலகத்தின் நடைமுறை என்று எல்லோரும் சொல்கிறார்களோ?

நினைத்து பார்க்கவே முடியவில்லை கண்ணுக்குள் சூன்யமான ஒரு உலகம் தான் தெரிகிறது. அந்த உலகத்தில் நான் மட்டுமே தன்னந்தனியாளாக நிற்கிறேன். தாகம் எடுக்கிறது, நாவு வரள்கிறது யாராவது ஒரு துளி தண்ணிர் தரமாட்டார்களா? என்று நெஞ்சம் ஏங்குகிறது. அதோ தூரத்தில் புகைவடிவாக என் மரகதம் தெரிகிறாள் அவள் கையில் தங்க கூஜா இருக்கிறது. அதன் வெளிச்சம் என் கண்ணை பறிக்கிறது அதிலிருந்து அமிர்த தாரையாக தண்ணீர் கொட்டுகிறது. நான் வாரி வாரி குடிக்கிறேன். தாகம் அடங்கவில்லை கானல் நீரை எத்தனை முறை குடித்தாலும் தாகம் அடங்குமா? இது தான் இந்த கனவு தான் என் கூட இப்போது துணையாக இருப்பது.

மரகதம் கூட்டி பெருக்கிய வாசல்படியை பார்க்கிறேன். சாணம் போட்டு மெழுகி கோலம் போட்டு அழகு படுத்திய அடுப்பங்கரையை பார்க்கிறேன். அவள் துணி துவைக்கும் கிணற்றடி கல், தேங்காய் அரைக்கும் அம்மிக்கல் பருப்பு திரிக்கும் எந்திரக்கல் எல்லாமே என்னை போலவே அனாதைகளாக கிடக்கிறது. மீண்டும் மரகதம் வருவாளா? தனது மென்மையான விரல்களால் தன்னை தொடுவாளா? என்று உயிரற்ற அந்த பொருட்களும் ஏங்குகின்றன. உயிரை பிடித்து கொண்டு படுத்து கிடக்கும் நானும் ஏங்குகிறேன். கல்லுக்கு தனது உணர்வுகளை பேசிவிட முடியாது. என்னால் முடியும் ஆனால் அதை கேட்பதற்கு தான் யாருமில்லை.

மூத்த மகன் சொல்லுகின்றான் அப்பா உங்களுக்கு வயசாகி விட்டது கண்ணும் காதும் முன்னே போல் இல்லை இந்த மாதிரி நிலையில் நீங்கள் என்னோடு சென்னையில் இருப்பது ரொம்ப கஷ்டம் நானும் வேலைக்கு போய்விடுவேன் உங்கள் மருமகளும் வேலைக்கு போய்விடுவாள் வீட்டில் தனியாக இருக்கும் உங்களை கவனிப்பது மிகவும் கடினம் இங்கு கிராமத்தில் உங்களை தெரியாதவர்கள் யாருமில்லை ஆத்திரம் அவசரம் என்றால் துணைக்கு வர நிறையப்பேர் உண்டு இங்கு இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தம்பி வீட்டில் வேண்டுமானால் சில நாட்கள் போய் இருங்கள் அவனுக்கும் ஆறுதலாக இருக்கும் என்று ஆக மொத்தத்தில் மூத்தவன் என்னை கைகழுவியதை வேறு விதத்தில் சொல்லி விட்டான்.

இளையவன் மட்டுமென்ன அண்ணன் காட்டிய வழியை மாற்றியா நடக்க போகிறான். அப்பா நான் சொல்லுகிறேன் என்று தப்பாக நினைக்காதீங்க உங்கள் மருமகளை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி கொண்டே இருப்பாள் யாரோடும் ஒத்து போகும் சுபாவம் அவளுக்கில்லை என் தலையெழுத்து அவ்வளவு தான் என்று அவளோடு குடும்பம் நடத்துகிறேன். நீங்களும் அங்கு வந்து உட்கார்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம் வீடே போர்களமாகி விடும் என் நிம்மதி பறிபோய்விடும் நன்றாக யோசித்து எதையும் செய்யுங்கள் என்று நேரிடையாகவே பேசிவிட்டான் என் மகள் மட்டும் என்ன செய்வாள் புருசனுக்கு கட்டுப்பட்டவள் என் அப்பாவை வீட்டில் வைத்து கொள்ளலாம் என்று சொல்ல அவளால் தான் முடியுமா? மருமகன் தான் ஏற்றுகொள்வாரா?

உறவுகள் சொந்த பந்தங்கள் அனைத்துமே சுமைகளை தூக்க தயாராக இல்லை நானும் ஒரு சுமைதான் என்று அப்போது தான் உணர்ந்துகொண்டேன் எனக்கு இளமை இருக்கும் போது இந்த சிந்தனை வரவில்லையே பிள்ளைகளை சுமையாக கருதியிருந்தேன் என்றால் இன்று அவர்கள் சிறகடித்து பறக்க முடியுமா? தனக்கென்று ஒரு கூடு குஞ்சிகள் என்று வாழமுடியுமா? இந்த நியாயத்தை யார் புரிந்து கொள்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு தகப்பன் பற்றிய எண்ணம் தீடிர் என்று வந்துவிடுகிறது. என் பிள்ளைகள் இரண்டு பேருமே ஒரு நாள் வந்தார்கள் அப்பா நாங்கள் சொந்த வீடு வாங்க போகிறோம் கையில் பணமில்லை வேறு காரியங்களுக்காக அலுவலகத்தில் கடன்வாங்கி விட்டதனால் லோனும் எடுக்க முடியாது நீங்கள் நமது சொத்தை வித்து பணம் கொடுங்கள் நீங்கள் பயிர் பண்ண முடியாமல் நிலம் வீணாகதானே இருக்கிறது. என்றார்கள் பெற்ற பிள்ளைகள் கண்கலங்கி நிற்கும் போது பெற்ற வயிறு கலங்கி விடுகிறதே

தம்பி நிலத்தை குத்தகைக்கு கொடுத்து தான் என் செலவுகளை பார்த்து கொள்ளுகிறேன் அதையும் விற்று விட்டால் நான் என்ன செய்வது என்று கேட்டேன் நாங்கள் இரண்டு பேர் இருக்கும் போது உங்களுக்கென்ன கஷ்டம் அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றார்கள் நம்பினேன் ரத்தம் சொட்ட சொட்ட சம்பாதித்த நிலத்தை விற்று பிள்ளைகளுக்கு கொடுத்தேன் மகிழ்ச்சியோடு வாங்கி போனார்கள் போனவர்கள் போனவர்கள் தான் இரண்டு மாதம் வரையில் ஆளுக்கு ஆயிரம் என்று அனுப்பியவர்கள் திருப்பி அதை பாதியாக குறைத்து இப்போது மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று ஆக்கி விட்டார்கள் என் பிள்ளைகளின் கஷ்டம் எனக்கு புரிகிறது பாழும் வயிறுக்கு புரியவில்லையே அது இரண்டு நாளைக்கு ஒரு முறைமட்டும் பசித்தால் போதுமென்று இருப்பதில்லையே தினசரி பசி எடுக்கிறதே

இப்போது என்னை உங்களுக்கு நன்றாக தெரிந்துவிட்டது அல்லாவா? உங்கள் வீட்டு பக்கத்திலோ எதிரிலோ அல்லது உங்கள் வீட்டிலோ கூட சாய்வு நாற்காலியில் என்னை போல மதிப்பில்லாத ஜீவன்கள் படுத்து கிடக்கலாம் அவர்களில் நானும் ஒருவன் அதனால் என்னை உங்களுக்கு நன்றாக அடையாளம் தெரியும். என்னை தெரிகிறதோ இல்லையோ இப்போது நாம் சொல்லுவது உங்களுக்கு புரிந்தால் நான்றாக இருக்கும். வயது ஏறி முதுமை வருவது என்பது எனக்குமட்டும் நடப்பது அல்ல பளபள கன்னமும் ஒளிபொருந்திய கண்ணும் ஒரு நாள் முதுமையினால் கோடுகளுக்குள் மறைந்து போகும். கைகள் நடுங்கி வார்த்தை குளறி தடுமாறவேண்டிய நிலை உங்களுக்கும் வரும் அப்போது என்னை போல் புலம்புனீர்கள் என்றால் கேட்பதற்கு பக்கத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் ஒருவாய் சோறும் ஒருமுழ துணியும் இல்லாமல் நீங்கள் செத்து போனபிறகு வருடா வருடம் உங்கள் திவசத்திற்கு பிள்ளைகள் அன்னதானம் செய்வார்கள் ஏனென்றால் அது அவர்களுக்கு விளம்பரம்.
 
THANKS:

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.


இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.
படம் 1
இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.
விண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி
அனைத்து இணையதளத்தையும் 3D – வியூவில் பயர்பாக்ஸ்-ல் பார்க்க
நம் இணையதளத்துக்கு வருவோரை இசையால், பேச்சால், நம் வாயால் நம் மொழியால் நாமே வரவேற்போம்.
உங்கள் இணையதளத்தில் புத்திசாலிதனத்தை வளர்க்கும் விளையாட்டை சேர்க்க

THANKS:
http://winmani.wordpress.com/2012/03/12/internet-speed/

அழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.


செல்லப்பிராணிகள் மற்றும் விலங்கினங்களின் அழகான தருனங்களை புகைப்படத்தில் கொடுத்து பல வாசகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ள ஒரு தளத்தைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
அணில் முதல் வவ்வால் வரை , குரங்கு முதல் யானை வரை, தவளை முதல் முதலை வரை என் அனைத்து உயிரினங்களின் அழாகன படங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நம்மை மகிழ்ச்சி அடைய வைக்கும் இத்தளத்தைப் பற்றி இனி பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://www.cutestpaw.com
CUTE ANIMALS FOR YOU என்ற இத்தளத்திற்கு சென்று நாம் அழகான பல உயிரினங்களின் தத்ரூபமான புகைப்படங்களை ரசிக்கலாம். இதுவரை எந்த தளங்களிலும் நாம் பார்த்திருக்காதபடி விலங்கினங்களின் அழகான புகைப்படங்கள் பல இத்தளத்தில் இடம் பிடித்துள்ளது, இடது பக்கம் இருக்கும் Categories என்பதில் எந்த உயிரினத்தைப்பற்றிய புகைப்படம் வேண்டுமோ அதை சொடுக்கி குறிப்பிட்டஉயிரினத்தின் புகைப்படத்தை பார்க்கலாம், நம்மிடம் இருக்கும் நம் செல்லப்பிராணிகளின் புகைப்படத்தையும் கூட பதிவேற்றலாம்.  நாம் பார்க்கும் புகைப்படத்தை நம் கணினியில் சேமித்து வைக்கலாம், டிவிட்டர், பேஸ்புக் போன்ற சோசியல் நெட்வொர்க்-களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.  புதுமை விரும்பிகளுக்கும் அழகான உயிரினங்களை பார்க்க விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனவிலங்குகளை வீடியோவுடன் காட்டும் அசத்தலான தளம்.
நம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.
புகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.
நிக்கான் புகைப்பட நிறுவனம் வழங்கும் தினமும் ஒரு வரலாற்றுப் புகைப்படம்.

THANKS:
http://winmani.wordpress.com/2012/04/23/cute-animals-for-you/ 

வியாழன், ஏப்ரல் 26, 2012

ஆப்படிக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு

,
your ad script code goes here for ad block 2
கடந்த இரண்டு திங்களாக நாளிதழ்களிலும் நூல் விற்பனை நிலையங்களிலும் வெகுவாகப் பேசப்படுவது ஆசிரியர் தகுதித் தேர்வு. ஓராண்டு, இரண்டாண்டு எனப் பணிப் பயிற்சி பெற்று ஆசிரியர் பட்டய, பட்டச் சான்றுகள் எல்லாம் முழுமையான பயனைத் தராது ஆசிரியப் பணிக்குச் செல்வதற்கு. பணிக் கல்வி பெற்ற பின்னரும் மீண்டும் தகுதித் தேர்வினை எழுதி 60% மதிப்பெண் வாங்க வேண்டிய கட்டாய நிலை.

 ஆசிரியர் தகுதித் தேர்வு ஏன்? தகுதியான ஆசிரியர்களை அடையாளங் காணுவதற்காக என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் இரண்டாண்டு, ஓராண்டு பாடத்திட்டம் வகுத்து மாநிலக் கல்வி வாரியத்தாலும், பல்கலைக்கழகங்களாலும் வழங்கப்பட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி ஆசிரியர்களைத் தகுதியுடையவர்களாக ஆக்க முடியவில்லை என்பதுதானே பொருள்!
 இவையெல்லாம் தகுதிப்படுத்த முடியாத நிலையில் 150 வினாக்களைக் கொண்டு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மட்டும் மிகுந்த வல்லமையுள்ளதா? இது பொறுப்புள்ள கல்வியாளர் முன் நிற்கும் கேள்வி.
 "தாயை நீ தண்ணீர் கரையில் பார்த்தால் மகளை வீட்டிலா பார்க்க வேண்டும்?' என்பது முதுமொழி. ஆசிரியர் தகுதித் தேர்வின் "தகுதியினையும் பெருமையினையும்' ஏன் சிறப்பினையும் தெரிந்து கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் தந்துள்ள மாதிரி வினாத்தாள்களே முதன்மையான சான்றுகள்.
 மாதிரிகளாகக் கொடுக்கப்பட்டுள்ள இரண்டில் தாள் 1 பட்டயப் படிப்பு ஆசிரியர்களுக்கு உரியது. பட்டப் படிப்பு ஆசிரியர்கள் இரு தாள்களையும் எதிர்கொள்ளலாம்.
 இரண்டு வினாத் தாள்களிலுமே தேர்வருக்கான தொடக்கநிலைக் குறிப்புகள் ஆங்கிலத்திலேயே தரப்பட்டுள்ளன. நாடெங்கும் ஆங்கில மோக அலை வீசுகின்றபோது, அது வினாத்தாள் குறிப்புப் பகுதியிலும் இருக்கத்தான் செய்யும். எனினும் வாழ்க்கைப் பணியைத் தீர்மானிக்கின்ற ஒரு தேர்வுத் தாளை எதிர்கொள்ளும் ஒருவருக்கு "எடுத்த எடுப்பிலேயே ஆங்கிலமா?' என்னும் மலைப்புத் தோன்றாமலிருக்க முடியாது.
 150 பலவுள் தெரிவு (Multiple choice) வினாக்களை 90 நிமிடத்தில் எழுதி முடிக்க என்ற குறிப்பு வினாத் தாள்களில் காணப்படவில்லை. எனினும் தேர்வு தொடர்பான வினாக் குறிப்பில் தேர்வுக்கால அளவு குறிக்கப்பட்டுள்ளது. தாள் ஒன்று, 23 பக்கங்களைக் கொண்டுள்ளது. தாள் இரண்டு, 39 பக்ககங்கள் கொண்டுள்ளது. இவற்றையெல்லாம் புரட்டிப் பார்த்து 90 நிமிடங்களில் சராசரித் திறனுடையோர் விடையளிப்பது இயலாதுதான்.
 அடுத்து, வினாக்களின் தன்மைகளைப் பார்ப்போம். 150 வினாக்கள் அனைத்தும் பலவுள் தெரிவு வினாக்கள், மத்திய அரசுப் பாடத்திட்ட, பள்ளி ஆசிரியர் தகுதித் தேர்வினைப் போன்றே இத்தேர்வுகளும் 150 வினாக்களைக் கொண்டுள்ளன.
 புறவய வினாக்களும் (Objective questions)  பலவுள் தெரிவு வினாக்கள் உயர்நிலை ஏலுமைகளை (Higher order abilities) தேர்ந்தறிவதற்குப் பொருத்தமானவை; தகுதியானவை. ஆசிரியர்கள் உயர் இயலுமை கொண்டவர்களாக எனத் தேர்ந்தறிய பலவுள் தெரிவு வினாக்கள் கொண்ட தகுதித் தேர்வு பொருத்தமுடையதுதான். ஆனால் கொடுக்கப்பட்டுள்ள வினாத்தாள்கள் இரண்டிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில வினாக்கள் தவிர பிறவெல்லாம் நினைவாற்றலையும் மனப்பாடத் திறனையும் சோதிப்பதாகவே உள்ளன. ஆகவே தகுதித் தேர்வின் தாள் ஒன்றை எதிர் கொள்ளுபவர் ஐந்து வகுப்புகளுக்காக கற்பித்தல் திறனைப் பொறுவதைவிட, அவ் வகுப்புகளுக்கு அனைத்துப் பாட நூல்களிலுள்ள (கணிதம் தவிர) தகவல்களை நினைவில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம்?
 ஆங்கிலப் பகுதியிலுள்ள வினாக்கள் இதற்கு விலக்காய், மொழித் திறனுக்கு முதன்மை கொடுப்பதாகக் காணப்படுகின்றன. ஆனால் அவ்வினாக்கள் ஆங்கிலமே நமது வழியில் குறுக்கிடக் கூடாது என்னும் உறுதியில் பி.லிட். பட்டம் மாணவர்கள் நெருங்க முடியாதவாறு உள்ளன. தமிழ்நாட்டில் தமிழை விரும்பிப் படித்தவர்கள் "பாவப்பட்டவர்கள்'.
 தகவல்களை மிகுதியாக நினைவில் வைத்துக் கொள்பவர்களுக்கு இத்தேர்வு விரும்பத்தக்கதாய் இருக்கும். ஆனால் அறிவாற்றலை வெளிப்படுத்துவோருக்கு அவ்வளவு பொருத்தமானதாக இருக்காது என்பதற்குப் பல வினாக்கள் சான்றுகளாகத் திகழ்கின்றன. இதற்கான பல எடுத்துக் காட்டுகளை மாதிரி வினாக்களில் காண முடியும்.
 "ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு பாடுதல் (அ) யமகம், (ஆ) சிலேடை, (இ) அந்தாதி, (ஈ) இரட்டுற மொழிதல்'
 இவ்வினாவில் ஆ,இ என்பன இரண்டுமே பொருந்திய விடைகளுக்குரிய எழுத்துகள். இப்புறவய வினாவில் வினாப் பண்பாகிய புறவயத்தன்மை இல்லை.
 "கற்றலின் முக்கிய காரணிகளுள் ஒன்று. (அ) தக்க வைத்தல் (ஆ) நாட்டம் (இ) கவனித்தல் (ஈ) கவர்ச்சி'
 இவ்வினாவில் உள்ள நான்கு தெரிவுகளுமே பொருத்தமான விடைகள்தாம். புறவய வினாக்களின் முக்கியப் பண்பு ஏற்புமை. அது இவ்வினாவில் இல்லை.
 "வெகுநாட்கள் நமது நினைவில் நிற்பவை (அ) படித்துக் கற்றல் (ஆ) கேட்டுக் கற்றல் (இ) புலன் வழிக் கற்றல் (ஈ) பார்த்துக் கற்றல்'
 இந்த வினா மிகவும் வேடிக்கையானது.படித்தல் , கேட்டல் , பார்த்தல் என்பனவெல்லாம் புலன் சாராத செயல்களா? மேலும் கற்றல் பாங்கு (Learning style) ஆளுக்கு ஆள் மாறும் என்பதை இவ்வினாத் தயாரித்தவர் அறியவில்லை. இவ்வினாவிலும் நான்கும் பொருந்திய விடைகளே. ஆண்டுகளையும் புள்ளி விவரங்களையும் கேட்டு மாணவர்களை அதிர வைப்பது சமூக அறிவியல் ஆசிரியர் விருப்பம் போலும்! தாள் இரண்டில் உள்ள 60 சமூக அறிவியல் வினாக்களில் 10 எண்களை நினைவில் வைத்து ஆண்டுகளையும் புள்ளி விவரங்களையும் கொண்டனவாகும். மாதிரி வினாத் தாள்கள் மட்டுமல்ல, அவற்றுக்கு ஊற்றுக் காலாய் அமையும் பாடநூல்களிலும் பன்முக நோக்கங்களை நிறைவு செய்ய வேண்டிய பலவுள் தெரிவு வினாக்கள் பயனற்றதாகக் காணப்படுகின்றன.
 வகுப்பிற்கேற்ற தரத்தையோ (Ability level), எந்த நோக்கத்துக்காகக் கேட்கப்படுகிறதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றத் தக்கதாகவோ (Validity), வினாவுக்கு விடையளித்த தேர்வர் பெற்ற மதிப்பெண்ணுக்கு அவர் தகுதியுடையவர் என உறுதிப்படுத்துவதாகவோ (Reliabilty) பாட நூல்களில் பலவுள் தெரிவு வினாக்கள் இல்லை.
 கற்றல் பாடப் பொருளை வழங்குவதில் நூலாசிரியர்கள் வெளிப்படுத்தியுள்ள வல்லமை, வினாக்களை வடிவமைத்துக் கொடுப்பதில் காணப்படவில்லை.
 இவ்வாறாக குறைபாடுடைய மாதிரி வினாத்தாள்கள், பொருத்தமில்லாத வினாக்களைக் கொண்டுள்ள பாடநூல்கள் இவற்றின் அடிப்படையில் பயிற்சிக் கையேடுகள், புற்றீசலாய்ப் பெருகி வருகின்றன இப்போது. நடக்கவிருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்களையும் பாடநூல்களையும் பகுத்தாய்ந்து காட்டப்பட்ட பிறழ்வுகள் தவறுகளைச் சுட்ட வேண்டும் என்னும் நோக்கத்திலன்று. ஆசிரியர் தகுதியைக் கண்டறிய தரமான வினாக்கள் தயாரிக்கப்பட வேண்டும்; தரமுடைய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

என் வாழ்கையில் நான் மிகவும் நேசித்த ஒன்று கிரிகெட். நான் ஒரு கிரிக்கெட்
பைத்தியம் (Past tense). பள்ளியில் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், கல்லூரி,
மாவட்ட அளவில் என பலவகை போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளேன். எங்கள்
சுற்றுவட்டார பகுதிகளில் எங்களது அணியை (Killer CC) தெரியாத எவரும் இருக்க
மாட்டார்கள். இங்கே FB-இல் கூட இருக்கும் எனது நண்பன் Ismail Mohammed ஒருமுறை
எங்களது ஜோனில் வரும் ஒரு மிக சிறந்த அணியை ஆட்டத்தின் முதல் நான்கு
பந்துகளிலும் நான்கு விக்கெட்டுகளை 'போல்ட்' என்ற முறையில் வீழ்த்தியது மறக்க
முடியாத நினைவு! புகழின் உச்சத்தை அடைந்திருந்தோம்!

எனது நண்பர்கள் அனைவரும் SDAT எனும் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மென்ட் அதாரிட்டி ஆப்
தமிழ் நாடு நடத்தும் விளையாட்டு பள்ளிகளில் விளையாட்டை முதன்மை பாடமாக எடுத்து
படித்தவர்களாகவே இருந்தோம். ஒருவகையில் என் வாழ்க்கை (என் அளவுகோலில்)
நாசமாகபோனதற்கு கிரிக்கெட்டுக்கு முதல் பங்கு இருக்கிறது அல்லது நான்
கிரிகெட்டை தொலைத்ததும், என் வாழ்க்கை முன்னேற்ற பாதையில் பயணிக்க
தொடங்கியதும் சம காலத்தில் நடந்த எதார்த்த விபத்தல்ல!

நான் ஏன் என் சுயபுராணத்தை இங்கே பாடுகிறேன் என்றால், குறைந்தது ஒரு பதினைந்து
ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி, அது தொடர்புடைய வீரர்களிடம் பழகியதில்
நானறிந்து எங்கள் சமகாலத்தில் விளையாடிய ஒருவர் கூட பிராமணர் இல்லை. ஆனால்
அன்று முதல் இன்றுவரை தமிழகத்திலிருந்து  இந்திய அணிக்கு சென்ற அனைவருமே
பிராமணர்கள்! எடுத்துக்காட்டாக, ஸ்ரீ வெங்கடராகவன், கிருஷ்ணமாச்சாரி
ஸ்ரீகாந்த், சந்திரசேகர், பாரத் அருண், லக்ஸ்மண்  சிவராமகிருஷ்ணன், WV. ராமன்,
சடகோபன் ரமேஷ், சிறீதரன் ஸ்ரீராம், பாலாஜி, ரவிச்சந்திரன் அஸ்வின், முரளி
விஜய் (கிருஷ்ணா), பத்ரிநாத், பதானி, தினேஷ் கார்த்திக், முரளி கார்த்திக்
etc. *இது எப்படி சாத்தியமாகிறது என்றே விளங்கவில்லை?*

ஒரு வாதத்திற்கு பிராமணர்கள் இயற்கையாகவே (Genetically) விளையாட்டு வீரர்கள்
என்று வைத்துக்கொண்டாலும் கூட, கடந்த இருபது, முப்பது ஆண்டு காலத்தில்
தமிழகத்தை சேர்ந்த மற்ற பிரதான அணிகளான கால்பந்து, கபடி மற்று ஹாக்கி அணிகளை
அலங்கரித்தது முழுவதும் ஒடுக்கப்பட்ட மற்றும் இடைச்சாதியினரே! இங்கே மட்டும்
ஏன் பிராமண Genetic make-up வேலை செய்யவில்லை?* இதை தட்டி கேக்கவேண்டிய ஆண்ட
பரம்பரைகள் எந்த அந்தபுரத்தில் துயிலுறங்கினார்கள்? நவீன புரட்சியாளர்கள்
''மாற்றுக்குருபூசை'' சாதி ஒழிப்பு புரட்சியில் இதை கவனிக்க தவறி விட்டார்களோ?
அல்லது இதில் வோட்டு வங்கி அட்வான்டேஜ் இல்லையா?*

விளையாட்டை முதன்மை பாடமாக எடுத்து படித்து இந்தியன் வங்கிக்கு (தற்காலிகம்)
விளையாடிய ஆருயிர் நண்பன் Mohammed Rafik இனி வாழ  வழியே இல்லை என்ற நிலை
வந்தபோது கடைசியாக விளையாட்டு கோட்டாவில் 'சுங்க வரித்துரையில்' எடுபிடி வேலை
கிடைத்தது. 'மோகன் பகானுக்கு' விளையாடிய நண்பன்  குலோத்துங்கனுக்கு இன்னும்
ஏதும் கிடைக்கவில்லை. நண்பர்கள் ஆல்பர்ட்டுக்கும், பரீத்துக்கும் போலீஸ் வேலை
கிடைத்தது. எனக்கு மூத்த தலைமுறையினர் (சீனியர்ஸ்) பலர் டிஸ்ட்ரிக்ட்,
டிவிசினல், ஸ்டேட் என அனைத்து செர்டிபிகேட்களும் வைத்திருந்தும் கடைசிவரை வேலை
கிடைக்காமலே ரிடையர்ட் ஆகிவிட்டார்கள். இப்படியாக இவர்களின் விளையாட்டுத்திறன்
'இனிதே' முடித்துவைக்கப்பட்டு விட்டது. ஆனால் பிராமணர்கள் விளையாடும்
'ஹைபுரோபைல்' விளையாட்டுக்கு தேசம் முழுதும் இருளில் தத்தளிக்கும் போது
மெர்குரியில் மின்னொளி. அதனால், இப்போதெல்லாம் *IPL அரங்கத்தை தாண்டி
ஜொலிக்கும் மின்னொளியை பார்க்கும் போதெல்லாம், யாரோ வேசித்தொழிலுக்கு  விளக்கு
பிடிப்பதை போன்றே உணருகிறேன்!*

சரி, கிரிக்கெட் வெறும் விளையாட்டுதானே, அதற்கும் சமூக அவலங்களுக்கும் ஏதாவது
தொடர்பு இருக்கா? எல்லோருக்கும் எளிதில் புரியும் ஈழ அரசியலை பார்ப்போம்! *2008/09
தமிழின வரலாற்றின் கருப்பு வருடங்கள். *2008-இல் மும்பை பாகிஸ்தானிய
தீவிரவாதிகளால் (!) தாக்கப்படுகிறது. கோபத்தில் அடுத்து சில மாதங்களில்
பாகிஸ்தானோடு நடக்கவேண்டிய கிரிக்கெட் தொடரை ரத்து செய்கிறது கிரிக்கெட்
ஆணையம். இந்த தேசத்தின் ஒவ்வொரு அணுவையும் நம் கண்ணுக்கு தெரியாமல் நகர்த்தும்
முதலாளிகளுக்கு வருமானம்? அதற்கு பதிலாக, உடனடியாக இலங்கையுடன்
மாற்று-ஒப்பந்தம் கையொப்பம் இடப்பட்டு கிரிக்கெட் தொடருக்கு ஏற்பாடாகிறது! அதே
சமகாலத்தில் *முள்ளிவாய்க்காளில் விழுந்த கொத்துக்குண்டுகளின் வேட்டு
சத்தமும், மரண ஓலமும் உங்கள் காதுகளில் விழாமல் இந்திய வீரர்களின் (!!!)
அதிரடி ஆட்டத்துக்கு நடுவே தேச பற்றாளர்களின் கைதட்டல்களாலும், விசில்
சத்தங்களாலும்  மறைக்கப்படுகிறது.* சில நூறு பேரை கொன்ற பாகிஸ்தான்
எதிரியானது, பல்லாயிரம் மக்களோடு சேர்த்து எம் இனத்தையும் அழித்த இலங்கை
நட்புனாடனது.  பாகிஸ்தான் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டை நேரடி ஒலிபரப்பு
செய்த ஊடகங்களும், இந்திய அரசும், முள்ளிவாய்க்காளுக்கு கண்ணீர் அஞ்சலி
போஸ்டர் ஒட்டிய எங்களை தேச துரோகிகள் பட்டமளித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில்
அடைத்தன.

சரி, உங்கள் ஆதர்ச நாயகர்களையாவது பார்ப்போம்! *ஃபெராரி கார் நிறுவனம்
டெண்டுல்கருக்கு 2002 இல் Ferrari 360 Modena என்ற ஒரு  காரை அன்பளிப்பாக
வழங்குகிறது. *அதற்கு இறக்குமதி வரி கட்டவேண்டியதை அறிந்தும், கட்டாமல்
இந்தியா கொண்டுவருகிறார் (ஆச்சர்யக்குறி!!!). பின்னர் பொதுநல வழக்கு போடப்பட்ட
பின்னும் கூட வரியை கட்டாமல் அரசிடம் வரி விலக்கு கேட்கிறார். அரசும்
டெண்டுல்கருக்காகவே சட்டத்தை திருத்துகிறது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி
சம்பாரிக்கும் ஒரு வீரனால், தேசத்தின் ஆதர்ச நாயகனால் தாய்நாட்டுக்கு வரி கட்ட
முடியாமல் போனது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இல்லை, அந்த காரை மனதார
விரும்பினார் என்ற வாதத்தையும் ஏற்க முடியாது, ஏனெனில் அன்பளிப்பாக
வழங்கப்பட்ட காரை சூரத்தை சேர்ந்த ஜெயேஷ் தேசாய் என்ற ஒரு தொழிலதிபருக்கு
விற்று பணம் பார்க்கிறார் உங்கள் ஆதர்ச நாயகன். *நாமோ வேண்டியவர்கள் வழங்கும்
சாக்லேட்டின் கவரை கூட பத்திரப்படுத்தி வைக்கிறோம்; நம் ஆதர்ச
நாயகனுக்குத்தான் எவ்வளவு பெரிய 'சின்னப்புத்தி'?*

இந்த அயோக்கியத்தனத்துக்கு துணை போகும் இந்திய அரசாங்கம்! ஆஸ்திரேலியாவில்
நடக்கும் தொடரில் கருப்பின வீரன் ஆண்ட்ரூ சைமண்ட்சை குரங்கு என்கிறார்
ஹர்பஜன். பொதுவாக, உலகம் முழுவதும் விளையாட்டில் இன/நிறவெறிக்கு எதிராக ஜீரோ
டாலரன்ஸ் (Zero Tolerance) கடைபிடிக்கப்படுகிறது. நடுவர்கள் குற்றச்சாட்டை
உறுதி செய்து ஹர்பஜனை போட்டியில் இருந்து சஸ்பென்ட் செய்கிறார்கள். இந்திய
அரசாங்கமே நேரடியாக தலையிட்டு ராசதந்திர அழுத்தம் கொடுக்கிறது. ஹர்பஜனை
போட்டியில் சேர்க்கவில்லை எனில் பாதியிலேயே நாடு திரும்புவோம் என்கிறது
ஆணையம், அதற்கு ஆதரவு தெரிவித்து தேசபற்றாளர்களும், ஊடகங்களும் பொங்கி
எழுகிறார்கள். *இந்த தேசத்தின் லட்சணத்தால் அரபு நாடுகளிலும்,
சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் அடிமைப்பிழைப்பு பிழைக்கும் மக்களுக்காக ஒரு
இம்மியளவும் இராசதந்திர நடவடிக்கைகளில் இறங்காத அரசாங்காம், ஒழுங்கீனமான தனது
விளையாட்டு  வீரனுக்கு இறங்குவது எத்துனை பெரிய கவேலமான செயல்! *

பள்ளிப்படிப்பை இறுதிவரை கூட முடிக்காதவர்களுக்கு திடிரென பணத்தை கோடிகளில்
பார்க்கும் போது மனம் ஒருநிலைப்படாது, சஞ்சலம், கவன சிதறல் ஏற்படும் என்கிறது
உளவியல். மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற உலக கோப்பை போட்டிகளில் கோப்பையை
வெல்லும் என ஆருடம் சொல்லப்பட்ட இந்திய அணி தகுதி சுற்றிலேயே மண்ணை
கவ்வுகிறது. மீண்டும் அரைவேக்காடு தேசப்பற்றாளர்கள் பொங்கி எழுகிறார்கள்,
தேசத்தின் மானம் போய்விட்டதாக (ஏதோ புதிதாக) குதித்தார்கள். உடனடியாக,
வீரர்களின் கோடிக்கணக்கான விளம்பர வருவாயில் கட்டுப்பாடுகள்
விதிக்கப்படுகிறது. வீரர்கள், மாவீரன் டெண்டுல்கர் தலைமையில் புரட்சி
செய்தார்கள், அன்று மாலையே 'முதலை' சரத் பவார் இல்லம் சென்றார்கள்.
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன! மாறாக, கிரிக்கெட் ஒரு விஞ்ஞானம் என்றால் அதன்
தலைமை விஞ்ஞானி என்று போற்றப்படும் 'சேப்பலை' பயிற்சியாளர் (அந்த
கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை வழங்கிய) பதவியில் இருந்து நீக்கினார்கள்!

இந்த அயோக்கியத்தனத்துக்கெல்லாம் யார் காரணமாக இருக்க முடியும்? நீங்களும்
நானும்தான்! *என் தமிழ் சாதி அடிமைப்படுவதை டிவி முன்னும், மைதானத்திலும்
அமர்ந்து கைகொட்டி ஆரவாரம் செய்யும் என்னைவிட அயோக்கியன் யாராக இருக்க
முடியும்? *எனக்கு தமிழன் என்ற அடையாளமும், தமிழ் பற்றும் ஒரு கேடு! அதனால்
இப்போதெல்லாம் கிரிக்கெட் என் பள்ளி வாழ்க்கையை நினைவூட்டுவதை விட
முள்ளிவாய்க்காலை அதிகம் நினைவூட்டுவதால் என்னுள் இருந்த 'கிரிக்கெட்டின்
மீதான காதல்' மெல்ல மெல்ல தற்கொலை செய்து கொண்டது! அதை பற்றி எனக்கு பெரிதாக
வருத்தம் ஏதும் இல்லை, ஏனெனில் அது நடவாது போய் இருந்தால் என்னுள் இருந்த
தமிழ் செத்துப்போய் இருக்கும், பல நண்பர்களுக்கு நிகழ்ந்தது போல!

இதை கடுமையாக எதிர்க்க வேண்டியது தமிழ் தேசியத்தின் கடமை, காரணம் சினிமா,
கிரிக்கெட், குடி போன்றவற்றால் கடுமையாகவும், நேரடியாகவும் பாதிக்கப்படுபவன்
தாழ்த்தப்பட்டவனும், ஒடுக்கப்பட்டவனுமே! ஏனெனில் இவை மூன்றும் தமிழன் என்ற
அடிப்படை உணர்வுகளையும்,  அடையாளங்களை மழுங்கச்செய்து, தான் அடிமைப்பட்டு
கிடப்பதை மறக்கச்செய்து எருமைத்தோல் கொண்ட ஈனத்தமிழனையே உருவாக்கும்.

வெட்கத்துடன்,

கிரிகெட்டை சுவாசித்து உயிர்வாழ்ந்த கிருஷ்ணா என்கிற கலகக்காரன்!




http://groups.google.com/group/thanthaiperiyar/browse_thread/thread/c7b709b4374dc474

குழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.


விடுமுறை தொடங்கியாச்சு நம் வீட்டு சுட்டிகளின் சேட்டைகளை குறைத்து அவர்களின் ஞாபகசத்தி மற்றும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை வீடியோவுடன் சொல்ல ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
புத்தகத்தை கொடுத்து படி என்றால் குழந்தைகளுக்கு சற்றே முகம் சுழிக்கும், எப்படி படிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லி கொடுப்பதை விட வீடியோ மூலம் சிறு குழந்தைகள் எப்படி எல்லாம் படிக்கின்றனர் என்பதை காட்டினால் போதும் அவர்களின் அறிவு மேலும் வளரும் அரிய பல நுனுக்கங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.neok12.com
இத்தளத்திற்கு சென்று குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை எளிதாக பார்க்கலாம். Physical videos, Life Sciences , Human body , Earth & Space , Geography , Social Studies , English , Math ,  History , Games , Activities போன்ற பல்வேறு துறைகளில் எந்தத்துறை சார்ந்த வீடியோக்கள் பார்க்க வேண்டுமோ அதை சொடுக்கி அதிகப்படியான் வீடியோக்களை பார்க்கலாம்.ஓவ்வொரு வீடியோவும் குழந்தைகளுக்கு பயனுள்ள வீடியோவாகவே இருக்கிறது.ஓயாமல் படி படி என்று சொல்வதை விட இது போல் குழந்தைகளுக்கு வீடியோ மூலம் அறிவை புகட்டும் தளங்களை தெரியப்படுத்தினால் அவர்களின் அறிவு மேலும் பெருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இத்தளத்தை
அறிமுகப்படுத்துவதில் வின்மணி பெருமிதம் கொள்கிறது !.
1 நிமிட வீடியோ கோப்புகளை பிளாஷ் கோப்புகளாக ஆன்லைன் மூலம் இலவசமாக மாற்றலாம்.
வீடியோ மெயில் உலகில் எங்கிருந்தும் ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்பலாம்.
வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்.
வீடியோ சாட்டிங் ( Free Video Conferencing ) முகம் மட்டும் பார்த்து பேசலாம் புதுமையிலும் புதுமை.
 
THANKS:
http://winmani.wordpress.com/2012/04/20/kids-knowledge/

ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

ஆசிரியர் தகுதி தேர்வு மெட்டிரியல் தொகுப்பு!


y

TAMIL NADU TET MATERIALS AND QUESTION PAPERS | TAMIL NADU TRB MATERIALS AND QUESTION PAPERS |PLUS ONE STUDY MATERIALS AND QUESTION PAPERS | B.ED STUDY MATERIALS AND QUESTION PAPERS | M.ED STUDY MATERIALS AND QUESTION PAPERS | OTHER MATERIALS AND QUESTION PAPERS

    TET SYLLABUS, QUESTION PAPERS AND STUDY MATERIALS
  1. DINAKARAN TET | CHILD DEVELOPMENT AND PEDAGOGY AND TAMIL PART 3 
  2. DINAKARAN TET | CHILD DEVELOPMENT AND PEDAGOGY AND TAMIL PART 2 
  3. DINAKARAN TET | CHILD DEVELOPMENT AND PEDAGOGY AND TAMIL PART 1 
  4. TRB EDUCATION | TET குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் | Child Development and Pedagogy 001-824 - QUESTIONS 
  5. TET | PAPER I FOR SGT| MODEL QUESTION PAPER WITH ANSWER BY MRS MARAGATHAM, Rtd, Professor. 
  6. TET | PAPER II FOR BT SCIENCE AND MATHS | MODEL QUESTION PAPER WITH ANSWER BY MRS MARAGATHAM,Rtd, Professor. 
  7. TET | PAPER II FOR BT TAMIL,ENGLISH,SOCIAL SCIENCE | MODEL QUESTION PAPER WITH ANSWER BY MRS MARAGATHAM,Rtd, Professor. 
  8. TET | PAPER I FOR SGT| SYLLABUS WITH MODEL QUESTION PAPER RELEASED BY TRB. 
  9. TET | PAPER II FOR BT SCIENCE AND MATHS | SYLLABUS WITH MODEL QUESTION PAPER RELEASED BY TRB. 
  10. TET | PAPER II FOR BT TAMIL,ENGLISH,SOCIAL SCIENCE | SYLLABUS WITH MODEL QUESTION PAPER RELEASED BY TRB. 
  11. TRB SYLLABUS, QUESTION PAPERS AND STUDY MATERIALS
  12. TRB SYLLABUS FOR RECRUITMENT OF ASST PROF IN GOVT ENGINEERING COLLEGES .
  13. TRB SYLLABUS FOR RECRUITMENT OF LECTURERS IN GOVT POLYTECHNIC COLLEGES 
  14. TRB PG SYLLABUS 2012 FOR ALL SUBJECTS  
  15. TRB PHYSICS 100 QUES AND ANSWER BY D.Muthukumar, Ex.HOD of Physics, Rasipuram 
  16. TRB PG PHYSICS STUDY MATERIAL BY D.Muthukumar, Ex.HOD of Physics, Rasipuram  
  17. TRB PGT PHYSICS 2006-2007 QUESTION PAPER WITH ANSWER 
  18. TRB PGT COMMERCE QUESTION PAPER 2003-2004 BY SALAUDEEN  
  19. TRB BT SYLLABUS 2012 FOR ALL SUBJECTS 
  20. TRB-CHEMISTRY IMPORTANT QUESTIONS WITH KEY ENGLISH MEDIUM 1 
  21. TRB-CHEMISTRY IMPORTANT QUESTIONS WITH KEY ENGLISH MEDIUM 2 
  22. TRB-BT 2009-TAMIL-Q.P-WITH-KEY-ANSWERS 
  23. TRB-BT 2009-ENGLISH-Q.P-WITH-KEY-ANSWERS 
  24. TRB-BT-2009-MATHS-Q.P-WITH-KEY-ANSWERS 
  25. TRB-BT-2009-PHYSICS-Q.P-WITH-KEY-ANSWERS 
  26. TRB-BT-2009-CHEMISTRY-Q.P-WITH-KEY-ANSWERS 
  27. TRB-BT-2009-BOTANY-Q.P-WITH-KEY-ANSWERS 
  28. TRB-BT-2009-ZOOLOGY-Q.P-WITH-KEY-ANSWERS 
  29. TRB-BT-2009-HISTORY-Q.P-WITH-KEY-ANSWERS 
  30. TRB-BT-2009-GEOGRAPHY-Q.P-WITH-KEY-ANSWERS 
  31. PLUS ONE QUESTION PAPERS AND STUDY MATERIALS
  32. +1 ZOOLOGY STUDY MATERIAL TAMIL MEDIUM 
  33. +1 ZOOLOGY ONE MARK WITH ANSWER 
  34. IGNOU M.ED QUESTION PAPERS AND STUDY MATERIALS
  35. IGNOU M.ED MES-052 - STUDY MATERIAL 
  36. IGNOU M.ED MES-053 - STUDY MATERIAL 
  37. IGNOU M.ED MES-054 - STUDY MATERIAL 
  38. IGNOU M.ED MES-055 - STUDY MATERIAL 
  39. IGNOU M.ED MESE-056 - STUDY MATERIAL  
  40. IGNOU M.ED MESE-058 - STUDY MATERIAL 
  41. IGNOU M.ED MESE-066 - STUDY MATERIAL
  THANKS:
http://trb.muruganandam.in/2012/04/tamil-nadu-tet-materials-and-question.html?

வியாழன், ஏப்ரல் 19, 2012

உங்கள் கணினிக்கு தேவையான 300 இலவச மென்பொருள்



Office

OpenOffice - office suite
Ms office 2010-office suite
PC Suite 602
 - office suite
AbiWord
- text editor
Atlantis Nova
- text editor
Microsoft PowerPoint Viewer
 - power point files viewer
Adobe Reader
- pdf reader
Foxit PDF Reader
- pdf reader
PDFCreator
- create pdf documents
Doc Convertor
 - document convertor
Convert
- unit convertor
Converber
- unit convertor
Sunbird
- calendar/organizer
EssentialPIM Free
- calendar/organizer
PhraseExpress
- speed up your writing
ATnotes
- create notes on the desktop

Archive managers

7-Zip - compression program
IZArc
 - compression program
TugZIP
 - compression program
CabPack
- compression program
Universal Extractor
- extract files from any type of archive

Internet

Firefox - web browser
Google Chrome-web browser
Internet Explorer
- web browser
Maxthon
- web browser
Opera
- web browser
Avant Browser
- web browser
Thunderbird
- email client
PopTray
- check for emails
Free Download Manager
- download manager
FlashGet
 - download manager
WellGet
- download manager
Download Master
- download manager
WGET
- commandline download manager
HTTrack
- offline browser
WebReaper
- offline browser
Yeah Reader
 - RSS reader
GreatNews
 - RSS reader
RSSOwl
- RSS reader

P2P

µTorrent - torrent client
Azureus
- torrent client
BitComet
- torrent client
ABC
- torrent client
BitTornado
- torrent client
eMule
- p2p client
SoulSeek
- p2p client
Shareaza
- p2p client
DC++
- Direct Connect network client
PeerGuardian
- IP blocker

Chat

Miranda - chat client
MSN Messenger
- chat client
Yahoo Messenger
- chat client
QIP
- chat client
Gaim
- chat client
JAJC
- chat client
HydraIRC
- IRC client
Talkative IRC
- IRC client
IceChat
- IRC client
Skype
- VOIP client
Google Talk
- VOIP client
VoipStunt
- VOIP client
Gizmo
- VOIP client
Wengo
- VOIP client

Security

AVG Free - antivirus
Avast Home Free
- antivirus
AntiVir PersonalEdition
- antivirus
BitDefender Free
- antivirus
ClamWin
- antivirus
CyberDifender
 - Internet Security Suite
Ad-aware
- anti-spyware
Spybot: Search & Destroy
- anti-spyware
Windows Defender
- anti-spyware
SpywareBlaster
 - anti-spyware
Spyware Terminator
- anti-spyware
Tootkit Reveaker
 - rootkit detection utility
Winpooch
 - system protection
HiJack Free
- system protection
HighJackThis
- hijackers detector and remover
Kerio Personal Firewall
- firewall
Sygate Personal Firewall
 - firewall
ZoneAlarm
 - firewall
AxCrypt
- file encryption
Simple File Shredder
- securely delete files
PuTTy
 - SSH client
KeePass
- password manager
LockNote
- password manager
nPassword
- password manager
Microsoft Baseline Security Analyzer
- identify security misconfigurations

Network

Hamachi - VPN client
RealVNC
- remote control
UltraVNC
- remote control
Ethereal
- local area network administration
The Dude
- network administration
Wireshark
- network administration
Angry IP Scanner
- IP scanner
IP-Tools
 - IP scanner
Free Port Scanner
- IP scanner
NetMeter
- network bandwidth monitoring

Servers

FileZilla - FTP client
FileZilla Server
- FTP server
EFTP
- FTP client/server
XAMPP
- integrated server package of Apache, mySQL, PHP and Perl
WAMP
- Apache, PHP5 and MySQL server

Audio

Foobar2000 - audio player
WinAmp
- audio player
1by1
- audio player
JetAudio
- audio player
XMPlay
- audio player
Xion
- audio player
Apollo
- audio player
MediaMonkey
- music organizer
The GodFather
- music organizer
dBpowerAMP
- audio converter
Audacity
- audio converter
WavePad
- audio converter
Kristal Audio Engine
- audio editor
Exact Audio Copy
- CD ripper
Audiograbber
- CD ripper
CDex
- CD ripper
Mp3 Tag Tools
- tag editor
Mp3tag
- tag editor
Taggin’ MP3
- tag editor
Monkey’s Audio
- APE compressor/decompressor
mpTrim
 - mp3 editor
WavTrim
 - wave editor
EncSpot Basic
- analyse mp3 files

Video

Windows Media Player - audio/video player
VLC
- video player
Media Player Classic
- video player
MV2Player
- video player
CrystalPlayer 1.95
- video player
Zoom Player
- video player
GOM Player
- video player
viPlay
- video player
DSPlayer
- video player
VirtualDub
- video editor
CamStudio
- video screen recording
AviSplit
- Avi splitter
Video mp3 Extractor
- rip audio from video files
Free iPod Converter
- convert all popular video formats to iPod video
MediaPortal
- turning your PCinto a Media Center
The FilmMachine


Image

Gimp - image editor
PhotoFiltre
- image editor
Paint.net
- image editor
ArtRage
 - image editor
Artweaver
- image editor
IrfanView
- image viewer
Picasa
- image viewer
XnView
- image viewer
FastStone Image Viewer
- image viewer
FuturixImager
 - image viewer
Easy Thumbnails
- create thumbnails from images
JoJoThumb
- create thumbnails from images
iWebAlbum
 - create web photo albums
JAlbum
- create web photo albums
3D Box Shot Maker
 - design quality box shot
FastStone Capture
 - screen capture
WinSnap
 - screen capture

3D

Blender3D - 3D renderer
3Delight Free
- 3D renderer
SketchUp
- 3D modeling
Maya Learning Edition
- 3D modeling

Developers

AutoIt - task automation
SciTE4AutoIt3
- text editor for AutoIt
AutoHotkey
 - task automation
PHP Designer
- PHP editor
Notepad++
- text editor
ConTEXT Editor
- text editor
PSPad
- text editor
FoxEditor
 - text editor
Crimson Editor
 - source code editor
Elfima Notepad
 - text editor
Notepad2
 - text editor
Nvu
- HTML editor
Alleycode
 - HTML editor
BlockNote
 - web page editor
Weaverslave
- web page editor

CD/DVD

DeepBurner - CD/DVD burner
CDBurner XP Pro
- CD/DVD burner
BurnAtOnce
- CD/DVD burner
Express Burn
- CD/DVD burner
Zilla CD-DVD Rip’n’Burn
- CD/DVD burner
ImgBurn
- ISO, BIN burner
Daemon tools
- virtual CD/DVD
DVD Decrypter
- DVD ripper
DVD Shrink
- DVD ripper
Nero CD-DVD Speed
 - CD/DVD info and quality test

Codecs

GSpot - codec information
AC3Filter
- audio codec
Xvid
- video codec
QuickTime Alternative
- video codec
Real Alternative
- video codec
K-Lite Codec Pack
- all codecs

System Ulilities

CCleaner - system cleaner
xp-AntiSpy
- OS setup
jv16 Powertools
- system utilities
XP SysPad
- system monitoring utility
What’s Running
- process guard
Registrar Lite
- registry editor
WinIPConfig
- replacement for “ipconfig.exe” and “route.exe”
Unlocker
- file eraser
Eraser
- secure file eraser
Undelete Plus
- file recovery
freeCommander
- file manager
ExplorerXP
 - file manager
Duplicate File Finder
- find all duplicate files
Ant Renamer
- file renaming
ReNamer
- file renaming
Icons From File
- icos extractor
Chaos MD5
- MD5 generator
HashTab
 - MD5, SHA1 and CRC-32 file hashes
Rainlendar Lite
- desktop calendar
Weather Watcher
- weather firecast
Subtitle Workshop
- subtitles editor
Ant Movie Catalog
- movie organizer
Disclib
- CD organizer
Dexpot
- virtual desktops
DriveImage XML
- create partition images
MozBackup
- backup and restore bookmarks, etc.
SyncBack
- system backup
Atomic Cock Sync
- syncronize your clock
Citrus Alarm Clock
- alarm clock
TaskSwitchXP
- Alt-Tab replacement
Launchy
- application launcher
allSnap
- make all windows snap
Sysinternals Tools
- various system tools
StrokeIt
 - mouse gestures
Net Profiles
- create profiles of your network settings
ResourceHacker
- view, modify, rename, add, delete
Java Runtime Environment
- java for Windows

UI Enhancements

RocketDock - application launcher
AveDesk
- desktop enhancer
IconPhile
 - customize windows’s system icons
CursorXP Free
- change mouse cursors
MacSound
- volume control
LClock
 - Windows Longhorn clock
Y’z Dock
- application launcher
Y’z Shadow
- shadow effect to the windows
Y’z Toolbar
- change the toolbar icons in Explorer and Internet Explorer
Taskbar Shuffle
- rearrange the programs on the taskbar by dragging
Visual Task Tips
- thumbnail preview image for each task in the taskbar
Badges
 - put badges on any folder or file
Folderico
 - change icons of the folders
Folder Marker
- mark your folders
Folder2MyPC
- add favourite locations to My Computer
Microsoft TweakUI
- system settings
BricoPacks
- shell packs
ShellPacks
- shell packs
Tango Shell Patcher
- shell patcher
XPize
- GUI enhancer
Vista Transformation Pack
 - complete visual style
Vista Sound Scheme
- Windows Vista sound scheme
Royale Theme
 - visual style

Hardware monitoring/Benchmarking

CPU-Z - cpu information
CrystalCPUID
- cpu information
Central Brain Identifier
- cpu information
Everest
- system information
SiSoft Sandra
 - system information
SpeedFan
 - hardware monitor
Memtest86
- memory test
PowerMax
- HDD test
3Dmark 06
 - 3D game performance benchmark
Aquamark
 - performance benchmark
rthdribl
- 3D benchmark
Fraps
 - 3D benchmark, fps viewer and screen recorder
Prime 95
 - cpu benchmarking
SuperPI
 - cpu benchmarking
CPU Rightmark
 - cpu overclock
Core Temp
 - cpu temperature
ATiTool
 - video overclock
ATI Tray Tools
- Radeon tweaker
aTuner
 - GeForce and Radeontweaker
RivaTuner
- video overclock
Nokia Monitor Test
 - monitor adjustmets
UDPixel
- fix dead pixels

Games

123 Free Solitaire - solitaire games collection
Arcade Pack
 - classic arcade games
Live For Speed
- online racing simulator
Enigma
- puzzle game
Freeciv
- multiplayer strategy game
Tux Racer
- race down steep, snow-covered mountains

Education

SpeQ Mathematics - mathematics program
Dia
- diagram creation program
Google Earth
- explore the world
NASA World Wind
- 3D virtual globe
Celestia
- explore the space
Stellarium
- planetarium

Miscellaneous

nLite - Build your own custom Windows disk.
VirtualPC
- create virtual machines
grabMotion
 - webcam capture
iDailyDiary
- simple page-for-a-day diary
Pivot Stickfigure Animator
- create stick-figure animations
Wink
- create presentations
Scribus
- professional page layout
FreeMind
- midn mapping software
Windows Live Writer
- WYSIWYG blog authoring

Wallpapers

Michael Swanson - 1920 x 1200; 1600 x 1200; amazing wallpapers
Mikhail Arkhipov
 - 1920 x 1200; 1600 x 1200; amazing wallpapers
 
THANKS:
http://www.anbuthil.com/p/300-free-software-for-your-computer.html