இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அழகான புதுமையான நிறுவனத்திற்கு தேவையான போஸ்டர் ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்.
http://winmani.wordpress.com/2012/01/07/poster-make/
புதிதாக நிறுவனம் ஆரம்பிக்க இருக்கும் நண்பர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் போஸ்டரும் ஒன்று , சொல்ல வேண்டியதை எப்படி அழகாக போஸ்டரில் காட்டலாம் என்று நமக்கு சொல்வதோடு மட்டும் இல்லாமல் உருவாக்கியும் கொடுக்கிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
இணையதள முகவரி: http://www.posterini.com
இத்தளத்திற்கு சென்று Select Photo என்ற பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும், நாம் தேர்ந்தெடுத்த புகைப்படம் வலதுபக்கம் தெரியும், இடது பக்கம் எண் 1 என்று குறிப்பிடப்பட்டிருக்கும் Poster Style என்பதில் நமக்கு பிடித்த சரியான Poster Styele-ஐ தேர்ந்த்தெடுத்துக்கொள்ளவும், அடுத்து எண் 2 -ல் இருக்கும் Apply Art Filter என்பதில் எழுத்துருக்கள் எந்த வகையில் ஆர்ட் செய்யப்பட்டிருந்தால் நன்றாக இருக்குமோ அதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து எண் 3-ல் Select Output Magic என்பதில்போஸ்டரின் Output Integration-ஐ தேர்ந்தெடுக்கவும் நான்காவது Step-2 ல் Customize என்பதை சொடுக்கி போஸ்டரை நம் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் முழுமையாக மாற்றி அமைக்கலாம். எல்லாம் மாற்றிய பின் Generate என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Download என்பதில் இருக்கும் Basic Poster என்ற பொத்தானை சொடுக்கி போஸ்டரை நம் கணினியில் சேமிக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு போஸ்டர் உருவாக்க விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதா இருக்கும்.
நம் புகைப்படத்துடன் ஹாலிவுட் மூவி போஸ்டர் (Hollywood Movie Poster ) உருவாக்கலாம்.
உலகநாடுகளின் பணத்தில் உங்கள் புகைப்படம் இருக்க
கோப்புகளையும் புகைப்படங்களையும் விளம்பரம் இல்லாமல் எளிதாக அனுப்ப உதவும் தளம்.
ஆன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுபடுத்தாலம் சிறந்த எஃபெக்ட் கொடுக்கலாம் உதவும் பயனுள்ள தளம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக