செவ்வாய், ஜனவரி 31, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

127 Hours - உலக சினிமா..!

இயற்கையின் பொக்கிஷங்களான மலை, காடு, கடல், நீர்வீழ்ச்சிகள் இன்னும் பல.. இவற்றை ரசிப்பதென்பது எல்லோருக்கும் அமையப்பெறாத ஒன்று. அதை ரசிப்பதற்கும் ஒரு தனி மனசு வேண்டும். சிலர் இதை தனிமையில் ரசிக்க விரும்புவர் சிலர் கூட்டமாக சென்று ரசிக்க விரும்புவர்.

அப்படியான இயற்கையை ரசிக்க நாம் ஒரு தனிமையான இடத்துக்கு தனிமையில் பயணம் மேற்கொண்டு ரசித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஏதாவதொரு சிக்கலில் சிக்கிக்கொண்டால் நம்மனநிலை எப்பிடியிர்க்கும். மனித சஞ்சாரமேயில்லாதே ஒரு பகுதி மனிதர்கள் வந்தாலும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத இடம் இப்படியான நிலை வந்தால் நாம் என்ன செய்வோம் சிலர் பயத்திலேயே இறந்து விடுவோம், சிலர் என்னசெயவதென்று அறியாத பதற்றத்திலேயே முயற்சி செய்ய மறந்திடுவோம்.

இப்படியானதொரு இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்ட இளைஞனின் கதைதான் இந்த 127 hours படம்.. இப்படத்திற்கு இசை நம்ம இசையப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இயக்கம் slumdog millionaire திரைப்படத்தை இயக்கிய Danny Boyle. Aron ralston ஆக பிரதான பாத்திரம் ஏற்று நடித்தவர்.James Franco. இது Aron ralston என்ற மலை ஏறுபவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தனது வார இறுதி நாட்களை சந்தோஷமாக களிபபதற்காக aron தனக்கு தேவையான பொருட்களை கொஞ்சம் உணவு, கொஞ்சம் தண்ணீர் உட்பட எடுத்துக்கொண்டு கிளம்புகிறான கொஞ்சம் தூரம் பயண்ம செய்து தனது வண்டியை நிறுத்திவிட்டு தனது மலையேறும் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு ஒரு மலைத்தொடர் நோக்கி பயணிக்கிறான்.. அவனின் பயணத்தோடு சேர்த்து கேமராவும் பயணிக்கிறது அது ஒரு மிகவும் அழகான பிரதேசம் அதை காட்டிய விதம் கொள்ளை அழகு.. ஒளிப்பதிவு இத்திரைப்படத்தின் மிக முக்கியமாக கூறப்படவேண்டிய ஒன்று வேறு எந்த படத்திலும் இயற்கையை நான் இவ்வளவு ரசித்ததில்லை.. அவ்வளவு அழகான காட்சிகள் அது.

இந்த பயணத்தில் நடுவே இரண்டு பெண்களையும் சந்திக்கிறான். அவர்களோடு சேர்ந்து மலை இடுக்கில் உள்ள ஒரு நீர் தடாகத்தில் விழுந்து குளித்து குதூகலித்துவிட்டு கிளம்புகிறான். போய்க்கொண்டிருக்கும் போது ஒரு பாறை இடுக்கில் கால் தவறி விழுந்து விடுகிறான். விழும்போது அவனுடன் சேர்ந்து ஒரு பாராங்கல்லும் உருண்டு வந்து அவன் ஒரு கையை மலை இடுக்கோடு சேர்த்து மாட்டிவிடுகிறது கல்லுக்குல் மாட்டிக்கொண்ட கையை எடுக்க எவ்வளவோ முயற்சி செய்கிறான் முடியாமல் போகிறது.. உதவி செய்யவும் யாருமில்லை எவ்வளவுதான் சத்தம் போட்டாலும் வெளியில் கேட்க வாய்ப்பில்லை.தன்னிடமுள்ள எல்லா பொருட்களையும் கொட்டி அவற்றினால் ஏதாவது பலன் கிடைக்குமா என சிந்திக்கிறான். அவனிடமுள்ள சிறிய கத்தியொன்றை பயன்படுத்தி கல்லை செதுக்கி கையை எடுக்கப்பார்க்கிறான் அதுவும் பலனில்லாமல் போகிறது.

இப்படியான தொடர் போராட்ட்ம ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து நாட்கள் தொடர்கிறது. கொண்டுவந்த நீரும் உணவும் ஏற்கனவே தீர்ந்துவிட்டது தாகம் தொண்டையை வரட்டவே தன்னுடை சிறுநீரை பருகவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகிறான்.. ஒரு நாளைக்கு காலையில் 15 நிமிடம்  மட்டுமே சூரிய ஒளியை பார்க்கிறான்.. மற்ற நேரன்ங்களில் அந்த இடத்துக்கு சூரிய ஒளி படுவதில்லை. இதற்கிடையில் சீனப்பொருட்களுக்கு கிண்டலடிக்கிறான். தனது கையில் உள்ள கத்தி, சீனாவில் தயாரிக்கப்பட்டதென்றும் அதனால் இப்போது எந்த பலனும் இல்லை. ஆகவே சீனப்பொருட்களை வாங்கி ஏமாறாதீர்க்ள் என்கிறான்.

தனது எல்லா நடவடிக்கைகளையும் தனது ரெகோடிங்க கேமராவில் பதிந்து வைக்கிறான்.. இதனூடே அவனுக்கு பல பழைய ஞாபகங்கள் நினைவுக்கு வந்து போகிறது.. தனது தாய், நண்பர்கள் எல்லோரையும் நினைவு கூறுகிறான். அவர்களை இனி பார்க்க முடியாமல் போய்விடுமோ என ஏங்குகிறான்,.

அவர்களுக்கு சொல்ல ஆசைப்படுவதையும் பேசி பதிந்து வைக்கிறான். இறுதியில் எதுவும் கைகூடாதநிலையில், பாறையிடுக்கில் மாட்டிக்கொண்ட தனது கையை வெட்டிவிட்டுத்தான் அந்த இடத்திலிருந்து விடைபெற முடியும் என்பதை உணர்கிறான்.. கையை வெட்டினானா.. அவன் என்னவானான் என்பதே மீதிக்கதை.

கருத்துகள் இல்லை: