வியாழன், டிசம்பர் 22, 2011

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

http://tamilpithukkal.blogspot.com/2011/12/android-os.htmlமுதலில் நாங்கள் எவ்வாறு Android யை பிளாஷ் டிரைவில் நிறுவது என பார்ப்போம். 
இந்த செய்முறையை அனுகுவதற்கு, உங்களது பிளாஷ் டிரைவ் கணணியில் 250MB வெற்று நினைவகத்துடன் பொருத்தப்பட்டுள்ளதா என உறுதிபடுத்தி கொள்ளுங்கள். அடுத்த கட்டமாக அண்ட்ராய்டு OS யை இங்கே தரவிறக்கம் பண்ணவும். 

கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பில் கிளிக் செய்து தரவிறக்க பக்கத்திற்கு செல்லுங்கள், அங்கே android-x86-1.6-r2.iso  கோப்பிற்க்கு கிழே view என்ற இணைப்பை அழுத்துங்கள் (கிழே படத்தில் காட்டப்பட்டவாறு).
 அதன் பின்பு பிளாஷ் டிரைவ்யில் இருந்து boot செய்வதற்க்கு  நீங்கள் இன்னும்மொரு UNetbootin என்ற விண்ணப்பத்தை  (application) தரவிறக்கம் செய்துகொள்ளவேண்டிவரும். இதை இங்கே தரவிறக்கம் பண்ணவும். UNetbootin யை விண்டோஸ் பயனருக்கும், லினக்ஸ் பயனர்களுக்கும் என்று பிரித்து தரவிறக்க செய்துகொள்ளக்கூடிய வசதியை இந்த இணைப்பு பக்கம் உதவும்.  

குறிப்பிட்ட விண்ணப்பங்களை தரவிறக்கிய பின்னர், அடுத்த கட்டமாக boot-able பிளாஷ் டிரைவை உருவாக்கிகொள்ளவேண்டும். இந்த செயன்முறையை அனுகுவதற்க்கு முதலில் UNetbootine னை இயக்குங்கள். வரும் திரை கிழே காட்டப்பட்ட படத்தில் உள்ளவாறு காட்சியளிக்கும். அதில் Diskimage யை கிளிக் செய்து தரவிறக்கம் பண்ணிய Android ISO கோப்பை தெரிவுசெய்க. பின்னர் right flash drive அல்லது pen drive என்பதை தெரிவு செய்க. அடுத்து OK பொத்தானை அழுத்தி தொடருங்கள்.
இது குறிப்பிட்ட சில வினாடிகளில் அண்ட்ராய்டு OS கோப்பையை உங்களது பிளாஷ் டிரைவில் பதிவு செய்துகொள்ளும்.



குறிப்பிட்ட செயன்முறை முடிந்த பிறகு கணணியை Reboot அல்லது Exit செய்ய கேட்கும். நீங்கள் Android யை இயக்குவதற்கு விரும்பினால் reboot என்பதன் கிழே கிளிக் செய்யுங்கள். இல்லை என்றால் Exit யை கிளிக் செய்யுங்கள்.


அண்ட்ராய்டு OS யை boot செய்வதற்க்கு CD/DVD யை பயன்படுத்த வேண்டும். Windows Disk Image Burner என்ற விண்ணப்பத்தை இங்கே தரவிறக்கம் செய்து உங்களது ISO கோப்பை CD/DVD பயன்படுத்தி burning பண்ணிக்கொள்ளுங்கள். அதோடு சேர்த்து உங்களது நிலைவட்டிலும் (hard disk) இலகுவாக சேமித்து கொள்ளலாம்.


அண்ட்ராய்டு OS யை உங்களது கணணியில் பயன்படுத்தல்.
இப்போது நீங்கள் உங்களது Android OS யை எந்த நேரத்திலும் கணணியில் நிறுவுவதற்கு தயாராக உள்ளீர்கள். உங்களது சிஸ்டத்தை reboot செய்வதற்க்கு boot-able பிளாஷ் டிரைவை பொருத்தி, குறிப்பிட்ட pendrive யில் இருந்து boot செய்து கொள்ளுங்கள். பொதுவாக எல்லா கணணிகளும் பிளாஷ் டிரைவை பயன்படுத்தி தானாக boot செய்யாது. booting செயன்முறையை தொடர்வதற்கு நீங்கள் F2, F10 அல்லது வேறு விசை போன்றவை உங்களது PC’s பயாஸ் கட்டமைப்பில் (Bios configuration) தங்கியுள்ளது.

OS ஆனது USB devise யில் இருந்து நிறுவும் போது “Live CD-Run Android-x86 without installation” என்பதை தெரிவுசெய்க.

சில நிமிடங்களில் Android ஏற்ற ஆரம்பிப்பதற்கு   உங்களது திரையில் எழுத்து உரு ஓன்று  தோன்றும்.

பின்னர் திரையில் boot screen தோன்றும், Android’s booting மிக விரைவாக செயற்பாட்டை முடித்து. உங்களது கணணியில் Android desktop குறிப்பிட்ட சில நிமிடங்களில் தோன்றும்.


தொடர்ந்து உங்கள் திரையில் சில application தோன்றும். அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து desktop widget, change desktop background போன்றவற்றை add பண்ணிக்கொள்ளுங்கள்.


மெனுவை திறப்பதற்கு right-click யை அழுத்த வேண்டும்.
இப்போது உங்கள் திரையில் அழகான அண்ட்ராய்டு OS யின் மெனு அமைப்பு தோன்றும்.

இனி நீங்கள் உங்களது Android X86 உடன் பூந்து விளையாடுங்கள்.
நன்றி.http://tamilpithukkal.blogspot.com/2011/12/

கருத்துகள் இல்லை: