புதன், டிசம்பர் 14, 2011

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


குதித்து உயரும் பொருளாதாரம், ஏவுகணைத் தொழில்நுட்பம் முதல் ராக்கெட் தொழில்நுட்பம் வரை  வல்லரசுகளுக்கு சவால்விடும் அறிவியல் வளர்ச்சி, மற்ற நாடுகளில்  இருந்தெல்லாம் மக்களை சிகிச்சைக்காகக் கவர்ந்திழுக்கும் மருத்துவமனைகள் என்று பல வசதிகள் இருந்தாலும், அவசர காலத்தில் மக்களைக் காக்கும் விஷயத்தில் மட் டும் இந்தியா பின்தங்கி உள்ளது என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 
உப்கார் தியேட்டர் தீ விபத்து, கும்பகோணம் பள்ளி தீ விபத்து என்று நாம் வெட்கப்பட வேண்டிய விபத்துகளின் வரிசையில் இப்போது லேட்டஸ்டாக சேர்ந்திருக்கிறது  கொல்கத்தாவின் ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனை தீ விபத்து.

உயிர் காக்க வேண்டிய மருத்துவமனை, 89 உயிர்களை பலிவாங்கியிருக்கிறது. தீ விபத்துகளைத் தடுக்கும் குறைந்தபட்ச வசதிகூட இல்லாத ஒரு மருத்துவமனை எப்படி  உயர்தர மருத்துவமனை என்ற பெயரில் செயல்பட்டது? அதற்கு அரசு எப்படி அனுமதி அளித்தது? விபத்து ஏற்பட்டு இரண்டரை மணிநேரம் வரை தீயணைப்பு  வாகனங்கள் வராதது ஏன் என்றெல்லாம் அங்குள்ள மக்கள் மனதில் ஆயிரம் கேள்விகள்... வருத்தங்கள்... இந்த இக்கட்டான நிலையில், ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ. போல  நிலைமையை திறமையாக மேனேஜ் செய்திருக்கிறார் மம்தா.

தீ விபத்து பற்றி மம்தாவுக்குத் தகவல் சொன்ன அதிகாரிகள் கூடவே மற்றொரு தகவலையும் கூறியிருக்கிறார்கள். ‘‘தீ விபத்து சம்பவத்தால் அங்குள்ள மக்கள் கொதித்துப்  போய் இருக்கிறார்கள். மருத்துவமனை நிர்வாகம் விபத்து குறித்து தாமதமாகவே தகவல் கூறியது. அதனால் இரண்டு மணிநேரம் கழித்தே தீயணைப்பு வாகனங்கள் அங்கு  சென்றன. ஆனால் இந்தத் தாமதத்துக்கு அரசுதான் காரணம் என்று கருதும் மக்கள் உங்கள் மீதும் கோபமாக இருக்கிறார்கள். அதனால் அந்தக் கோபம் கொஞ்சம்  ஆறிய பிறகு நீங்கள் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றால் போதும்’’ என்று கூறியுள்ளனர். ஆனால் அதிகாரிகளின் இந்த வேண்டுகோளைப் புறந்தள்ளிவிட்டு அவசர  அவசரமாக பெரிய அளவுக்கு எந்தப் பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார் மம்தா.

முதல்வரின் கார் ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனையை நெருங்கியதும் அதிகாரிகள் எச்சரித்ததைப் போலவே மம்தாவைச் சூழ்ந்து கோஷமிட்டிருக்கிறார்கள் மக்கள். ஒரு கட் டத்தில் முதல்வரைக் காப்பாற்றுவதற்காக தடியடி நடத்த போலீஸார் தயாராகியுள்ளனர். இதனால் அங்கே நெரிசல் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நிலைமைக் கட் டுக்கடங்காமல் போவதைக் கண்ட மம்தா, உடனே மைக்கை கையில் எடுத்து ‘மக்கள் மீது எந்தக் கட்டத்திலும் தடியடி நடத்தக்கூடாது’ என்று போலீஸாருக்கு உத்தரவிட் டுள்ளார்.

இதைத் தொடர்ந்து மக்களிடம் பேசியவர், ‘‘நடந்திருக்கும் இந்த சோகச் சம்பவம் குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்  கூற வார்த்தைகளே  இல்லை. அதேநேரத்தில் இனி நடப்பதைப் பற்றி சிந்திப்போம். மருத்துவமனைக்குள் சிக்கியிருக்கும் மீதமுள்ளவர்களைக் காக்க உதவுங்கள். மூன் றாவது மாடியில் இப்போது மீட்புப் பணி நடக்கிறது.
விரைவில் மற்றவர்கள் மீட்கப்படுவார்கள்’’ என்று கூற, மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர்களைப்போல் கூட்டம் விலகியி ருக்கிறது. பிறகு, பக்கத்தில் இருந்த டீக்கடை ஒன்றின் பந்தலில் அமர்ந்து போலீஸ் அதிகாரிகளுடன் மீட்புப் பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்.

மருத்துவமனை மீட்புப் பணிக்கு போதிய வாகனங்கள் இல்லை என்று போலீஸார் சொல்ல, விளையாட்டுத்துறை அமைச்சர் மதன் மித்ராவுக்கு போன் போட்டவர், ‘‘நீங்கள்  என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது. உடனடியாக 30 ஆம்புலன்ஸ் வேன்களை இந்த இடத்துக்கு அனுப்பவேண்டும். காயமடைந்த மக்களை வேறு மருத்து வமனைகளுக்கும் பலியானவர்கள் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கும் அனுப்ப ஏற்பாடு செய்யவேண்டும்’’ என்று உத்தரவிட, சில நிமிடங்களில் வேன்கள் பறந்துவந் தன. முதல்வரே ஸ்பாட்டில் நின்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்பதை அறிந்ததும் மற்ற அமைச்சர்களும் பதறி அடித்துக்கொண்டு அங்கே வந்துள்ளனர்.

போலீஸாருடன் மம்தா பேசிக்கொண்டிருக்கும்போது ஓடிவந்து அவர் காலில் விழுந்த ஒரு பெண், ‘‘என் அண்ணன் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில்  அனுமதிக்கப் பட்டிருந்தார். அவரது நிலை என்னவென்றே தெரியவில்லை நீங்கள்தான் உதவவேண்டும்’’ என்று கூற, அதுவரை அந்தப் பெண்ணை புறக்கணித்த போலீஸ்  அதிகாரிகள் உடனே உதவத் தயாரானார்கள்.

காலை முதல் மாலை வரை தனது மற்ற பணிகளையெல்லாம் கேன்சல் செய்துவிட்டு அங்கேயே இருந்து மீட்புப் பணிகளைப் பார்வையிட்ட மம்தா, நிலைமை சீரான தும்தான் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். நக்சல்களால் தனக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் பாதுகாப்பு அதிகாரிகளின் துணையில்லாமல் மக்களோடு மக்களாக  நின்று தீ விபத்து நேரத்தில் பணியாற்றிய மம்தாவை கொல்கத்தாவாசிகள் பாராட்டியிருக்கிறார்கள்.
 ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனையில் நடந்ததுபோல் தீ விபத்தால் அதிக உயிர்கள் பலியாவதைத் தடுக்க சில அடிப்படை பாதுகாப்பு வசதிகள் அவசியம்.  அவை;

 மருத்துவமனைகளின் ஒவ்வொரு மாடியிலும் இரண்டு தீ விபத்துக் கருவியாவது இருக்கவேண்டும்.

 மாடிப்படிகள் அகலமாக இருக்கவேண்டும்.

 நோயாளிகள் எளிதில் செல்ல வசதியாக வழிகள் அகலமாக இருக்கவேண்டும்

 அவசர காலத்தில் வெளியேறும் வழியும் அதை அடைவதைக் குறிக்கும் வகையில் அம்புக்குறிகளும் இருப்பது அவசியம்.

 மருத்துவமனை காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். இதுபோன்ற மருத்துவமனைகளுக்கு மட்டுமே அரசு அனுமதியளிக்க வேண்டும். அல்லது கு றைந்தபட்சம் நாமாவது இத்தகைய வசதிகளைக் கொண்ட மருத்துவ மனையாகப் பார்த்து சேருவது நல்லது.
http://www.thedipaar.com/news/news.php?id=38244

கருத்துகள் இல்லை: