செவ்வாய், டிசம்பர் 13, 2011

‘ஏழாம் அறிவு’ திரைப்படம் ஒரு சீனப் படத்தின் தழுவல்‘

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
‘ஏழாம் அறிவுதிரைப்படம் ஒரு சீனப் படத்தின் தழுவல் என்று நீங்கள் உங்களுடைய வலைப்பூவில் பதிவு செய்து இருக்கிறீர்கள். ஒரு தமிழ்ப்படம் வெற்றி பெற்றால் அது ஒரு தழுவல், வழுவல் என்று சொல்ல சிலர் வந்துவிடுகிறார்கள். அதில் நீங்களும் ஒருவர். ஒரு தமிழர் இப்படி ஒரு பிரமாதமான படம் எடுத்து இருக்கிறாரே என்று பெருமை படுங்கள். வேதனைப் பட வேண்டாம். தமிழனே தமிழனை இழிவு படுத்தக் கூடாது.
ப: இணையத்தில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. நல்லதைப் பாருங்கள். கெட்டதை விடுங்கள். அதற்காக நான் ரொம்ப ரொம்ப நல்லவன் என்று சொல்ல வரவில்லை. இணையத்தில் தடுமாறிக் காலில் விழுவதைப் பார்க்காமல் தட்டிக் கழிக்க முடியுமா சொல்லுங்கள். இணையத்தில் சுத்த சைவம் என்று சொல்லி உத்தம வேஷம் போட முடியாது. அந்த மாதிரியான இடம் அது.

‘ஏழாம் அறிவுதிரைப்படம் ஒரு சீனப் படத்தின் தழுவல் என்பது உண்மை. அந்தப் படத்தின் பெயர் Da Mo Zu Shi அல்லது Master of Zen. 1994 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இந்தப் படத்தை யூ டியூப்பில் பார்க்கலாம். அதன் முகவரி: http://www.youtube.com/watch?v=xEu84QbN-b4

போதி தர்மர் பிறந்த ஊர் தென் இந்தியா என்று மட்டுமே படத்தில் சொல்லப் படுகிறது. ஆனால், அவர் உண்மையில் பிறந்த இடம் காஞ்சிபுரம். அவர் ஒரு பல்லவ இளவரசர்.

போதி தருமரை சீனர்கள் விஷம் வைத்து கொன்றாக படத்தில் வருகிறது. ஆனால், போதி தர்மர் இயற்கையாக மரணம் அடைந்தார். அவரைச் சீனர்கள் தெய்வமாக நினைக்கின்றனர். அவருக்காக ஷாலின் சிலைகள் வைக்கப் பட்டுள்ளன.

வரலாற்றைக் கையாளும் போது வரம்பு மீறிய பொய்மையைத் திணிக்கக் கூடாது என்பதே என்னுடைய கருத்து. இந்த விஷயம் ஷாலின் தற்காப்புக் கலைஞர்களுக்குத் தெரிந்தால்
ஏழாம் அறிவு தயாரிப்பாளர்களுக்கு (போதி) தர்மஅடி கிடைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

நுனிப்புல்லை மேய்ந்து விட்டு ஆணிவேரைப் பிடுங்கி விட்டதாக நினைப்பது ரொம்பவும் தப்பு.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கணினியும் நீங்களும் – 123

கருத்துகள் இல்லை: