வியாழன், டிசம்பர் 08, 2011

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

சென்னையைச் சுற்றி நான் எடுத்த புகைப்படங்கள்....

 நமக்கு சென்னையை நீள அகலத்தில் அளக்கிற வேலை!. அதாங்க... மார்கெட்டிங் ஜாப். எங்க எதப் பார்த்தாலும் உடனே....ஒரு 'கிளிக்'. அப்படி சென்னையை சுற்றி அவ்வப்போது  நான் எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...



'மெரீனாவில் எல்லோரும் ஜோடியோடு இருக்க...இந்த பனைமரம் மட்டும் தனிமையாய்...'


 
'உழைப்பின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்திய உழைப்பாளர் சிலை'

 
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும், எம்ஜிஆர்.
அது முடிந்த பின்னால்.... உறங்கும் இடம் இது...!
'கல்லறையில் காதுவச்சி கேட்டா....கடிகாரம் சத்தம் கேட்குமா....?'

 

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹால்.
இப்போது புதிய சட்டமன்றக் கட்டிடத்தில் மறைந்திருக்கிறது.
  



தேவாலயத்தை சுற்றி கல்லறைகள்!: ஆங்கிலேயே அதிகாரிகளின் கல்லறைகள் தேவாலயத்தைச் சுற்றி தரையில் புதைக்கப்பற்றிருக்கிறது. (அம்பு குறியிட்டு காட்டப்பட்டுள்ளது) சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் எடுக்கப் பட்ட படம்.





சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் எடுக்கப் பட்ட படம்.  நந்தவனம்....

 
வடபழனி சரவணா பவன் ஹோட்டல் வாசலில் உள்ள ஈச்ச மரம்.


நேப்பியர் பாலத்திற்கு அருகில் உள்ள கூவம் ஆற்றின் முகத்துவாரம். இந்த பாலத்தை நீங்கள் நிறைய திரைப்படங்களில் பார்த்திருக்கலாம்.


சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருகில் இருக்கும்,  போர் வீரர்கள் நினைவுத் தூண்.  
விஜிபி தங்க கடற்கரையில் வரிசை கட்டி நிற்கும் சிலைகள்.
நேப்பியார் பாலம். சினிமாவில் சென்னையின் அடையாளமாகக் காட்டப்படுகிறது...!

நேப்பியார் பாலம் லாங் ஷாட்!

அடையார் (ஆறு) கடலில் கலக்கும் கழி முகத்துவாரம்.

சென்னையில் ராஜஅண்ணாமலை புரத்தில் உள்ள ஒன்பது மாடி கட்டிடத்தில் இருந்து எடுத்தது.

சென்னையின் முக்கிய அடையாளம். LIC

திருநெல்வேலியிலிருந்து
 மதுரை செல்லும் சாலையில் இந்த பிரமாண்டமான முனிஸ்வரர் சிலை இருக்கிறது.... என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. சாக்ஷாத் சென்னை நகரின் மத்தியில் இப்படி ஒரு சிலை இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
விபரம் அடுத்தப் பதிவில்....!



"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அண்ணா சொன்னது;


அது படும்பாடு நீங்கள் அறிந்தது...! "


  http://tamilanveethi.blogspot.com/2011/12/chennai-photos.html

கருத்துகள் இல்லை: