புதன், டிசம்பர் 21, 2011

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நீங்கள் ஒரு பெற்றோரா? இத படிங்க முதல்ல..!!!(Childcare)

childcare
"குழந்தைகளுக்கு என்ன தெரியும்? அவர்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது? அவர்களைவிட என்னால் இன்னும் சிறப்பாகச் சிந்தித்து,நல்ல முடிவுகளை உடனடியாக எடுத்து செயல்பட முடியும். அவர்கள் தப்பும் தவறுமாக ஒரு நாளில் செய்து முடிக்கும் வேலையை பத்தே நிமிடங்களில் என்னால் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். குழந்தைகளோடு பேசி என் நேரத்தை நான் ஏன் வீணடித்துக்கொள்ள வேண்டும்? ' என்று பல பெற்றோர்கள் தவறாக முடிவெடுத்து தங்கள் குழந்தைகளிடம் விவாதிப்பதையோ அல்லது பேசுவதையோ தவிர்த்து வருகிறார்கள்.


பெற்றோர்களுடைய இந்தத் தவறான செய்கை, பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே ஒரு அடைப்புச் சுவரை உருவாக்கி, அவர்களைப் பிரித்துவிடுகிறது. குழந்தைகளாக இருக்கும்போது அவர்களுடைய ஆசைகளையும், அபிப்பிராயங்களையும் கேட்க பெற்றோர்களுக்கு நேரம் கிடைக்காவிட்டால், வயோதிக பருவத்தை அடைந்த பெற்றோர்களுடைய கஷ்டங்கள், தேவைகள் போன்றவைகளைக் கேட்டறிந்து, அவைகளை நிறைவேற்ற பெரியவர்களாக வளர்ந்து விட்ட அவர்களுடைய குழந்தைகளுக்கு நேரமும், விருப்பமும் இல்லாமல் போய்விடும்.
childcare
குழந்தை வளரப்பு - பெற்றோரின் பங்கு

chaild_care_parents
குழந்தை வளர்ப்பு- பெற்றோரின் பங்கு


வெறும் அறிவுரைகளைச் சொல்லி வருவதினால் மட்டும் குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்கிவிட முடியாது. பெற்றோர்களும் தாங்கள் சொல்லும் அறிவுரைகளின்படி நடந்து வரவேண்டும். அப்போது நமது பிள்ளைகளும் நல்லதொரு ஒழுக்கமுடையவர்களாக இவ்வுலகில் பரிமளிப்பார்கள்.நீங்கள் ஒரு பெற்றோரா? இத படிங்க முதல்ல..!!!(Childcare)

கருத்துகள் இல்லை: