வெள்ளி, டிசம்பர் 16, 2011

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

ஆங்கில சொல்லகராதியின் புலமையை அறிய உதவும் வித்தியாசமான தளம்.

தினமும் ஒரு சில ஆங்கில வார்த்தையை தொடர்ச்சியாக படிக்கும் குணம் உள்ளவர்கள் கூட தங்களின் ஆங்கில சொல்லகராதியின் புலமையை சோதித்து தெரிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
1000 ஆங்கிலப் புதிய வார்த்தைகள் அல்லது 2000 புதிய வார்த்தைகள் படித்திருக்கிறேன் எல்லாம் ஞாபகம் இருக்கிறது எங்கு எதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் அனைவருக்கும் உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.testyourvocab.com/
இத்தளத்திற்கு சென்று நம் ஆங்கிலப்புலமையை (“Test your vocab “)  சோதித்துக் கொள்ளலாம்.ஒவ்வொரு வார்த்தையும் குறிப்பிட்ட வகையின் படி பிரிக்கப்பட்டு இருக்கிறது 5 -ல் இருந்து 10 நிமிடத்திற்குள் நம் ஆங்கில சொல் அகராதியின் புலமையை தெரிந்து கொள்ள்லாம். ஆங்கிலத்தில் புதியவர்கள் கூட எளிதாக புரிந்து பயன்படுத்தும் படி இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான பயனாளர் கணக்கும் தேவை இல்லை எளிதாக சில நிமிடங்களில் எத்தனை வார்த்தைகள் வரை நமக்கு தெரியும் என்று அறிந்து கொள்ளலாம்.ஆங்கில ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவருக்கும் இந்தத்தளம் தங்களின் திறமையை பட்டை  தீட்டிக்கொள்ள உதவும்.
ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் சொல்லிக்கொடுக்கும் பயனுள்ள தளம்
சில நாட்கள் முறையாக பார்த்தால் ஆங்கிலம் பெற்ற திறமைசாலிகளாக மாறலாம்.
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்போருக்கும் உதவக்கூடிய பயனுள்ள வித்யாசமான இணையதளம்.
ஆங்கில பாடங்களை ஞாபகம் வைக்க புதுமையான வழி
 
வின்மணி சிந்தனை
அளவான தூக்கம் மனதிற்கும் உடலுக்கும்
நோயின்றி காக்கும்
  ஆங்கில சொல்லகராதியின் புலமையை அறிய உதவும் வித்தியாசமான தளம்.

கருத்துகள் இல்லை: