வெள்ளி, டிசம்பர் 23, 2011

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அசரடிக்கும் நேஷனல் ஜியாகரஃபிக் படங்கள் 2011

by கிரி on December 23, 2011
புகைப்படங்கள் எடுப்பதில் எனக்கு ஆர்வம் இருந்தாலும் சோம்பேறித்தனம் காரணமாக அதிகம் முயற்சிக்கவில்லை ஆனால் படங்கள் தான் எடுக்கவில்லையே தவிர அழகான படங்களை ரசிக்க என்றும் தவறுவதில்லை. அழகான வித்யாசமான படங்கள் எங்கு கிடைத்தாலும் பிகாசாவில் சேமித்து வைத்து விடுவேன்.
நேஷனல் ஜியாகரஃபிக் வருடாவருடம் புகைப்படங்களுக்கான போட்டிகளை நடத்தி வருகிறது. 2011 ம் ஆண்டுக்கான போட்டியை சமீபத்தில் நடத்தியது இதில் 200000 படங்கள் போட்டியில் கலந்து கொண்டன அதில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். முதல் பரிசாக Shikhei Goh என்பவர் எடுத்த (தட்டான்) படம் தேர்வாகி இருக்கிறது இது இந்தோனேசியாவில் பதாம் என்ற இடத்தில் எடுக்கப்பட்டது. இதற்கு பரிசாக 10000 USD யும் அடுத்த வருடம் நேஷனல் ஜியாகரஃபிக் நடத்தும் செமினாரில் கலந்து கொள்ளவும் வாய்ப்பை வழங்கி இருக்கிறது.
இத்தனை படங்களை எப்படித்தான் தேர்வு செய்தார்களோ! மலைப்பாக இருக்கிறது. ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும் ஒருவருக்கு சிறப்பாக தோன்றுவது இன்னொருவருக்கு எதுவுமில்லாததாகத் தோன்றும். அந்த வைகையில் எனக்கு பிடித்த சில படங்களை இங்கே பகிர்ந்து இருக்கிறேன். இன்னும் பல படங்கள் http://www.theatlantic.com தளத்தில் உள்ளது விளக்கங்களுடன் அதாவது எந்த நேரத்தில் எந்த சூழ்நிலையில் எடுக்கப்பட்டது என்ற விளக்கத்துடன் உள்ளது. கண்டிப்பாக சென்று பார்க்கவும் வெறும் படங்களைப் பார்ப்பதை விட அது எப்படி எடுக்கப்பட்டது என்ற விளக்கத்துடன் பார்த்தால் அதன் சிறப்பு இன்னும் தெளிவாகப் புரியும்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்கள் இவை.
Image Credit http://www.theatlantic.com Vinod Vydyanathan
கீழே உள்ள படங்களை க்ளிக் செய்தால் அதுவே பெரிதாக மாறும் எனவே நீங்கள் தனித்தளங்களில் திறந்து சிரமப்படவேண்டாம்.
மூன்று படங்களை பெரிதாக போடலாம் என்று மூன்றை தேர்வு செய்வதற்குள்ளே எனக்கு மண்டை காய்ந்து விட்டது இதில் எப்படி 20000 படங்களை பார்த்து அதில் சிறந்தவற்றை தேர்வு செய்வது.. யப்பா! கண்ணை கட்டுது. ஒவ்வொரு படமும் கண்ணுல ஒத்திக்கிற மாதிரி இருக்கு. உயிரோட்டமுள்ள படங்களை எடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
கொசுறு
ஆண்டு இறுதி, கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்று அலுவலகம் ஒரே மந்தமான நிலையாக இருக்கிறது பெரும்பாலும் அனைவரும் விடுமுறையில் இருக்கிறார்கள் அடுத்த வாரம் யாரும் வருவார்களா! என்பதே சந்தேகம். கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் icon smile அசரடிக்கும் நேஷனல் ஜியாகரஃபிக் படங்கள் 2011

கருத்துகள் இல்லை: