வியாழன், பிப்ரவரி 02, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


தங்கம்பழனி வலைப்பூவில் Top 10 பதிவுகள்..!

தங்கம்பழனி வலைப்பூவில் கடந்த வருடங்களில் இதுவரை பார்க்கப்பட்ட டாப் டென்(top10) பதிவுகள்..தங்கம்பழனி வலைப்பூவில் இதுவரை அதிகம் பார்வையிடப்பட்ட முதல்  பத்து பதிவுகளை வரிசைப்படுத்தியிருக்கிறேன்.. தவறவிட்டவர்கள் படிக்க இது ஒருவாய்ப்பாக இருக்கும்.  ஒவ்வொரு பதிவின் தலைப்பையும் சொடுக்குவதன் மூலம் முழுவப்பதிவையும் பதிவையும் படிக்கலாம்.

ஆடு வளர்ப்பு -லாபம் நிரந்தரம்!

வான்கோழி, காடை, ஈமு என வகை வகையாக இறைச்சிகள் இருந்தாலும், நாட்டுக்கோழிக் கறிக்கும் வெள்ளாட்டுக் கறிக்கும் உள்ள மவுசு குறைவதேயில்லை. எப்போதுமே சந்தையில் அவற்றுக்கான கிராக்கி உச்சத்தில்தான். அவற்றின் விலையே இதற்கு சாட்சி. அதனால்தான் விவசாயத்தோடு சேர்த்து, ஆடு, கோழி என வளர்க்கும் பழக்கம் தொன்று தொட்டே தொடர்கிறது.


ஆரம்ப காலங்களில் நாட்டு ஆடுகள், நாட்டுக் கோழிகள் என்று இருந்ததெல்லாம் காலமாற்றத்திற்கு ஏற்ப கலப்பினங்களாக உருவெடுத்துவிட்டன. இத்தகைய கலப்பினங்கள் இருவகைகளில் உருவாக்கப்படுகின்றன.

முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பது போல முயல் வளர்ப்பு தொழிலும் மிகுந்த லாபம் தரக் கூடியது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம.

முயல் குட்டியானது சுமார் ஒரு மாசம் வரை தாயுடன் கட்டாயம் இருக்க வேண்டும்.. அப்போதுதான் நல்ல ஆரோக்கியமான முயல்குட்டிகள் நமக்கு கிடைக்கும்.

நன்றாக வளர்ந்த முயல்களை கிலோ ஒன்றிற்கு தரத்திற்கு தகுந்தாற்போன்று 300 முதல் 350,400,500,600 என ரூபாய் வரைக்கும் விற்கலாம்..

வேலை செய்யாமலே சம்பாதிக்கலாம் .!

இன்று நாம் மிக மிக வித்தியாசமான இரண்டு தளங்களை பார்க்கப் போகிறோம் .இந்த இரண்டு தளங்களிலும் நாம் வேலை ஏதும் செய்ய தேவை இல்லை .நாம் வெறுமனே ஆன்லைனில் இருந்தாலே போதும் .மிக சொற்பமான பணம் தான் நமது கணக்கில் ஏறும் என்றாலும் நாம் நிறைய ரெப்பெரல் கொண்டுவரும் போது சற்று அதிகமாக சம்பாதிக்க முடியும் .

வேலை ஏதும் செய்யாமல் பணம் தருகிறார்களா ...? அது எப்படி சாத்தியம் என்ற கேள்வி உங்களுக்கு வருகிறதா ....?

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? - ஓர் எச்சரிக்கை குறிப்பு!!

சாப்பாட்டிற்கு பின் பழம் சாப்பிடலாமா?

ஒரு விருந்து முடிந்ததும் , பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலபேரிடம் இருக்கிறது. இது சரியா? சாப்பிட்டப்பின் பழம் சாப்பிடுவது என்பது ஒரு சரியான செயல் அல்ல.

சாப்பிடும் முன்பே பழம் சாப்பிடவேண்டும். காரணம் ,

Nokia செல்பேசியில் சில பயன்மிக்க ரகசிய குறியீடுகள்...

Nokia செல்பேசியில் சில பயன்மிக்க ரகசிய குறியீடுகள்..!!

உங்கள் செல்பேசியின் IEMI எண்ணை அறிய


*#06#


காளான் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்

OYSTER MUSHROOM PRODUCTIONசெய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். நாம் முன்னேற வேண்டுமானால் உலகில் பல வழிகள் இருக்கிறது. பல தொழில்கள் இருக்கிறது. அதிலும் சுயமாக முன்னேற நினைப்பவர்களுக்கு உதவுபவை சிறுதொழில்கள். அதிக முதலீடு இல்லாமல், விரைவில் தொழில் தொடங்க இத்தகைய சிறுதொழில்களே மிகவும் சிறந்தவையாக இருக்கிறது. பாருங்கள்! சிறுதொழில் செய்து இப்போது நாட்டில் பலரும் பெரிய தொழிலதிபர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் ஒரு பெற்றோரா? இத படிங்க முதல்ல..!!!

"குழந்தைகளுக்கு என்ன தெரியும்? அவர்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது? அவர்களைவிட என்னால் இன்னும் சிறப்பாகச் சிந்தித்து,நல்ல முடிவுகளை உடனடியாக எடுத்து செயல்பட முடியும். அவர்கள் தப்பும் தவறுமாக ஒரு நாளில் செய்து முடிக்கும் வேலையை பத்தே நிமிடங்களில் என்னால் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். குழந்தைகளோடு பேசி என் நேரத்தை நான் ஏன் வீணடித்துக்கொள்ள வேண்டும்? ' என்று பல பெற்றோர்கள் தவறாக முடிவெடுத்து தங்கள் குழந்தைகளிடம் விவாதிப்பதையோ அல்லது பேசுவதையோ தவிர்த்து வருகிறார்கள்.

தமிழில் எழுத ஒரு தரமான மென்பொருள் இ-கலப்பை (eKalappai)

நண்பர்களே வணக்கம்.. இன்று நாம் பார்க்கப் போவது தமிழர்களாகிய நாம் தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய உதவும் ஒரு எளிமையான மென்பொருளைப் பற்றிதான்.. தமிழில் எழுத பயன்படுத்தப்படும் புதிய மேம்படுத்தப்பட்ட மென்பொருள் இ-கலப்பையை 3,0 ப் பற்றிய பதிவு. இப்பதிவில் புதியவர்களுக்குரிய குறிப்புகளுடன், பயன்படுத்தும் முறைகளையும் எளிமையாக,தெளிவாக படங்களுடன் விளக்கியிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் படித்துப் பயன்பெறலாம்.

பணத்தால் எல்லாம் சாத்தியமா?

Indian moneyநிறைய பணம் இருந்தால், வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் அடைந்துவிட முடியும் என்று நிறைய பேர்கள் தப்புக்கணக்கு போட்டு வருகிறார்கள்.

பணத்தைக் கொண்டு அடைய முடியாதவைகள் இந்த உலகில் நிறைய இருக்கின்றன.

பணம் ஒருவனுடைய அறிவை வளர்க்காது. பணக்காரன் பணத்தை அள்ளி வீசி இந்த உலகத்தில் இருக்கும் நல்ல புத்தகங்கள் அனைத்தையும் வாங்கி தன் வீட்டில் அடுக்கி வைக்க முடியும். எண்ணற்ற புத்தகங்களின் சொந்தக்காரன் என்பதற்காக அவனுடைய அறிவு கூடிவிடுவதில்லை..


சமையல் எரிவாயு(Gas Sylinder) கலன் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை குறிப்பு!

நாள்தோறும் நாம் பயன்படுத்துகிற சமையல் எரிவாயு கொள்கலனின் ஆயுட்காலத்தை நாம் என்றேனும் எண்ணிப்பார்ப்பதுண்டா.. அவசர யுகத்தில் இதற்கெல்லாம் நமக்கேது நேரம் என்கிறீர்களா?

ஒரு நிமிடம் மட்டும் அதற்கு ஒதுக்குங்களேன்.. ஒரு பெரும் ஆபத்தை தவிர்க்க இந்த ஒரு நிமிடம் உதவுமென்றால் நீங்கள் நிச்சயம் இதற்கு ஒதுக்கித்தான் ஆக வேண்டும்.

நன்றி நண்பர்களே..!!

0 Responses to “தங்கம்பழனி வலைப்பூவில் Top 10 பதிவுகள்..!”

Post a Comment

நிறைகுறைகளை இங்கு தெரிவிக்கலாம்..!!
http://www.thangampalani.com/2012/02/top-10.html?

கருத்துகள் இல்லை: