வெள்ளி, பிப்ரவரி 03, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

பெண் தொழில்முனைவோர்களுக்கு கூகிளின் அழைப்பு!

கூகிள் Women Entrepreneurs on the web (WEOW) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு சுயதொழில் புரியும் பெண்களுக்கு தங்களது தொழில் நிறுவனங்கள் மற்றும் வியாபாரங்களை ஆன்லைன் மூலம் மேலும் எப்படி விரிவுபடுத்துவது என்பதற்க்கு வழிகாட்டவுள்ளது.
WEOW அமைப்பு பல்வேறு அடிப்படையான இணைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பெண் தொழில் முனைவோர்கள் அதிகமான வாடிக்கையாளர்களை சென்றடைய உதவிபுரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் பார்த்தவரை பெண் தொழில் முனைவோர்கள் புதிய முயற்சிகளுக்கு பயப்படவில்லை, அவர்கள் தங்களது தொழிலை எல்லை கடந்து இணைய தொடர்புடன் விரிவுபடுத்த முடியும் என்பதை உணர்ந்துள்ளனர். அதற்கான சில இணைய பயிற்ச்சிகளை அளிக்கவுள்ளோம். இதன் மூலம் அவர்கள் தங்களது திறமைகளை உலகறிய செய்யும் ஆற்றல் பெற்றவர்களாக உருவெடுப்பார்கள்
என கூகிள் இந்த புதிய அமைப்பின் வலை தளத்தில் கூறியுள்ளது.
WEOW அமைப்பில் 5 கட்ட சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அணுகுமுறைகள் உள்ளன. இதன் மூலம் ஆன்லைன் இருப்பு மற்றும் நிபுணத்துவ பற்றிய மாறுபட்ட திறமைகளை தொழில் முனையும் பெண்களுக்கு அளிக்கவுள்ளது.
இதை பற்றிய மேலும் பல செய்திகளுக்கு கூகிளின் WEOW இணையதளத்தை பார்க்கலாம்.
Popularity: 5% [?]
thozil-munaivorkku-google-ahaippu/#ixzz1lKpg5HW8

கருத்துகள் இல்லை: