புதன், பிப்ரவரி 08, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒரு புதிதாக ஒரு சோசியல் நெட்வொர்க்.


நம்மிடம் இருக்கும் தகவல்களை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இமெயில் மூலம் தெரியப்படுத்துவோம் அல்லது ஏதாவது சர்வரில் காப்பி செய்து அதற்கான இணைப்பை தெரியப்படுத்துவோம் கூகிள் டாக்ஸ் செய்து வரும் வேலையைப்போன்று தான் புதிதாக ஒரு சோசியல் நெட்வொர்க் தகவல்களை எளிதாக பகிர்ந்து கொள்ள உதவுகிறது  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
முக்கியமான தகவல்கள் அல்லது வாழ்த்துப் படங்கள் அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்த தகவல்கள் என அனைத்தையுமே நாம் இந்த புதிய சோசியல் நெட்வொர்க் மூலம் சேமித்து அனைவருக்கும் இணைப்பு கொடுக்கலாம், முக்கிய கோப்புகளை பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இணையதள முகவரி : http://buzzdata.com
இத்தளத்திற்கு சென்று நாம் Sign up என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக்கொண்டு உள் நுழையலாம். நம்மிடம் இருக்கும் தகவல்கள், படங்கள் மற்றுள்ள தகவல்களை Private ,Openly , Discover என்ற மூன்று விதங்களில் எப்படி வேண்டுமானாலும் சேமித்து அடுத்தவரும் பகிர்ந்து கொள்ளலாம், ஒவ்வொரு முறையும் இமெயிலில் குறிப்பிட்ட கோப்புகளை காப்பி செய்து அனுப்பும் நேரமும் இடமும் இங்கு தேவைப்படாது. ஒரே ஒரு முறை மட்டும் நம் தகவல்களை பதிவேற்றம் செய்தால் போதும் அதன் பின் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களிடம் நம் தகவல்களை எளிதாக கொண்டு சேர்க்கலாம். தகவல்களை அனைவரிடமும் எளிமையாக பகிர்ந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்த Buzz Data தளம் பயனுள்ளதாக இருக்கும். இதைப்பற்றிய ஒரு சிறப்பு அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
முக அலங்காரம் மற்றும் ஒப்பனை செய்வதற்கென்றே தனி சோசியல் நெட்வொர்க்
சோசியல் மீடியாயை வைத்து போட்டி : எந்த நிறுவனம் பிரபலம் என்று அறியலாம்.
மொபைல் மூலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க உதவும் சோசியல் நெட்வொர்க்
30 சோசியல் நெட்வொர்க்கு தகுந்தபடி நம் புகைப்படத்தை வடிவமைக்கலாம்
.

மொபைல் மூலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க உதவும் சோசியல் நெட்வொர்க்


பெருகிவரும் சோசியல் நெட்வொர்க்-ன் வளர்ச்சியில் ஒவ்வொரு
நிறுவனமும் சலுகையை வாரி வழங்கி வருகின்றது. அந்த
வகையில் இன்று புதிதாக வளர்ந்து வரும் சோசியல்
நெட்வொர்க்கான Mobiluck என்பதன் மூலம் இருக்கும்
இடத்துடன் தகவல் பரிமாறிக்கொள்ளும் வசதி வந்துள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நண்பர்களுடன் டீக்கடையில் உட்கார்ந்து அரட்டை அடித்து
கொண்டிருக்கும் போது , நாம் இருக்கும் இடத்திற்கு அருகில்
உள்ள நண்பர்களை அழைக்க வேண்டாம் அவர்களும் இந்த
சோசியல் நெட்வொர்க்-ல் பயனாளராக இருந்தால் அவருக்கு
உங்க நண்பர் கந்தசாமி இந்த டீக்கடையில் நண்பர்களுடன்
பேசிக்கொண்டு இருக்கிறார், டீக்கடை 1 கி.மீ தொலைவில்
இருக்கிறது என்ற செய்தியை பகிர்ந்துகொள்ள உதவுகிறது
இந்த சோசியல் நெட்வொர்க்.
இணையதள முகவரி : http://www.mobiluck.com/en/
நம்முடன் இந்த சோசியல் நெட்வொர்க்-ல் உள்ள நண்பர்கள்
ஒவ்வொருவரும் தற்போது எங்கே இருக்கின்றனர் என்ற
தகவலை இலவசமாகவே கொடுக்கிறது. இந்ததளத்திற்கு
சென்று இலவசமாக நமக்கென்று ஒரு பயனாளர் கணக்கு
உருவாக்கிக்கொள்ள வேண்டும். மொபைல்-க்கு என்று
சிறப்பாக உருவாக்கப்பட்ட இந்த சோசியல் நெட்வொர்க்-ல்
200 வகையான மொபைல் மாடல்களுக்கு துணை செய்கிறது.
ஜீடாக் முதல் யாகூ, ஸ்கைப், MSN போன்ற அனைத்து சாட்
ரூம் வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். புதுமை
விரும்பிகளுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

THANKS
http://winmani.wordpress.com/2012/02/06/buzz-data/ 

கருத்துகள் இல்லை: