வியாழன், பிப்ரவரி 09, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உங்கள் கணினியிலேயே கூகிள் Docs வேண்டுமா?
கூகிளின் பயனுள்ள சேவைகளில் முக்கியமான ஒன்று கூகிள் டாக்ஸ் (docs). இந்த கூகிள் டாக்ஸின் மூலம் ஆன்லைனிலேயே பல்வேறு விதமான கோப்புகளை உருவாக்க முடியும். மேலும் எளிதாக சொல்வதென்றால், கூகிள் டாக்ஸ் முற்றிலும் ஒரு ஆன்லைனில் மைக்ரொசாப்ட் ஆபிஸ் (Microsoft Office) போல் செயல்பட்டுவருகிறது. கூகிள் டாக்ஸின் மூலம் கோப்புகளை இணையத்திலேயே உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் அங்கேயே சேகரிக்கவும் (save) முடிகிறது. வேண்டும் பொழுது தரவிறக்கம் (Download) செய்யவும், மற்றவர்களுடன் பகிர்ந்து (Share) கொள்ளவும் முடிகிறது.
ஆனால் இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், நமக்கு வேண்டிய நேரத்தில் எல்லாம் இணையத்தில் சென்றே கோப்புகளை கையாள முடியும் அல்லது தரவிறக்கம் செய்ய வேண்டி இருக்கும். அப்படியில்லாமல் நம்முடைய கணினியிலேயே இந்த கூகிள் Docs ஐ கொண்டுவந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதற்கான தீர்வுக்காக தான் இந்த பதிவு.
InSync என்ற மென்பொருள் இதற்கான வழியை நமக்கு அளிக்கிறது. இந்த சிறிய மென்பொருளை தரவிறக்கம் செய்து கொண்டு, நமது கணினியில் நிறுவ வேண்டும். அதன் பின் insynchq உடன் நம் கணினியில் நிறுவவேண்டிய கூகிள் டாக்ஸ் கணக்கை கொடுக்கவேண்டும். குறிப்பிட்ட கணக்கை insynchq யில் இணைக்க கூகிளிடம் அனுமதி அளிக்க வேண்டும். இதன் மூலம் insynchq ல் உங்கள் கூகிள் கணக்கின் பெயரிலேயே ஒரு கணக்கு துவங்கப்பட்டுவிடும். மேலும் உங்கள் கணினியின் மை டாக்குமெண்ட்ஸில் (My Documents) Insync என்ற கோப்பு காணப்படும். அதில் குறிப்பிட்ட கூகிள் டாக்ஸில் உள்ள அனைத்து கோப்புகளும் சேகரிக்கப்பட்டிருக்கும்.

இதில் மேலும் பயனுள்ள ஒரு விடயம் என்னவென்றால், கணினியில் உள்ள டாக்ஸ் கோப்புகளில் மாற்றம் செய்யும் பொழுது தானாகவே கூகிள் டாக்ஸிலும் அல்லது கூகிள் டாக்ஸில் உள்ள கோப்புகளில் திருத்தம் செய்யும் பொழுது கணினியிலும் தானாக மாற்றம் செய்யப்பட்டுவிடும். இந்த InSync கொண்டு ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கூகிள் டாக்ஸ் கணக்கிலுள்ள கோப்புகளை இதே போல் கையாளமுடியும்.
இந்த கருவி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.


 THANKS

கருத்துகள் இல்லை: