ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

ஆசிரியை குத்திக்கொலை: மகன் வெறிச்செயலால் நிலைகுலைந்த தாய்


சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை நேற்று முன்தினம் மாணவனால் குத்திக்கொலை செய்யப்பட்டார். வகுப்பறையில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தை தொடர்ந்து அந்த மாணவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். இந்த பயங்கர செயலில் ஈடுபட்ட மாணவன் 9-ம் வகுப்பு படித்து வந்தான். அவரது தந்தை தொழில் அதிபர் ஆவார்.

நல்ல குடும்பத்தில் பிறந்த மாணவன், எதனால் இத்தகைய செயலில் ஈடுபட்டான் என்பது பெரும்ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.   அந்த மாணவன் ஒரே மகன் என்பதால் செல்லமாக வளர்ந்துள்ளான். அவனுடன் 3 சகோதரிகள் இருக்கிறார்கள். இதில் இருவருக்கு திருமணமாகி விட்டது. மகனின் செயலால் தலை குனிந்து போய் அவரது குடும்பம் உள்ளது.

தாய் கண்ணீருடன் கவலையுடன் நிலைகுலைந்து காணப்படுவதாக அவர் வசிக்கும் வீட்டருகில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். மாணவன் பற்றி கூறிய தகவல் நேர் எதிர்மாறாக உள்ளது. 

ஆசிரியையை குத்திக் கொன்ற மாணவன் மிகவும் அமைதியானவன். யாரிடமும் தேவையில்லாமல் பேசமாட்டான். சிறு குழந்தையாக இருந்தபோது விளையாட வெளியில் வருவான். இப்போது வருவது இல்லை. நல்ல குடும்பத்தை சேர்ந்த அந்த பையனா இத்தகைய செயலில் ஈடுபட்டான் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.

தெருவில் நடந்து செல்லும்போது கூட தலை குனிந்துதான் செல்வான். 30 வருடமாக இங்கு வசிக்கிறார்கள். யாரிடமும் தேவையில்லாமல் மாணவனின் குடும்பத்தார் பேச மாட்டார்கள். அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் வசித்து வரும் அவர்களின் வீட்டின் கதவு எப்போதும் மூடியே இருக்கும்.

வீட்டிற்கு வருபவர்களை யார் என்று மாடியில் இருந்தவாறு பார்த்துவிட்டுதான் கதவை திறப்பார்கள் என்று அந்த தெருவில் வசிக்கும் பிரமுகர்கள் கூறினர். 

ஒரே மகன் என்பதால் அவனுக்கு தேவையானதை அவரது தந்தை வாங்கி கொடுத்திருந்தார். வீட்டில் அவனுக்கு ஏ.சி. வசதியுடன் தனி அறையும், அங்கு லேப்-டாப் கம்ப்யூட்டர் போன்றவையும் உள்ளது. மாணவன் பள்ளிக்கு காரில்தான் சென்று வருவான். பள்ளிக்கு சென்று வந்தபிறகு வீட்டில்தான் இருப்பான். வெளியே வரமாட்டான் என்று நல்ல விதமான கருத்துக்களை அப்பகுதியினர் தெரிவித்தனர். 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் திட்டியதாகவும், அனைவர் மத்தியிலும் தன்னை அவமானப்படுத்தியதாகவும் பெற்றோரிடம் அவன் கூறியுள்ளான். வீட்டில் உள்ளவர்கள் மாணவனை கிண்டல் செய்தால் கூட மிகவும் கோபப்படுவான் என்றும் கூறப்படுகிறது.

படிப்பில் பின்தங்கி இருந்ததால் ஆசிரியை உமாமகேஸ்வரி மாணவனை கண்டித்து இருக்கிறார். அது அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி தவறான பாதைக்கு வழி வகுத்து விட்டது.
 
THANKS

கருத்துகள் இல்லை: