சனி, மே 12, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

ஏழை புற்று நோயாளிகளுக்காக ஒரு இலவச சேவகம்


புற்றுநோய் (Cancer) என்கிற உயிர் உருக்கும் நோய், பேரறிஞர் அண்ணாவைத் தாக்கியபோது,
நவீன மருத்துவ வசதிகள் இருந்திருக்கவில்லை என்பதும் அவரின் மறைவுக்கு ஒரு காரணமாகி போனது. இன்று நகர்ப்புறங்களில் இவ்வசதி வந்துவிட்டது. அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியுட் போன்ற சிறப்பு மருத்துவ மனை இதற்கு நல்ல உதாரணம். மேலும் பல நகர்ப்புற மருத்துவமனைகளிலும் நவீன மருத்துவ வசதிகள் வந்துவிட்டன.

அதனால், கிராமங்கலிருந்து இங்கு வந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு ஏழை மக்கள் பலர் முனைந்து வருகின்றனர். எனினும் அவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு காலம் வரை தங்கி முறையான சிகிச்சை பெற்றுச்செல்ல ஒரு இடம் இல்லாமல் இருக்கிறது. அந்த குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியில் பலரின் வரவேற்பையும், நன்றிகளையும் ஒருங்கே பெற்றிருக்கிறார் ஸ்ரீ மாதா ட்ரஸ்ட் நிறுவனர் கிருஷ்ண மூர்த்தி. இந்நிறுவனம் புற்று நோயாளிகள் வந்து தங்கி சிகிச்சை பெற இலவச தங்கு விடுதி (Hostel) போன்ற ஒரு வடிவமைப்பு மாதிரியை நடத்திவருகிறது.

'இங்கு வரும் நோயாளிகள் அனைவருமே வெளியூர் மற்றும் கிராமப் புறங்களிலிருந்து வரும் ஏழைகள். இவர்களில் பெரும்பாலானவர்கள், சென்னையில் தங்கியிருந்து சிகிச்சை பெறவும், ஆகாரம் பெறுவதற்கும் வழியின்றி சிகிச்சையையும் பாதியிலேயே நிறுத்திவிட்டு தங்கள் ஊருக்கே திரும்பி செல்கின்றனர். இதனால் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து விரைவிலேயே அவர்கள் உயிரிழக்கும் பரிதாப் நிலை பலகாலமாக தொடர்கிறது. இதற்கு எப்படியும் தீர்வுகண்டே ஆகவேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப் பட்டதுதான் இந்த தர்மசாலா" என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.


மேலும், புற்று நோயாளிகளுக்காக 2001 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தர்மசாலா, மூன்றுவேளை இலவச சாப்பாடு, சிகிச்சை முடியும் வரை தங்கும் வசதியோடு தற்போது நடைபெற்று வருகிறது. 'காஞ்சி பெரியவரின் ஆசியோடு இதைத் தொடங்கினேன். அன்றிலிருந்து இருப்பவர்களிடம் யாசகம் கேட்கிறேன், புற்று நோயாளிகளுக்கு சேவகம் செய்கிறேன்" என்கிறார் அவர்.

இந்த தர்மசாலாவில், புற்று நோயாளிகளோடு அவர்களை பார்த்துக் கொள்ள ஒரு அட்டேன்டரும் தங்கலாம். மூன்று வேலைகளும் பாரம்பரியமான சைவ சாப்பாடு, பால், காபி, ஸ்நாக்ஸ் என்று அசத்துகிறார்கள்.

"புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரேடியேசன் தெரபி, புற்றுநோய் செல்களை அழித்து காப்பாற்ற முயற்சிக்கும். ஆனால் அந்த தெரபி தரும்போது உடல் பலவீனம் அடைகிறது. அதனால், விட்டமின், புரோட்டீன், மினரல்ஸ் என்று சத்து மிகுந்த உணவு வகைகள் இந்த நோயாளிகளுக்கு கண்டிப்பாகத் தேவைப் படுகிறது. எனவே இதுபோன்ற சத்து நிறைந்த உணவு வகைகளே ஸ்ரீ மாதா ட்ரஸ்ட் தர்ம சாலாவில் வழங்கப் படுகிறது" என்கிறார் மாதா ட்ரஸ்ட் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி.

ஏழைகளுக்கு சேவை செய்வதென்பதே அரிதாகிப்போய்விட்ட இன்றைய காலகட்டத்தில், கொடிய புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவும் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களை இன்றைய சர்வதேச தாதியர் தினத்தில் சிறப்பிப்பதில் தவறில்லை.

மேலதிக விபரங்களுக்கு
Founder & Managing Trustee
Sri.V.Krishnamurthy
Sri Matha Trust,
Gandhi Nagar, Adayar
Contact : 24429727/ 2440495

THANKS:
http://www.4tamilmedia.com/knowledge/essays/5262-2012-05-12-00-19-48?

கருத்துகள் இல்லை: