சனி, மே 12, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

சிறார்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள்: பகுதி 7


உங்கள் குழந்தைகள் இணையத்தில் பயன்பெறுவதற்கு மிகச்சிறந்த வலைத்தளங்கள்
சிலவற்றை இங்கு தொடர்ச்சியாக தந்த வண்ணம் உள்ளோம், இன்னும் தரவிளைகிறோம். இதுவரை இத்தளங்கள் பற்றி அறிந்திருக்காவிடின் முதலில் நீங்கள் சென்று பாருங்கள், பின்னர் இத்தளங்களில் உள்ள வசதிகளை புரியும் வகையில் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். நிச்சயம் பயனுடையதாக இருக்கும். அவ்வகையில்
Club Penguin (clubpenguin.com):

பிரபல டிஸ்னி நிறுவனத்தின் இணையத்தளமான கிளப் பென்குயின் எனும் இத் தளம், சிறார்களுக்கான கல்வி சம்பந்தமானவற்றை காணமுடியாவிடினும் மற்றைய அம்சங்கள் நிறையவே உள்ளன. இதில் என்ன சிறப்பேன்றால் பொதுவாக சிறார்கள் தங்களை போல் ஒரு பென்குயின் கதாபாத்திரத்தை இதில் உருவாக்கி அதன் மூலம் மற்றைய பென்குயின்களுடன் சிறார்கள் அரட்டை அடிக்கலாம். இதில் பெற்றோர்களுக்கு அல்டிமேட் பாதுகாப்பான சேட் முறையில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட பதில் தொகுப்பை சிறார்களின் மறுமொழிகளை  கட்டுபடுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆக தரமான பாதுகாப்பான சேட் சேவை சுதந்திரமாக அரட்டை அடிப்பதற்கு உதவுகிறது. ஆனால் தனிப்பட்ட தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான அனுமதிகள் இல்லை. இது தவிர வேடிக்கை விளையாட்டுக்கள், எக்சிமோக்களின் பனிக்கட்டி குடில்களை உறுவாக்குவது இப்படியான பொழுது போக்கு அம்சங்கள் பல உள்ளன. அத்துடன் சிறார்கள் தங்களின் கைவண்ணங்கள், காமிக்ஸ் கதைகள் போன்ற விடயங்களையும் இங்கே சமர்ப்பிக்கலாம்.
இணைப்பு: http://www.clubpenguin.com/
ஏனைய பகுதிகளையும் காண
இவற்றையும் தவறாமல் காணுங்கள்

கருத்துகள் இல்லை: