சனி, மே 05, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

ஆய்வு செய்திகளை கண்டுபிடித்து தரும் இணையதளம்.

தமிழில் சிலர் பேஸ்புக்கை முகநூல் என்று சொல்வது போல ஃபேக்ட் பிரவுசர் தளத்தை தகவல் பிரவுசர் என்று தமிழ் படுத்தலாம்.ஆனால் பெயரில் பிரவுசர் இருந்தாலும் இது இன்னொரு பிரவுசர் அல்ல!
ஒரு விதத்தில் இது வலைவாசல் இன்னொரு விதத்தில் தேடியந்திரம்.அல்லது இரண்டும் இணைந்த தளம் என்றும் சொல்லலாம்.
இந்த தளமோ தன்னை ஆய்வு தகவலுக்கான கண்டுபிடிப்பு இயந்திரம் என்று வர்ணித்து கொள்கிறது.அதாவது ஆய்வு தொடர்பான செய்திகளையும் தகவல்களையும் இந்த தளம் கண்டு பிடித்து தருகிறது.
ஆய்வு தகவல்களை தனியே தேட வேண்டிய அவசியமே இல்லை.ஆய்வுலகின் சமீபத்திய செய்திகளை முகப்பு பக்கத்திலேயே இது பட்டியலிடுகிறது.
ஆய்வுலக செய்திகள் என்றால் ஆய்வு அல்லது கருத்து கணிப்பு அடிப்படையில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களை மையமாக கொண்டவை.
உதாரணத்திற்கு அமெரிக்காவின் முன்னணி நளிதழான நியுயார்க் டைமிசின் அச்சு பிரதிக்கான சந்தாதாரர்களின் எண்ணிக்கையை விட இணைய பதிப்பிற்கான எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்ற தகவலோ அல்லது அமெரிகாவில் உள்ள பேஸ்புக் பயனாளிகளில் 70 % பேர் ஏதாவது ஒரு வர்த்தக நிறுவன பிராண்டை விரும்பியுள்ளனர் என்ற தகவலோ ஆய்வின் அடிப்படையில் பெறப்பட்டவை.
அதே போல சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று இந்தியாவில் கழிவறை வசதி உள்ளவர்களை விட செல்போன் வைத்திருப்பவர்களே அதிகம் என்று தெரிவித்தது.
இததகைய ஆய்வு முடிவுகள் சுவாரஸ்யமான தகவல்களை அளிக்க கூடயவை மட்டும் அல்ல புதிய புரிதலை ஏற்படுத்த வல்லவை.பத்திரிகைகளிலும் நாளிதழ்களிலும் இத்தகைய ஆய்வு சார்ந்த செய்திகளை தவறாமல் பார்க்கலாம்.
நிற்க‌ மற்ற செய்திகளுக்கு நடுவே புதைந்து கிடக்கும் இந்த செய்திகள் கவனிக்கப்படாமலே போகும் வாய்ப்பும் இருக்கிறது.மாறாக இந்த வகை செய்திகள் மட்டுமே பட்டியலிடப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் ?அதை தான் ஃபேக்ட் பிரவுசர் செய்கிறது.
ஆய்வுகள்,கருத்து கணிப்புகள்,அறிக்கைகள்,சர்வேக்கள் ஆகியவற்றை அடிப்படையாக கோண்ட செய்திகளை இது தேடிப்பிடித்து பட்டியலிடுகிறது.எனவெ ஆய்வு முடிவுகளுக்காக அங்கும் இங்கும் அலையாமல் ஒரே இடத்தில் அவற்றை படித்து கொள்ளலாம்.
ஆய்வு சார்ந்த முன்னணி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் இருந்து இந்த செய்திகளை திரட்டி தருகிறது ஃபேக்ட் பிரவுசர்.தொழில்நுட்பம்,பொருளாதாரம்,செல்போன்,சமூக ஊடகம் என பல்வேறு த‌லைப்புகளின் கீழ இவை பட்டியலிட்ப்பட்டுள்ளதால் அவரவர் விருப்பத்திற்கேற்ற தலைப்புகளின் சமீபத்திய ஆய்வுகளை சுலப‌மாக தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட துறையில் ஆர்வம் உள்ளவர்கள் தாங்கள் துறையில் புதிய ஆய்வு முடிவுகள் வந்துள்ளனவா என்பதை தேடிப்பார்க்கும் வசதியும் உள்ளது.அதே போல தொடர் ஆய்வுகளில் சமீபத்திய போக்கையும் தெரிந்து கொள்ளலாம்.உதாரணமாக செல்போன் கதிர் வீச்சால் உடல் நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுவது தொடர்பாக பல்வேறு விதமான கருத்துக்கள் உள்ளன.இது தொடர்பாக ஆய்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.சாமான்யர்களும் ஆர்வத்தோடு கவனித்து வரும் விஷயம் இது.
செல்போன் ஆய்வில் புதிய் அதகவல் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த தளத்தில் சுலபமாக தேடிப்பார்த்து கொள்ளலாம்.
ஆய்வு தகவல்கள் தனி தனி தலைப்புகளின் கீழ் மட்டும் அல்ல அவை மேற்கொள்ளப்பட்ட நாடுகளின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.உதாரனத்திற்கு இந்தியா சார்ந்த தகவல் விரும்புவோர் அவற்றை மட்டும் தேர்வு செய்து படிக்கலாம்.
இதழாளர்கள்,ஆய்வு மாணவர்கள்,பேராசிரியர்கள் போன்றவர்களுக்கு பயனுள்ள தளம் இது.
ஏன்,சாமான்யர்களும் கூட செய்திகளை மாறுபட்ட வழியில் பெற விரும்பினால் இந்த தளத்தின் மூலம் சுவாரஸ்யமான மற்றும் சிந்தனைக்குறிய பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://www.factbrowser.com/
 THANKS:
http://cybersimman.wordpress.com/2012/05/05/fact-2/ 

கருத்துகள் இல்லை: