வெள்ளி, மார்ச் 09, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

பாமரனும் புரிந்து கொள்ள உணவுப்பாதுகாப்பு சட்ட தமிழாக்கம்.

                       கரூர் அருகே உணவு பாதுகாப்பு அலுவலராகப் பணிபுரிந்து வரும் என் நண்பர் திரு.கொண்டல்ராஜ், புதிய உணவுப்பாதுகாப்பு சட்டம் மற்றும் அதைச்சார்ந்த விதிகள்,ஒழுங்கு முறைகள் ஆகியவற்றை தமிழாக்கம் செய்து வருகிறார். அதனை, அவர் அனுமதியோடு, என் தளத்தில் பகிர்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

                                                                   பகுதி-1
பதிவுச் சான்றிதழ் பெறும் சிறு உணவு வணிகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான தூய்மை மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்கள்
                                               ஒழுங்குமுறை 2.1.1(2)
உணவு தயாரிப்பாளர்கள்/பதப்படுத்துபவர்/கையாள்வோர் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் மற்றும் தூய்மைத்தேவைகள் உணவு தயாரிக்கும், கையாளும், பதப்படுத்துமிடங்களில், கீழ்க்கண்ட தேவைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும்.
1. வளாகம் அசுத்தமற்ற சுற்றுப்புறம் கொண்ட சுகாதாரமான இடத்தில் அமையப் பெறுவதுடன், எல்லாவகையிலும் தூய்மையான சுற்றுப்புறத்தை பராமரிக்க வேண்டும். அனைத்து புதிய உணவு வர்த்தகக் கடைகளும் மாசுபடும் சுற்றுச்சூழல் கொண்ட பகுதிகளைவிட்டு விலகியிருக்குமாறு அமைய வேண்டும்.
2. உணவு தயாரிப்புவளாகம், பராமரிப்பதற்கு, உணவு தயாரிப்பிற்கு 
மற்றும் உணவை சேமிப்பதற்குத் தேவையான போதுமானஅளவு 
எல்லாவகையிலும் தூய்மையான சுற்றுப்புறம் கொண்ட இடத்தைக் 
கொண்டிருக்க வேண்டும்.
3. மேறப்டி இடம் சுத்தமாகவும், போதுமான வெளிச்சம் மற்றும் 
காற்றோட்டத்துடன் இருப்பதுடன், நடமாட்டத்திற்குப் போதுமான 
இடவசதியையும் கொண்டிருக்க வேண்டும்.
4. மேற்படி இடத்தின் தரைப்பகுதி, மற்றும் மேற்கூரை ஆகியவற்றை  
கீரல், விரிசல் ஏதுமின்றி நல்லநிலையில், சுத்தம் செய்வதற்கு ஏதுவாக இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
5.பூச்சிகள் தயாரிப்புக் கூடத்திற்குள் இல்லாதவாறு, தரை, சுவர் இடுக்குப் பகுதிகளை தேவைக்கேற்ற சிறந்த கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். உணவு தயாரிப்பின்போது பூச்சிமருந்து தெளிக்கக்கூடாது. ஆனால் வளாகத்தின் உள்ளே நுழையும் பூச்சிகளுக்கு, அவற்றை கவர்ந்து கொல்லும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். சன்னல்கள், கதவுகள் மற்றும் பிற திறவைகளை வலை அல்லது திரையமைத்து, பூச்சிகளில்லா இடமாகப் பராமரிக்க வேண்டும். உணவு 
தயாரிப்புக்குப்பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக இருப்பதோடு, 
தேவைப்பட்டால்அங்கீகரிக்கப்பட்டபரிசோதனைக்கூடங்களில், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ரசாயன மற்றும் நுண்ணுயிரியல் பரிசோதனை செய்ய வேண்டும்.
6. தூய்மையான தணண்ர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய  
வேண்டும், விட்டு, விட்டு தண்ணீர் விநியோகம் இருக்கும் பட்சத்தில், 
உணவில் பயன்படுத்த அல்லது சுத்தம் செய்ய, தண்ணீரைப் பாதுகாப்பாக சேமிக்க, போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
7. இயந்திரங்கள், மற்றும் உபகரணங்கள் பயன்பாட்டின்போது சுத்தம் 
    செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.  
    கொள்கலன்கள், மேசைகள் மற்றும் இயந்திரங்களின் செயற்பகுதிகள் 
    போன்றவற்றை சுத்தம் செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க   
    வேண்டும்.
8. உடல்நலக்கேட்டை ஏற்படுத்தக்கூடிய உலோக நச்சுத்தன்மையை 
   ஏற்படுத்தக்கூடிய சாதனங்கள் அல்லது கொள்கலன்களை, உணவு 
   தயாரிக்கவோ, பேக்கிங் செய்யவோ அல்லது சேகரிக்கவோ 
  பயன்படுத்தக் கூடாது. (செமபு,அல்லது பித்தளைப் பாத்திரங்கள் 
 முறையான முலாம் பூச்சை கொண்டிருக்க வேண்டும்).
9. உணவு தயாரிப்புப் பணி முடிந்தவுடன், பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களை சுத்தமாகக் கழுவி, பூஞ்சைத்தொற்று ஏற்படாதவாறு உலர்த்தி அடுக்கி வைக்கப்பட வேண்டும்.

10.ஆய்வு செய்ய ஏதுவாக அனைத்து உபகரணங்களும்  சுவர்ப்பகுதியிலிருந்து போதுமான இடைவெளியுடன் அமைக்கப்பட வேணடும்.
11.சேகரமாகும் கழிவுகளையும் கழிவுநீரையும் முறைப்படி அப்புறப்படுத்த போதுமான வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். 
12. தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் பணிக்கான பணியாளர்கள், தொப்பி, கையுறை(GLOVES), மேலங்கிகள்(APRON) ஆகியவற்றை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
13. தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரை பணியில் ஈடுபடுத்தக் கூடாது.காயம், புண்களுக்கு உரிய கட்டுப்போடப்பட்டு, அப்பணியாளர்களை உணவுடன் நேரடித்தொடர்பு கொள்ள அனுமதிக்கக் கூடாது.

14. பணியாளர்கள் நகங்களை வெட்டி சுத்தமாக பராமரிப்பதுடன், பணியை தொடருமுன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் சோப்பு அல்லது தொறறு நீக்கியால் கைகளைக் கழுவவேண்டும். உணவைக் கையாளும்போது தலை மற்றும் உடற்பகுதிகளைச் சொறிவதை தவிர்க்க வேண்டும்.
15. உணவைக் கையாள்வோர், உணவில் விழக்கூடிய போலிநகங்கள் அல்லது பிற ஆபரணங்கள் போன்றவற்றை அணிவதைத் தவிர்ப்பதோடு, பணிநேரங்களில், அவர்கள் தங்களின் முகம் மற்றும் முடியைத் தொடுவதையும தவிர்க்க வேண்டும்.
16. வளாகத்தினுள் குறிப்பாக உணவைக் கையாளும்போது, உணவு உட்கொள்ளுதல், வாயை மெல்லுதல், புகைபிடித்தல, துப்புதல், மூக்கை சீந்துதல் ஆகியவை தடை செய்யப்பட வேண்டும்.
17. அசுத்தமாவதைத் தவிர்க்க, சேமித்த அல்லது விற்பனைக்கு  வைக்கப்பட்டிருக்கும் பொருட்களனைத்தும், முறையான மூடியுடன் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
18. உணவை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் வண்டிகள், சுத்தமாவும்,சுகாதாரமாகவும், நன்கு பழுதுநீக்கம் செய்யப்பட்டும் பராமரிக்கப்பட வேண்டும்.
19.பொட்டலமிடப்பட்ட (பேக்கட்டுகளில்) அல்லது கொள்கலன்களில்  உணவை எடுத்துச்செல்லும்போது, அதற்கான வெப்பநிலையை  பராமரிக்க வேண்டும்.
20.பூச்சிக்கொல்லிகள் ,கிருமிநாசினிகள் மற்றும் சோப்பு போன்ற சுத்தம் செய்யும் பொருட்களை உணவு தயாரிக்குமிடம், உணவு இருப்பு வைக்குமிடம் மற்றும் உணவைக் கையாளுமிடம் ஆகிய இடங்களுக்குத் தொடர்பின்றி, தனியிடத்தில் வைக்க வேண்டும்.
                                                                             
                                                                              உணவு தயாராகி இன்னும் வரும் . . . 
THANKS:

கருத்துகள் இல்லை: