வெள்ளி, ஜூன் 15, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

இணைய உலாவி ( Web Browser) வழியாகவே 100Mb வரை உள்ள கோப்புகளை நேரடியாக அனுப்பலாம்.

கோப்புகளை ஒருவரிடம் இருந்து பகிர்ந்து கொள்வதற்கு பலவித சேவைகள் இருக்கின்றன சில இணையதளங்களில் நாம் தகவல்களை அனுப்புவதற்கு பயனாளர் கணக்கு வேண்டும் குறிப்பிட்ட கோப்புகள் மட்டும் தான் அனுப்ப முடியும் என்று பல விதிமுறைகளை கொடுக்கும் நிலையில் எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் கோப்புகளை இணைய உலாவி (Web browser) வழியாகவே அனுப்ப ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நாம் ஒருவருக்கு கோப்புகளை அனுப்ப வேண்டும் என்றால் இமெயிலில் அட்டாச்மெண்ட் என்று ஒன்று இருக்கும் அதில் குறிப்பிட்ட Mb ( 20MB) வரை தான் தகவல்களை அனுப்ப முடியும் என்ற நிலையில் எந்தவிதமான பயனாளர் கணக்கும் இல்லாமல் வேகமாக தகவல்களை அனுப்ப நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://efshare.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Step 1 -ல்  Browse என்ற பொத்தானை சொடுக்கி நாம் எந்த கோப்புகளை அனுப்ப வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் ஒன்றுக்குமேற்பட்ட கோப்புகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அடுத்து Step 2 ல் Start Sharing என்பதில் Start என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் சில நொடிகளில் Step 3-ல் நமக்கு ஒரு Url முகவரி கிடைக்கும் அந்த முகவரியை யார் நம் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டுமோ அவருக்கு அனுப்ப வேண்டும், எக்காரணம் கொண்டும் நாம் இத்தளத்தை Close செய்துவிடக்கூடாது. நாம் அனுப்பிய URL முகவரியை அவர் சொடுக்கி எளிதாக தறவிரக்கிக் கொள்ளலாம், அவர் நாம் கொடுத்த முகவரியை சொடுக்கியவுடம் நமக்கு Step 2-ல் எத்தனை பேர் தறவிரக்கியுள்ளனர் என்ற தகவலையும் தற்போது எத்தனை பேர் தறவிரக்கிக்கொண்டிருக்கின்றனர் என்ற தகவலையும் கொடுக்கிறது, 100MB வரையிலான கோப்புகளை நாம் நேரடியாக ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணிக்கு எளிதாக பாதுகாப்பாக அனுப்ப இந்தத்தளம் உதவுகிறது. கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
PDF கோப்புகளை ஆன்லைன் மூலம் சேர்க்க, பிரிக்க, பாதுகாக்க என அனைத்தும் செய்ய உதவும் தளம்.
மறந்து போன PDF கோப்புகளின் கடவுச்சொலை நீக்க உதவும் மென்பொருள்.
கூகிள் டாக்ஸ் மூலம் Zip மற்றும் Rar கோப்புகளை திறக்க உதவும் பயனுள்ள குரோம் நீட்சி.
PDF கோப்புகளை HTML கோப்புகளாக எளிதில் மாற்ற உதவும் இலவசமென்பொருள்
.
 THANKS:
http://www.winmani.com/2012/06/14/file-direct-send/ 

கருத்துகள் இல்லை: