திங்கள், ஜூன் 11, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக நாமும் Invoice உருவாக்க உதவும் பயனுள்ளதளம்.

ஒருவர் நம்மிடம் பொருள் அல்லது ஏதாவது சேவை வாங்கினால் அவருக்கு நாம் கொடுக்கும் பில் (Bill) ரசீது சாதாரணமாக இல்லாமல் பெரிய நிறுவனங்களில் கொடுக்கும் ரசீது போல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கும் ஆனால் invoice எப்படி உருவாக்க வேண்டும் என்று தெரியமால் இருப்பவருக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக நாமும் Invoice உருவாக்கலாம்.
மளிகைக்கடையில் தொடங்கி விறகுக்கடை வரை அனைத்திலுமே தற்போது ரசீது என்ற ஒன்று புதிய வடிவமைப்பில் பிரபலம் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ரசீது வடிவமைப்பு இருக்கும் உதாரணமாக ஜவுளிக்கடைக்கு தனி ரசீது என்றால் அதே போல் கணினி விற்பனை செய்பவர் கொடுக்கும் ரசீது சற்று வித்தியாசமாக இருக்கும், நாமும் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில்  ரசீது உருவாக்கலாம் நமக்கு உதவ இருக்கும் தளத்தைப்பற்றி இனி பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://www.invoicejournal.com
இத்தளத்திற்கு சென்று நாம் Signup என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக்கொள்ள வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் யாருக்கு பில் கொடுக்க வேண்டும் என்பதில் தொடங்கி அனைத்து விபரங்களையும் கொடுக்க வேண்டியது தான் ஒருமுறை நாம் நம் தகவல்களை கொடுத்து வைத்தால் போதும், அடுத்த முறை தானாகவே நம்முடைய முகவரியை எடுத்துக்கொள்ளும், யாருக்கு பில் கொடுக்க வேண்டுமோ அவர்களின் முகவரி மற்றும் பொருட்கள் அல்லது சேவைகள் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்கு பில் உருவாக்கலாம், வெறும் பில் உருவாக்கிக்கொடுப்பதோடு இத்தளம் நின்றுவிடுவதில்லை இதுவரை எத்தனை பேருக்கு நாம் பில் கொடுத்திருக்கிறோம் என்ற தகவலையும் சேமித்து வைத்திருக்கிறது, நமக்கு தேவைப்படும் நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள்ளலாம், கண்டிப்பாக இந்தப்பதிவு சிறு தொழில்நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் முதல் நம் அனைவருக்கும் உதவும்.
PDF கோப்புகளை ஆன்லைன் மூலம் சேர்க்க, பிரிக்க, பாதுகாக்க என அனைத்தும் செய்ய உதவும் தளம்.
மூன்றே நிமிடத்தில் ரிங்டோன் ( Ringtone ) உருவாக்க உதவும் பயனுள்ள மென்பொருள்
புகைப்படத்துக்கு சேதம் இல்லாமல் அளவு ( எடை ) குறைக்க உதவும் மிகவும் பயனுள்ள தளம்.
உலகெங்கும் எடுக்கப்பட்ட அரிய ஆவணப்படங்களை ஆன்லைன் மூலம் 
இலவசமாக பார்க்க உதவும் பயனுள்ள தளம்

THANKS:
http://www.winmani.com/2012/06/10/invoice-journal/

கருத்துகள் இல்லை: