சனி, ஜூன் 16, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை பாடலாக சொல்லிக்கொடுக்கும் தளம்.

பாடல்கள் மூலம் பாடம் நடத்த முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும் மாணவர்கள் எளிதாக அறிவியல் மற்றும் கணித பாடங்கள் மற்றும் ஃபார்முலா ஞாபகம் வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
கணிதம் என்றால் நமக்கு அவ்வளவாக வராது , கணித வாய்ப்பாடுகளை ஞாபகம் வைத்து சரியாக சொல்வதென்றால் முடியவே முடியாது என்கிறீர்களா ? , உங்களுக்கு ஆன்லைன் மூலம் கணித மற்றும் அறிவியல் பாடங்களை பாடல்களாகவே சொல்கிறது இத்தளம் இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://rhymenlearn.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Maths அல்லது Science என்ற மெனுவில் எது வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும், உதாரணமாக கணிதம் என்றால் அல்ஜீப்ரா முதல் Statistics வரை அத்தனையும் Rap பாடல்களாகவே சொல்லி கொடுக்கிறது, நவீன மாணவர்கள் இதை மனதில் எளிதாக பதிய வைத்துக்கொள்கின்றனர், எந்தப்பாடம் வேண்டுமோ அதை சொடுக்கினால் போதும் வலது பக்கம் மேல் குறிப்பிட்ட பாடத்துக்கான வீடியோ காட்டப்படும் அதில் நாம் தேர்ந்தெடுத்த பாடத்தை அழகாக பார்க்கவும் பாடலாக கேட்கவும் செய்யலாம். கண்டிப்பாக புதுமைவிரும்பிகளுக்கும் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
விளையாட்டு மூலம் இசைப்பயிற்சி கொடுக்கும் பயனுள்ள தளம்.
மனதிற்கு ஓய்வு அளிக்கும் இசையை படத்துடன் அள்ளிக்கொடுக்கும் தளம்.
ஆன்லைன் கித்தார் மூலம் நாம் விரும்பும் இசையை எளிதாக உருவாக்க உதவும் பயனுள்ள தளம்.
நம் பாடலுக்கு ஏற்ற இசையை நாமே உருவாக்க புதிய மெகா இசை ஸ்டூடியோ.
THANKS:  வின்மணி
http://www.winmani.com/2012/06/15/rhymen-learn/ 

கருத்துகள் இல்லை: