இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அனைத்து இமெயில் சேவை வழங்கும் நிறுவனங்களும் (email service
provider) இணைப்பு கோப்புகளுக்கான (attachment size) அளவை கட்டுபடுத்தி
வைத்துள்ளனர். ஜிமெயிலில் 25MB க்கும் குறைவான அளவுள்ள கோப்புகளை மட்டும்
இணைக்க முடியும், மற்ற இமெயில் சேவைகளில் இந்த அளவிற்க்கு கூட முடியாது.
பொதுவாக விடியோ கோப்புகள் அல்லது புகைப்படங்களின் தொகுப்புகள் போன்ற ஊடக
கோப்புகள் (Media files) தான் பெரிய அளவில் இருக்கும்.

WizDrop
இதற்கு ஒரு தீர்வாக இருக்கும் என நம்பலாம். WizDrop லிருந்து 100MB
அளவுள்ள கோப்புகள் வரை இமெயில் முகவரிக்கோ அல்லது கைபேசிக்கோ
அனுப்பலாம். இவ்வாறு wizdrop லிருந்து இமெயில் அனுப்பும் முறையை கீழே
காணலாம்.

1. உங்களின் இமெயில் முகவரியை தட்டச்சு செய்யவும்.

2. Browse பொத்தனை அழுத்தி இணைக்க வேண்டிய கோப்பை இணைக்கவும். அனைத்து விதமான விடியோ, ஆடியோ, மற்றும் புகைப்ப்டங்கள் போன்றவற்றையும் இதில் இணைக்க முடியும். ஆனால் இதில் zip format கோப்புறைகளை இணைக்க முடியாது. முன்பே சொன்னதை போல் 100MB அளவுள்ள கோப்புகள் வரை இதில் இணைக்க முடியும்.

உங்கள் கோப்புகள் இணையும் வரை இமெய்லின் subject ஐ தட்டச்சு செய்யலாம். ஆனால் இது இமெயில்க்கு மட்டும் தான். மொபைல் போனில் தெரியாது.

3. உங்கள் கோப்பு அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி மற்றும் கைபேசி எண் போன்றவற்றை இட்டு, பாதுகாப்பு குறியீட்டை தட்டச்சு செய்யவும்.

4. கடைசியாக, Drop button ஐ அழுத்தவும்.

5. உங்கள் கோப்பு Drop செய்யப்பட்டதாக அறிவிப்பு வரும்.
கிட்டத்தட்ட உடனடியாக, உங்கள் நண்பர்கள் மின்னஞ்சலை, உங்கள் கோப்புகளின் பதிவிறக்க இணைப்புடன் கூடிய இமெயில் அடைந்திருக்கும்.
ஜிமெயில் இவ்வகை மின்னஞ்சல்களை spam உறையினுள் தள்ளிவிடும், எனவே நீங்கள் கோப்புகளை அனுப்பும் முன் பெறுநருக்கு ஒரு தகவலை தெரிவித்துவிடவும். கோப்புகளை பதிவேற்றும் மற்றும் பதிவிறக்கும் வேகங்கள் சாதாரணமாக தான் உள்ளன. ஆனால், இது இப்பொழுது வழக்கத்திலுள்ள மற்றவற்றை விட வேகமாக தான் இருக்கிறது.

Popularity: 3% [?]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக