அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், பிப்ரவரி 01, 2012

இவர் டாக்டரா, வியாபாரியா?

சிறை அனுபவம் குறித்த் பதிவு அனுமார் வால் போல் நீள்கிறது. முழுவதையும் எழுதிவிட்டுத்தான் அதை வெளியிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். இதற்கிடையில் வேறு சில அனுபவங்கள். பதிவுலகில் காணாமல் போய்விடக் கூடாது என்பதற்காக இந்த இடைக்கால பதிவு.
சமீபத்தில் என்னுடைய பழைய பதிவு ஓன்று ஒரே நாளில் அதிகம் படிக்கப்பட்டது. அப்படி என்ன அதில் எழுதி இருக்கிறேன் என்ற ஆர்வம் ஏற்பட, மீண்டும் படித்தேன். சில குறைகள் தென்பட்டது. திருத்தினேன்.
அதாவது ஏற்கனவே நான் சொன்ன ஒரு விஷயம் தற்போது அபத்தமாக தெரிய, அதை திருத்திவிட்டேன். அது தேர்தலுக்கு முன் எழுதப்பட்டது. அந்த சூழ்நிலையில் அந்த வார்த்தைகள் பொருத்தமாக இருந்திருக்கும். தற்போது அதை படித்தால் அபத்தமாக இருக்கும். `சவுக்கு` சங்கர் தளத்தில் கட்டுரைகளை தொடர்ந்து படிப்பதாலும், சில கட்டுரைகள் நிறையவே வெளிச்சத்தை காட்டியதாலும் இந்த மாற்றம்.
நாம் கொண்டிருக்கும் எந்த ஒரு கருத்தும் காலப் போக்கில் மாறக் கூடியவை. வாதங்கள் முறையாக இருந்தால் அதை ஏற்றுக் கொண்டு என் கருத்தை மாற்றிக் கொள்ள நான் தயங்கியதில்லை. ஒருவரை எனக்கு பிடிக்கும் என்று சொல்வோம். அந்த வார்த்தைகள் அந்த காலத்தை பிரிதிபலிப்பவை. அந்த சமயம் அவருடைய நடத்தைகள் நமக்கு பிடித்திருக்கும், எனவே சொல்லி இருப்போம். அதன் பின் அவருடைய சுயரூபம் நமக்கு தெரியவந்தால், அதனடிப்படையில் நாம் நம் கருத்தை மாற்றிகொள்வோம்.
அதேசமயம் சில தியரிகளும் இருக்கின்றன. கடலூரில் நான் பேச்சலராக இருந்த போது ஒரு ஐயர் ஓட்டலில் காலை டிபன் முடிப்பது வழக்கம். அவ்வளவு ருசியாக இருக்கும். பின்னர் கால ஓட்டத்தில் அங்கே விலையும் ஏறியது, சுவையும் மாறியது. மாஸ்டர் மாறி இருக்கலாம் அல்லது நிர்வாகம் மாறி தரம் குறைந்திருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட நடைமுறைக்கு பழகிப் போன மனம் அவ்வளவு சீக்கிரம் மாற்றத்தை ஏற்கவில்லை. எனவே திட்டிக் கொண்டே அங்கேயே சாப்பிடுவது வழக்கம். அதேசமயம் வேறு ஓட்டல்கள் எதுவும் (அருகில்) தரமாக இல்லை என்பதும் ஒரு காரணம்.
இதே தியரிதான் நாம் வாசிக்கும் பத்திரிக்கைகள் விஷயத்திலும். எனவே சில பத்திரிகைகள் குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் இந்த தியரியின் பாதிப்பால்தான்.
டாக்டரா, வியாபாரியா?
சமீபத்தில் எனக்கு ஜலதோஷம் பிடிக்க, பக்கத்தில் இருந்த ஆஸ்பிடலுக்கு (நங்கநல்லூர்) போனேன். இங்கே சில வருடங்களுக்கு முன், ஒரு பேஷண்டுக்கு கொடுக்கப்பட்ட மருந்து அவருக்கு அலர்ஜி ஆகி, அந்த பெண் இறந்து விட்டார். இது பத்திரிக்கைகளில் பரபரப்பாக அடிபட்டது.
பத்த்ரிக்கைகளில் கிடைத்த நெகடிவ் பப்ளிசிடியின் பாதிப்பால், `உங்களுக்கு அலர்ஜி இருந்தால் தெரிவியுங்கள்` என்ற போஸ்டர் மூலமாக மட்டுமின்றி, பல முறை நேரடியாகவும் கேட்கப்பட்டது. சரி, அனுபவம் பேசுகிறது, இது நல்லதுக்குத்தான் என்று நினைத்தேன்.
ஆனால் மெடிக்கலில் டாக்டர் எழுதிய மாத்திரைகளை வாங்கும் போதுதான் ஷாக் அடித்தது. மதிப்பு 850 ரூபாய். டாக்டர் சம்பிரதாய டெஸ்ட்தான் (ஸ்டெதாஸ்கோப்) செய்தார். வேறு எந்த லேப் டெஸ்டும் கிடையாது. அப்படி இருக்கில் சாதாரண ஜலதோஷத்துக்கு இவ்வளவு ரூபாய்க்கு மாத்திரையா? எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனவே மருந்து வாங்கவில்லை.
ஒரு வேளை என்னிடம் சத்து குறைவாக இருந்து, நோயின் தன்மை அதிகமாக இருந்து அதற்காகவும் எழுதி இருக்கலாம் என்று சமாதானமானேன். இருந்தாலும் வாய் சும்மா இல்லாமல் இதை நான் அக்கம் பக்கம் பேச ஆரம்பிக்க, பல கதைகள், அதாவது புலம்பல்கள் காதில் விழுந்தது. ஒருவர் `இவர் மெடிக்கலும் ஆரம்பிச்ச் பிறகு இன்னும் மோசம்` என்றார்.
இருந்தாலும் அவசரப்பட்டு யாரையும் குறை சொல்லக்கூடாது என்பதாலும், நானும் இதை ஊர்ஜத்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால், உடனடியாக வேறு ஒரு டாக்டரை பார்த்தேன். இந்த டாக்டரிடம் அதே வார்த்தைகளைதான் சொன்னேன். அவரும் அதே டெஸ்ட்தான் எடுத்தார். ஆனால் அவர் எழுதிக் கொடுத்த மாத்திரையின் மதிப்பு 100 ரூபாய். அதிலேயே ஜலதோஷம் ஓடிவிட்டது. இதை என்னவென்று சொல்வது?
வியாதிகளில் ஆபத்தில்லாத, ஆரம்பக்கட்டம், தீவிரம் என்று பல விதம் இருக்கிறது. மருந்தை மட்டும் எழுதிகொடுத்து, `இதிலேயே குணமாகிவிடும். அப்படியும் ஆகவில்லை என்றால், டெஸ்ட் எடுத்து பார்ப்போம்` என்று சொல்லும் நல்ல டாக்டர்களும் உண்டு. இரண்டாவதாக பார்த்த டாக்டரும் அதைத்தான் சொன்னார். உடல்நலம் முக்கியமானதுதான், அதற்காக எல்லாவற்றையும் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பது நல்லதல்ல. ஏழைகளுக்கு அது அனாவசிய செலவு.
இந்த சம்பவம் கடலூரில் நான் கண்ட இன்னொரு சம்பவத்தை நினைவுபடுத்தி விட்டது. அங்கே ஒரு சைக்கிள் கடையில் பஞ்சர் ஓட்ட வந்தார் ஒருவர். அதில் ஏற்கனவே பல பஞ்சர் ஒட்டப்பட்டிருக்க, `டியுப் மாத்தனுமா?` என்று கடைகாரரிடம் அவர் கேட்டிருக்கிறார். `இன்னும் ரெண்டு, மூணு பஞ்சர் தாங்கும். அப்புறம் மாத்திக்கலாம்` என்று சொல்லி இருக்கிறார் அவர்.
காலம் மாறியது. இப்போது அந்த சைக்கிள் கடைக்காரர் கொஞ்சம் முன்னேறிவிட்டார். அதாவது அவரும் டியுப், டயர் விற்க ஆரம்பித்துவிட்டார். இப்போதும் அதே சம்பவம். ஆனால் இந்த முறை `டியுப் அடி வாங்கிடிச்சு. மாத்திடுங்க` என்றார். பழைய சம்பவத்தை சைக்கிள் கடைக்காரர் மறந்திருக்கலாம். ஆனால் இவர் மறக்கவில்லை.
இருவரும் நண்பர்கள் போலிருக்கிறது, எனவே அதை நினைவுபடுத்தி, `ஏண்டா, அன்னிக்கும் இதே மாதிரிதான் டியுப் இருந்தது. அப்ப வேணாம்ன்னு சொன்னவன், இப்ப நீ டியுப் விக்க ஆரம்பிச்ச உடனே, `டியுப் மாத்திடு`ன்னு சொல்ற. நீ வியாபாரி ஆயிட்டடா` என்று சொல்லி கலாய்த்தார்.
நான் இரண்டாவதாக பார்த்த டாக்டர் மெடிக்கல் வைத்திருக்கவில்லை. எனவேதான் இவர் நல்ல டாக்டராக இருக்காரோ என்ற சந்தேகம் வந்தது. எனவே மெடிக்கல் வைத்துள்ள இன்னொரு டாக்டரை பார்ப்போமா என்ற எண்ணமும் வந்தது. `அப்புறம் மருந்து செலவை விட டாக்டருக்கு கொடுக்கும் கன்சல்டிங் பீஸ் அதிகமாகிவிடும். வேண்டாம்` என்று ஆறாவது அறிவு கட்டளையிட, இந்த ஆராய்ச்சியை அத்துடன் முடித்துக் கொண்டேன்.
இந்த `அலர்ஜி` டாக்டர், டாக்டராக இல்லாமல் ஒரு வியாபாரியாகத்தான் மருந்து எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த டாக்டரைபற்றி பலருடைய விமர்சனங்களும் அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. அதேசமயம் இந்த ஒரு அனுபவத்தை மட்டும் வைத்துக் கொண்டு எல்லா டாக்டரையும் குறை சொல்ல முடியாது. சேம்பல் பத்தாது. இன்னொரு முறை வியாதி வந்தால் இதேபோல் மெடிக்கல் வைத்திருக்கும் வேறு ஒரு டாக்டரிடமும், மெடிக்கல் இல்லாத ஒருவரிடமும் பரிசோதித்து அவர்களை டெஸ்ட் பண்ணவேண்டும். அல்லது உங்களிடம் ஏதாவது அனுபவம் இருந்தால் சொல்லுங்கள்.
ஆனால் ஓன்று மட்டும் நிஜம். அதாவது டாக்டர்கள் வியாபாரிகள் ஆகி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு போய், இப்போது வியாபாரிகள்தான் டாக்டராக இருக்கிறார்கள் என்ற சொல்லும் நிலை வரும் போலிருக்கிறது.

5 comments:

ராஜ நடராஜன் said...
தலைவலி,காய்ச்சல் போன்றவை பல காரணங்கள்,கால மாற்றங்கள் போன்றவற்றால் ஏற்படும் சாதாரண உடல் நோய்களே.இந்திய ஜனநாயக அடிப்படையில் குறைந்த விலைக்கே வைத்தியம்,மருந்துகள் செய்யலாம்.

ஆனால் பிரச்சினையின் மையம் போட்ட பணத்தை திரும்ப எடுத்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் போது சமூக சேவை எண்ணங்கள் பின் தள்ளப்பட்டு சுயநலம் முந்திக்கொள்கிறது.

மருத்துவர்கள்,காவல்துறை,அரசு ஊழியர்கள்,வழக்கறிஞர்கள் என்று பல துறைகளில் இருப்பவர்கள் சமூக கட்டமைப்பில் ஓரளவுக்கு நடுநிலை வருமானக் கோட்டுக்குள் இருப்பவர்கள்.பேராசைகளை பின் தள்ளுவது மட்டுமே இவர்களுக்கு மதிப்புக்குரிய அங்கீகாரத்தை சமூகம் தரும்.
V.Radhakrishnan said...
தங்களின் அனுபவமும், தங்கள் நண்பரின் அனுபவமும் உலகைப் பற்றிய விசயங்களை தெளிவு படுத்துகின்றன.

'தொழில்' என வரும்போது அங்கே வியாபார நோக்கம் இருக்கும்.

'சேவை' என வரும்போது அங்கே வியாபார நோக்கம் அடிபட்டு விடும்.

மருத்துவர் மருத்துவ தொழில் செய்கிறார். மருத்துவ சேவை அருகிப் போன காலம் இது.

கூகிள் கூடத்தான் இந்த வலைப்பூ சேவை செய்து வருகிறது. :)
Vetrimagal said...
It is absolute shame, that doctors, have their pharmacy flourish by prescribing a list of medications. At he drop of a hat , we compare with western countries,. Why dont they follow similar practices here.

The doctor is supposed to explain the medication, and its effect,and why he is prescribing them. Very few do it.

The more the medications for a simple illness, the more the side effects. Does the doctor/businessman care?
If they are doing business, I wonder whether they abstained from taking the Hippocrates oath?

The old fashioned patient - General practitioner relations hip needs to be established again. So that the Doctors care for their patients and not use them as banks for their millions.
சிவானந்தம் said...
வாங்க நடராஜன் சார்,

ஜலதோஷம் பற்றி ஒரு கிண்டல் உண்டு. அதாவது டாகடரிடம் போனால் ஒரு வாரத்தில் குணமாகும், போகாவிட்டால் 7 நாளில் குணமாகும் என்று. அதாவது அது தானாக வந்து தானாகவே போய்விடும் என்று. இதற்கெல்லாம் வீட்டு (பாட்டி) வைத்தியமே போதும். இருந்தாலும் இந்த முறை சரி, மருந்து எடுத்துக் கொள்வோம் என்று தோன்றியதால் போனேன். எனவே இந்த அனுபவம். எல்லாம் நல்லதற்கே.

///பேராசைகளை பின் தள்ளுவது மட்டுமே இவர்களுக்கு மதிப்புக்குரிய அங்கீகாரத்தை சமூகம் தரும்.///

நல்ல வார்த்தைகள்தான். ஆனால் இவர்கள் உணரவேண்டுமே!
சிவானந்தம் said...
வாங்க ராதாகிருஷ்ணன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

///மருத்துவர் மருத்துவ தொழில் செய்கிறார்.///

சரியான வார்த்தை. அவர் தொழில் செய்கிறார். ஒரு மருத்துவர் சேவை மனப்பான்மையோடு செயல்பட்டால் நிச்சயம் காணாமல் போய்விடுவார். எனவே அவர் கொஞ்சம் வியாபாரியாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அந்த வியாபாரிகளிடமும் ஒரு நேர்மை இருக்கும். நமது வாடிக்கையாளர்கள் தொடரவேண்டும் என்பதிலும், அவர்கள் நம்மை பற்றி நெகடிவ் பப்ளிசிட்டி செய்யக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள். இவரிடம் அந்த சென்சும் இல்லை.

//கூகிள் கூடத்தான் இந்த வலைப்பூ சேவை செய்து வருகிறது///

இதை ஏன் நீங்கள் இழுத்தீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த சேவையில் அவர்களுக்கு லாபம் இருந்தாலும், நமக்கு அது வழங்கும் சேவை தரமானதுதானே?

http://anindianviews.blogspot.in/2012/02/blog-post_01.html

வியாழன், ஜனவரி 05, 2012

அண்ணா.தி.மு.க-வை எம்.ஜி.ஆர்.,ஆரம்பித்த வரலாறு



னைத்திந்திய அண்ணா.தி.மு.க., தன் 40-ஆம் வருட துவக்க விழாவில் நுழையும் நாளான இன்று இந்த இடுகையை எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும். நண்பர் செங்கோவியின் வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் இணைந்தது முதல் வெளியான வரை உள்ள வரலாற்றை முன்பே எழுதியிருந்தேன்..இல்லை...இல்லை...தொகுத்திருந்தேன்.

அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்.,ஆரம்பித்தது முதல் ஆட்சியை பிடித்தது வரை உள்ள வரலாற்றை தொகுக்குமாறு கேட்டிருந்தார்.அதன் நீண்ட பதில்கள் தான் இந்த பதிவு.....

டந்த 39 வருடங்களுக்கு முன்பு இதே மாதம், இதே நாளில் அதாவது அக்டோபர்-17, 1972-ஆம் ஆண்டு அண்ணா.தி.மு.க.,வை ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.,(அப்போது கட்சியின் பெயர் அனைத்திந்திய அண்ணா.தி.மு.க.,அல்ல....வெறும் அண்ணா.தி.மு.க.,தான். இந்திராகாந்தி மீதிருந்த பயத்தால் அ.இ.அ.தி.மு.க., என்று கட்சியின் பெயரை மாற்றிக்கொண்டார் எம்.ஜி.ஆர்., அந்த கதை பின்னாளில்...)



எம்.ஜி.ஆரின் விருப்பப்படியே மேலே கருப்பு, கீழே சிவப்பு, நடுவில் அண்ணாவின் உருவமென்று கட்சி கொடியை வடிவமைத்து கொடுத்தார் சினிமா கலை இயக்குனர் அங்கமுத்து. எம்.ஜி.ஆர்., மன்றங்களை அண்ணா.தி.மு.க.,என்று மாற்றிக்கொள்ளுமாறு தன் ரசிகர்களுக்கு கட்டளையிட்டார் எம்.ஜி.ஆர்.., அதன்படி தமிழகத்திலுள்ள அனைத்து எம்.ஜி.ஆர்.,மன்றங்களும் அண்ணா.தி.மு.க., என்று பெயர் மாற்றம் கண்டது. தமிழகத்தில் மட்டுமின்றி பெங்களூர், பம்பாய் முதலிய நகரங்களிலும் இருந்த மன்றங்கள் எல்லாம்அண்ணா தி.மு.க.,கிளைகளாக மாற்றப்பட்டது. 20 ஆயிரம் கிளைகளுடன் அண்ணா.தி.மு.க.,ஆரம்பிக்கப்பட்டதாக அறிவித்தார் எம்.ஜி.ஆர்.




கட்சியின் துவங்கிய போது அண்ணா.தி.மு.க.,வின் சட்டமன்ற பலம் ஒன்றாக இருந்தது. ஆம்...எம்.ஜி.ஆர்.,ஒருவர்தான் எம்.எல்.ஏ.,


அதன் பிறகு சில நாட்களிலேயே
எஸ்.எம். துரைராஜ், குழ. செல்லையா, சௌந்தரபாண்டியன், ஜி.ஆர். எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.பி.யாக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம்,பாவலர் முத்துசாமி, ராஜ்யசபா எம்.பி.யான கே.ஏ.கிருஷ்ணசாமி ஆகியோரும் சேர்ந்தனர். அதி.மு.க.,வின் அவைத்தலைவராக பாவலர் முத்துசாமியையும், அமைப்பாளராக கே.ஏ.கிருஷ்ணசாமியையும்(கே.ஏ.கே) நியமித்த எம்.ஜி.ஆர்., அண்ணா.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ ஏடாக கே.ஏ.கே.,வின் தென்னகம் ஏடையே தேர்ந்தெடுத்தார்.

அண்ணா.தி.மு.க.,வின் முதல் கூட்டம் சென்னை கடற்கரையில் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் சி.வி. வேலப்பன். கே.காளிமுத்து, கோவை செழியன், ஜி. விஸ்வநாதன் முதலிய சட்டமன்ற உறுப்பினர்களும் தி.மு.க.,விலிருந்து விலகி அண்ணா.தி.மு.க.வில் இணைந்தனர். அந்த கூட்டத்தில் பேசிய அமைப்பாளர் கே.ஏ.கே.,கட்சி ஆரம்பித்த சில நாட்களுக்குள் அ.தி.மு.க.,விற்கு ஆறாயிரம் புதிய கிளைகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இணைண்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், புரட்சி நடிகர் என்பது கருணாநிதி வழங்கிய பட்டம். அது துரோகி வழங்கிய பட்டம் என்பதால் இனி அது எம்.ஜி.ஆருக்கு தேவையில்லை. இனி அவரை புரட்சித்தலைவர் என்று அழைப்போம் என்றார். அன்றுமுதல் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவரானார்.

தி.மு.க.,விலிருந்து ஈ.வி.கே.சம்பத் விலகி தமிழ் தேசிய காங்கிரசை ஆரம்பித்தபோது, அந்த கட்சியை குட்டி காங்கிரஸ் என்று கிண்டலடித்த தி.மு.கவினர், இப்போது எம்.ஜி.ஆர்., துவங்கிய அண்ணா.தி.மு.க.,வை ஒட்டு காங்கிரஸ் என்று கிண்டல் செய்தனர். அதற்கும் காரணம் இருந்தது. அதாவது எம்.ஜி.ஆர்.,புதிதாக கட்சி ஆரம்பிக்க உதவியதில் முக்கியமானவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், இந்திரா காந்திக்கே ஆலோசனை சொல்பவருமான மோகன் குமாரமங்கலம். அதனால்தான் ஒட்டு காங்கிரஸ் என்று வர்ணித்தனர் தி.மு.க.,வினர்.

எம்.ஜி.ஆர்.,கணக்கு கேட்டதெல்லாம் ஒரு நாடகம். எம்.ஜி.ஆர்., தி.மு.க.,விலிருந்து கணக்கு தீர்த்துக்கொள்ள விரும்பினாரே தவிர, கணக்குப்பார்க்க விரும்பவில்லை என்று கலைஞர் காட்டமாக விமர்சித்தார்.

. எம்.ஜி.ஆரின் கட்சிக்கு இப்போது இருக்கும் சக்தி ஒரு மாயத்தோற்றம்தான், ஒரு தனிமனிதனின் கவர்ச்சியே  அண்ணா.தி.மு.க.,வின் பலம்.இன்னும் மூன்று, அல்லது நான்கு மாதங்களில் அண்ணா.தி.மு.க.,கரைந்து போய்விடும் என்று விமர்சித்தார் நாவலர்.

அடுத்ததாக அறிஞர் அண்ணாவின் மனைவி, திருமதி ராணி அம்மாள் மூலம் எம்.ஜி.ஆருக்கு ஒரு சோதனை வந்தது. அது......

இன்னும் வ(ள)ரும்....

ஞாயிறு, ஜனவரி 01, 2012

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு

     
        எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் திலகம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் தாயும் மகனும் தமிழகத்தில் கும்பகோணத்தில் குடியேறினார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே அவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார்.


     1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், எம்.ஜி.ஆர். தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள் 135. இவற்றுள் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை 115.




     எம்.ஜி.ஆர். முதலில் தங்கமணி என்பவரை மணந்தார். அவர் நோயுற்று இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். இவரும் நோயுற்று இறந்து விட்டார். பின்னர் எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகியை மணந்து கொண்டார். துரதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.

     எம்.ஜி.ஆர். ஆரம்ப நாட்களில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், நேதாஜி பக்தராகவும் இருந்தார். பின்னர் ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு நாட்களில் கலைஞர் கருணாநிதியுடன் கொண்ட நட்பால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பால் ஈர்க்கப்பட்டார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக திகழ்ந்தார். எம்.ஜி.ஆர். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின், முதலமைச்சராக பதவி ஏற்ற கலைஞர் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறினார். 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கினார். 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் இரண்டாம் முறையாக முதல்வரானார். 1984ல் இவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்கு சிகிச்சை பெற அமெரிக்காவின் புருக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருக்கும் போதே தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். 1987ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்து பதவியிலிருக்கும் போதே 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.




     இன்றளவும் எம்.ஜி.ஆர். அவர்கள் தாம் நடித்த திரைப்படங்களுக்காக மட்டுமின்றி, தம் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திய பல மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்காகவும் மிகவும் போற்றப்படுகிறார். அவற்றுள் மிக முக்கியமானது பள்ளி மாணவர்களுக்காக அவர் கொண்டுவந்த சத்துணவுத் திட்டம் ஆகும். மேலும் ஈழ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமது இறுதிநாள் வரை பெரிதும் துணைநின்றார் எம்.ஜி.ஆர். அவர்கள்.


விருதுகள் மற்றும் கௌரவங்கள்

1960 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டும் இந்தியில் அதன் வாசகங்கள் இருந்ததால் ஏற்க மறுத்துவிட்டார்.
1972 ஆம் ஆண்டு ரிக்ஷாகாரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது
1987 ஆம் ஆண்டு மரணத்துக்கு பிந்தைய பாரத ரத்னா விருது
சென்னை பல்கலை மற்றும் அரிசோனா உலகப் பல்கலையின் டாக்டர் பட்டம்




எம்.ஜி.ஆர். நடித்துள்ள படங்கள்

முப்பதுகளில்
1. சதி லீலாவதி - 1936 - மனோரமா பிலிம்ஸ் - எல்லிஸ் ஆர். டங்கன்
2. இரு சகோதரர்கள் - 1936 - பரமேஸ்வரி சவுண்ட் பிக்சர்ஸ் - எல்லிஸ் ஆர். டங்கன்
3. தட்ச யக்ஞம் - 1938 - மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ் - ராஜா சந்திரசேகர்
4. வீர ஜகதீஷ் - 1938 - வி.எஸ். டாக்கீஸ் - டி.பி.கைலாசம், ஆர் பிரகாஷ்
5. மாய மச்சேந்திரர் - 1939 - மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ் - ராஜா சந்திரசேகர்
6. பிரஹலாதா - 1939 - சேலம் சங்கர் பிலிம்ஸ் - பி.என். ராவ்

நாற்பதுகளில்
7. அசோக்குமார் - 1941 - முருகன் டாக்கீஸ் பிலிம் கம்பெனி - ராஜா சந்திரசேகர்
8. வேதவதி அல்லது சீதா ஜனனம் - 1941 - சியாமளா பிக்சர்ஸ் - டி.ஆர். ரகுநாத்
9. தமிழ் அறியும் பெருமாள் - 1942 - உமா பிக்சர்ஸ் - டி.ஆர். ரகுநாத்
10. தாசி பெண் அல்லது ஜோதி மலர் - 1943 - புவனேஸ்வரி பிக்சர்ஸ் - எல்லிஸ் ஆர். டங்கன்
11. அரிச்சந்திரா - 1943 - ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பிலிம் கம்பெனி - நாகபூஷணம்
12. மீரா - 1945 - சந்திரபிரபா சினிடோன் - எல்லிஸ் ஆர். டங்கன்
13. சாலிவாகனன் - 1945 - பாஸ்கர் பிக்சர்ஸ் - பி.என். ராவ்
14. ஸ்ரீ முருகன் - 1946 - ஜுபிடர் - எம். சோமசுந்தரம், வி.எஸ். நாராயண்
15. பைத்தியக்காரன் - 1947 - என்.எஸ்.கே. பிலிம்ஸ் - கிருஷ்ணன், பஞ்சு
16. ராஜகுமாரி - 1947 - ஜுபிடர் - ஏ.எஸ்.ஏ. சாமி - 160 நாட்கள்
17. அபிமன்யூ - 1948 - ஜுபிடர் - ஏ.எஸ்.ஏ. சாமி
18. மோகினி - 1948 - ஜுபிடர் - லங்கா சத்யம் - 133 நாட்கள்
19. ராஜ முக்தி - 1948 - நரேந்திரா பிக்சர்ஸ் - ராஜா சந்திரசேகர்
20. ரத்னகுமார் - 1949 - முருகன் டாக்கீஸ் பிலிம் கம்பெனி - கிருஷ்ணன், பஞ்சு
ஐம்பதுகளில்
21. மந்திரி குமாரி - 1950 - மாடர்ன் தியேட்டர்ஸ் - டி.ஆர். சுந்தரம், எல்லிஸ் ஆர். டங்கன் - 146 நாட்கள்
22. மருதநாட்டு இளவரசி - 1950 - ஜி.கோவிந்தன் அண்ட் கோ - 133 நாட்கள்
23. மர்ம யோகி - 1951 - ஜுபிடர் - கே. ராம்நாத் - 151 நாட்கள்
24. ஏக்தா ராஜா - 1951 - இந்தி (டப்பிங்)
25. சர்வாதிகாரி - 1951 - மாடர்ன் தியேட்டர்ஸ் - 141 நாட்கள்
26. சர்வாதிகாரி - 1951 - தெலுங்கு (டப்பிங்)
27. அந்தமான் கைதி - 1952 - ராதாகிருஷ்ணா பிலிம்ஸ் - வி. கிருஷ்ணன் - 133 நாட்கள்
28. என் தங்கை - 1952 - அசோகா பிக்சர்ஸ் - சி.எ. நாராயணமூர்த்தி - எம்.கே.ஆர். நம்பியார் - 181 நாட்கள்
29. குமாரி - 1952 - ஆர்.பத்மநாபன், ராஜேஸ்வரி - ஆர். பத்மநாபன் - 112 நாட்கள்
30. ஜெனோவா - 1953 - சந்திரா பிக்சர்ஸ் - எப். நாகூர் - 133 நாட்கள்
31. ஜெனோவா - 1953 - மலையாளம் (டப்பிங்)
32. நாம் - 1953 - ஜுபிடர், மேகலா - ஏ. காசிலிங்கம் - 84 நாட்கள்
33. பணக்காரி - 1953 - உமா பிக்சர்ஸ் - கே.எஸ். கோபாலகிருஷ்ணன் - 70 நாட்கள்
34. கூண்டுக்கிளி - 1954 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா - 77 நாட்கள்
35. மலைக்கள்ளன் - 1954 - பக்ஷிராஜா - எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு - 150 நாட்கள்
36. குலேபகாவலி - 1955 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா - 166 நாட்கள்
37. அலிபாபாவும் 40 திருடர்களும் - 1956 - மாடர்ன் தியேட்டர்ஸ் - டி.ஆர். சுந்தரம் - 168 நாட்கள்
38. மதுரை வீரன் - 1956 - கிருஷ்ணா பிக்சர்ஸ் - யோகானந்த் - 169 நாட்கள்
39. தாய்க்குப் பின் தாரம் - 1956 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம் - 147 நாட்கள்
40. சக்கரவர்த்தி திருமகள் - 1957 - உமா பிக்சர்ஸ் - பி. நீலகண்டன் - 140 நாட்கள்
41. மகாதேவி - 1957 - ஸ்ரீ கணேஷ் மூவிடோன் - சுந்தர் ராவ் நட்கர்னி - 117 நாட்கள்
42. புதுமைப்பித்தன் - 1957 - சிவகாமி பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா - 112 நாட்கள்
43. ராஜராஜன் - 1957 - நீலா புரொடக்சன்ஸ் - டி.வி. சுந்தரம் - 77 நாட்கள்
44. நாடோடி மன்னன் - 1958 - எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் - எம்.ஜி.ஆர். - 161 நாட்கள்
45. தாய் மகளுக்கு கட்டிய தாலி - 1959 - கல்பனா கலா மந்திர் - ஆர். ஆர். சந்திரன் - 86 நாட்கள்

அறுபதுகளில்
46. பாக்தாத் திருடன் - 1960 - சதர்ன் மூவிஸ் - டி.பி. சுந்தரம் - 112 நாட்கள்
47. மன்னாதி மன்னன் - 1960 - நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் - எம். நடேசன் - 93 நாட்கள்
48. ராஜா தேசிங்கு - 1960 - கிருஷ்ணா பிக்சர்ஸ் - டி.ஆர். ரகுநாத் - 77 நாட்கள்
49. அரசிளங்குமரி - 1961 - ஜுபிடர் - ஏ.எஸ்.ஏ. சாமி - 92 நாட்கள்
50. நல்லவன் வாழ்வான் - 1961 - அரசு பிக்சர்ஸ் - பி. நீலகண்டன் - 84 நாட்கள்
51. சபாஷ் மாப்பிள்ளை - 1961 - ராகவன் புரொடக்சன்ஸ் - எஸ். ராகவன் - 70 நாட்கள்
52. தாய் சொல்லைத் தட்டாதே - 1951 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம் - 133 நாட்கள்
53. திருடாதே - 1961 - ஏ.எல்.எஸ். - பி. நீலகண்டன் - 161 நாட்கள்
54. குடும்பத் தலைவன் - 1962 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம் - 108 நாட்கள்
55. மாடப்புறா - 1962 - பி.வி.என். புரொடக்சன்ஸ் - எஸ்.ஏ. சுப்புராமன் - 77 நாட்கள்
56. பாசம் - 1962 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா - 84 நாட்கள்
57. ராணி சம்யுக்தா - 1962 - சரஸ்வதி பிக்சர்ஸ் - யோகானந்த் - 70 நாட்கள்
58. தாயைக் காத்த தனையன் - 1962 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம் - 140 நாட்கள்
59. விக்கிரமாதித்தன் - 1962 - பாரத் புரொடக்சன்ஸ் - டி.ஆர். ரகுநாத், என்.எஸ். ராம்தாஸ் - 79 நாட்கள்
60. ஆனந்த ஜோதி - 1963 - ஹரிஹரன் பிலிம்ஸ் (பி.எஸ்.வி.) - வி.என். ரெட்டி
61. தர்மம் தலைக்காக்கும் - 1963 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம் - 117 நாட்கள்
62. கலை அரசி - 1963 - சரோடி பிரதர்ஸ் - ஏ. காசிலிங்கம்
63. காஞ்சித் தலைவன் - 1963 - மேகலா பிக்சர்ஸ் - ஏ. காசிலிங்கம்
64. கொடுத்து வைத்தவள் - 1963 - ஈ.வி.ஆர். பிக்சர்ஸ் - பி. நீலகண்டன் - 91 நாட்கள்
65. நீதிக்குப் பின் பாசம் - 1963 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
66. பணத்தோட்டம் - 1963 - 84 நாட்கள்
67. பரிசு - 1963 - கௌரி பிக்சர்ஸ் - யோகானந்த்
68. பெரிய இடத்துப் பெண் - 1963 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா
69. தெய்வத் தாய் - 1964 - சத்யா மூவிஸ் - பி. மாதவன்
70. என் கடமை - 1964 - நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் - எம். நடேசன்
71. படகோட்டி - 1964 - சரவணா பிலிம்ஸ், டி. பிரகாஷ் ராவ்
72. பணக்கார குடும்பம் - 1964 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா
73. தாயின் மடியில் - 1964 - அன்னை பிலிம்ஸ் - ஆடூர்தி சுப்பா ராவ்
74. தொழிலாளி - 1964 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
75. வேட்டைக்காரன் - 1964 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
76. ஆசை முகம் - 1964 - மோகன் புரொடக்சன்ஸ் - பி.புல்லையா
77. ஆயிரத்தில் ஒருவன் - 1965 - பத்மினி பிக்சர்ஸ் - பி.ஆர். பந்துலு
78. எங்க வீட்டுப் பிள்ளை - 1965 - விஜயா கம்பைன்ஸ் புரொடக்சன்ஸ் - சாணக்யா - 236 நாட்கள்
79. கலங்கரை விளக்கம் - 1965 - சரவணா பிலிம்ஸ் - கே. சங்கர்
80. கன்னித் தாய் - 1965 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
81. பணம் படைத்தவன் - 1965 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா
82. தாழம்பூ - 1965 - ஸ்ரீ பால முருகன் பிலிம்ஸ் - எஸ். ராமதாஸ்
83. அன்பே வா - 1966 - ஏ.வி.எம். - ஏ.சி. திரிலோகசந்தர்
84. நான் ஆணையிட்டால் - 1966 - சத்யா மூவிஸ் - சாணக்யா
85. முகராசி - 1966 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
86. நாடோடி - 1966 - பத்மினி பிக்சர்ஸ் - பி.ஆர். பந்துலு
87. சந்திரோதயம் - 1966 - சரவணா பிலிம்ஸ் - கே. சங்கர்
88. பறக்கும் பாவை - 1966 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா
89. பெற்றால் தான் பிள்ளையா? - 1966 - ஸ்ரீ முத்துகுமரன் பிக்சர்ஸ் - கிருஷ்ணன், பஞ்சு
90. தாலி பாக்கியம் - 1966 - வரலக்ஷ்மி பிக்சர்ஸ் - கே.பி. நாகபூஷணம்
91. தனிப்பிறவி - 1966 - தேவர் பிலிம்ஸ் - என்.எஸ். வர்மா
92. அரச கட்டளை - 1967 - சத்யராஜா பிக்சர்ஸ் - எம்.ஜி. சக்ரபாணி
93. காவல்காரன் - 1967 - சத்யா மூவிஸ் - பி. நீலகண்டன்
94. தாய்க்கு தலைவணங்கு - 1967 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
95. விவசாயி - 1967 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
96. ரகசிய போலீஸ் 115 - 1967 - பத்மினி பிக்சர்ஸ் - பி.ஆர். பந்துலு
97. தேர் திருவிழா - 1968 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
98. குடியிருந்த கோயில் - 1968 - சரவணா ஸ்கிரீன்ஸ் - கே. சங்கர்
99. கண்ணன் என் காதலன் - 1968 - சத்யா மூவிஸ் - பி. நீலகண்டன்
100. ஒளி விளக்கு - 1968 - ஜெமினி - சாணக்யா
101. கணவன் - 1968 - வள்ளி பிலிம்ஸ் - பி. நீலகண்டன்
102. புதிய பூமி - 1968 - ஜே.ஆர். மூவிஸ் - சாணக்யா
103. காதல் வாகனம் - 1968 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
104. அடிமைப் பெண் - 1969 - எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் - கே. சங்கர்
105. நம் நாடு - 1969 - விஜயா இண்டர்நேசனல் - ஜம்பு


எழுபதுகளில்
106. மாட்டுக்காரன் வேலன் - 1970 - ஜெயந்தி பிலிம்ஸ் - பி. நீலகண்டன் - 156 நாட்கள்
107. என் அண்ணன் - 1970 - வீனஸ் பிக்சர்ஸ் - பி. நீலகண்டன்
108. தலைவன் - 1970 - தாமஸ் பிக்சர்ஸ் - பி.ஏ. தாமஸ்
109. தேடி வந்த மாப்பிள்ளை - 1970 - பத்மினி பிக்சர்ஸ் - பி.ஆர். பந்துலு
110. எங்கள் தங்கம் - 1970 - மேகலா பிக்சர்ஸ் - கிருஷ்ணன், பஞ்சு
111. குமரிக் கோட்டம் - 1971 - கே.சி. பிலிம்ஸ் - பி. நீலகண்டன்
112. ரிக்ஷாக்காரன் - 1971 - சத்யா மூவிஸ் - எம். கிருஷ்ணன் நாயர்
113. நீரும் நெருப்பும் - 1971 - நியூ மணி ஜே. சினி புரொடக்சன்ஸ் - பி. நீலகண்டன்
114. ஒரு தாய் மக்கள் - 1971 - நாஞ்சில் புரொடக்சன்ஸ் - பி. நீலகண்டன்
115. சங்கே முழங்கு - 1972 - வள்ளி பிலிம்ஸ் - பி. நீலகண்டன்
116. நல்ல நேரம் - 1972 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
117. ராமன் தேடிய சீதை - 1972 - ஜெயந்தி பிலிம்ஸ் - பி. நீலகண்டன்
118. அன்னமிட்ட கை - 1972 - ராமசந்திரா புரொடக்சன்ஸ் - எம். கிருஷ்ணன்
119. நான் ஏன் பிறந்தேன் - 1972 - காமாட்சி ஏஜன்சிஸ் - எம். கிருஷ்ணன்
120. இதய வீணை - 1972 - உதயம் புரொடக்சன்ஸ் - கிருஷ்ணன், பஞ்சு
121. உலகம் சுற்றும் வாலிபன் - 1973 - எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் - எம்.ஜி.ஆர். - 203 நாட்கள்
122. பட்டிக்காட்டு பொன்னையா - 1973 - வசந்த் பிக்சர்ஸ் - பி.எஸ். ரங்கா
123. நேற்று இன்று நாளை - 1974 - அமல்ராஜ் பிலிம்ஸ் - பி. நீலகண்டன்
124. உரிமைக் குரல் - 1974 - சித்ரயுகா - சி.வி. ஸ்ரீதர்
125. சிரித்து வாழவேண்டும் - 1974 - உதயம் புரொடக்சன்ஸ் - எஸ்.எஸ். பாலன்
126. நினைத்ததை முடிப்பவன் - 1974 - ஓரியண்டல் பிக்சர்ஸ் - பி. நீலகண்டன்
127. நாளை நமதே - 1975 - கஜேந்திரா பிலிம்ஸ் - கே.எஸ். சேதுமாதவன்
128. பல்லாண்டு வாழ்க - 1975 - உதயம் புரொடக்சன்ஸ் - கே. சங்கர்
129. இதயக்கனி - 1975 - சத்யா மூவிஸ் - ஏ. ஜெகந்நாதன்
130. நீதிக்கு தலை வணங்கு - 1976 - ஸ்ரீ உமையாம்பிகை புரொடக்சன்ஸ் - பி. நீலகண்டன்
131. உழைக்கும் கரங்கள் - 1976 - கே.சி. பிலிம்ஸ் - கே. சங்கர்
132. ஊருக்கு உழைப்பவன் - 1976 - வீனஸ் பிக்சர்ஸ் - எம். கிருஷ்ணன்
133. இன்று போல என்றும் வாழ்க - 1977 - சுப்பு புரொடக்சன்ஸ் - கே. சங்கர்
134. நவரத்னம் - 1977 - சி.என்.வி. மூவிஸ் - ஏ.பி. நாகராஜன்
135. மீனவ நண்பன் - 1977 - முத்து எண்டர்பிரைசஸ் - சி.வி. ஸ்ரீதர்
136. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - 1978 - சோலீஸ்வர் கம்பைன்ஸ் - பி. நீலகண்டன்


நன்றி: பல இணையதளங்கள்.

இன்றைய பொன்மொழி:
பிறருக்கு  தொண்டு செய்வதனால் எவர உடல் அழிவடைகிறதோ அவர்கள் பாக்கியசாலிகள்.http://www.tamilvaasi.com/2011/02/blog-post_25.html