இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
`பிரமிக்க வைக்கும் மிதக்கும் சொர்க்கம்
கடவுளால்
கூட மூழ்கடிக்கமுடியாது என்று பெருமையுடன் பயணம் தொடங்கிய டைட்டானிக்
கப்பலில் உணர்வுப்பூர்வமாக டைட்டானிக் படம் பார்த்தவர்களை பயணிக்க வைத்தது
பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படம். ..
உலகின் பெரும் கப்பல்கள் பற்றி படித்திருப்போம். ஆனால் அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், `மிதக்கும் நகரமாய்’ ஒரு கப்பல் உருவப் போகிறது.
ஒரு மைல் தூரத்துக்கு 25 மாடிக் கட்டிடங்கள் அமைந்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அதுதான்
`பிரீடம் ஷிப்’ என்ற மிதக்கும் நகரம்!
`பிரீடம் ஷிப்’ என்ற மிதக்கும் நகரம்!
இதன்
நீளம் ஆயிரத்து 317 மீட்டர்கள். அகலம் 221 மீட்டர்கள். உயரம் 103
மீட்டர்கள். இந்தக் கப்பல் ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட
உயரமானது. இரண்டு கால்பந்து மைதானங்கள் சேர்ந்த அகலம் கொண்டது. இவ்வளவு
பெரிய `மெகா’ கப்பல் கடலில் மிதப்பது மட்டுமல்ல, உலகைச் சுற்றிலும் வலம்
வரவும் போகிறது.
`பிரீடம்
ஷிப்’ பற்றிய எல்லா தகவல்களுமே பிரமிக்க வைக்கின்றன. இதில் 60
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மொத்தம் 17 ஆயிரம் குடியிருப்பு
பிரிவுகள் அமையும். இக்கப்பல் தொடர்ந்து உலகம் முழுவதும் பயணம் மேற்
கொண்டபடி இருக்கும். இங்கு நிரந்தரமாகத் தங்கியிருந்தபடி உலகைச் சுற்றி
பார்க்கலாம்.
இந்தக்
கப்பல் தளங்களின் உச்சியில் சிறு விமானங்கள் இறங்கி ஏறும் வகையில்,
ஆயிரத்து 158 மீட்டர் நீளமுள்ள ஓர் ஓடுபாதையும், விமானங்களை
நிறுத்துவதற்கான இடங்களும் அமைக்கபடும். உல்லாச படகுகளை நிறுத்தும் பகுதி,
ஒரு மிக பெரிய வணிக வளாகம், பள்ளி, கல்லூரி, கோல்ப் மைதானம், சைக்கிள்
ஓட்டும் பாதைகள், ஓய்வாய்க் கழிப்பதற்கு 200 திறந்த வெளி பகுதிகள்
ஆகியவையும் அமையும்.
இம்மாபெரும்
கப்பலில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் குறைவில்லை. இதில் பல உணவகங்கள்,
திரையரங்குகள், விளையாட்டு அமைப்புகள் இருக்கும். விளையாட்டு
பிரியர்களுக்கு ஏற்ற வசதிகளும் உண்டு. டென்னிஸ், கூடைபந்து, `பவுலிங்’
போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம். நீச்சல் குளம், பசும்புல்பரப்பு,
`ஸ்கேட்டிங்’ வளையம், செயற்கைக் கடற்கரையில் அமர்ந்து தூண்டில் போட்டு மீன்
பிடிக்கும் வசதி போன்றவை உண்டு.
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
என்று பாடிக்கொண்டே ஜாலியாக மீன்பிடிக்கலாமே!
என்று பாடிக்கொண்டே ஜாலியாக மீன்பிடிக்கலாமே!
ஒவ்வொரு
குடியிருப்பிலும் 100 உலக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், கப்பல் செல்லும்
கடலை ஒட்டிய நாடுகளின் தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சிகளையும் காணலாம்.
இணைய வசதியும் உண்டு.
ஆகவே பதிவர்களே கவலை வேண்டாம். கப்பலில் இருந்தே வலைப்பதிவுகள் எழுதலாம்....
இந்த
மிதக்கும் நகரத்துக்கு என்று ஒரு தனி பாதுகாப்பு படைம் உண்டு. தவிர,
கப்பலின் நுற்றுக்கணக்கான பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு பயிற்சி
அளிக்கபடும்.
இவ்வளவு
பெரிய கப்பலை கடலில் நகர்த்துவது என்பது எளிதான விஷயமல்ல. அதற்கென்று, தலா
3 ஆயிரத்து 700 குதிரைசக்தி திறன் கொண்ட 100 டீசல் இயந்திரங்கள்
பயன்படுத்தபடும். கற்பனைக்கு அப்பாற்பட்ட இக்கப்பலை கட்டி முடிக்க
முன்றாண்டுகளும், பல்லாயிரம் கோடி ருபாயும் ஆகும் என்று
கணக்கிட்டிருக்கிறார்கள்.
ஆதங்கமான ஒரே விஷயம், இக்கப்பலில் நிரந்தரக் குடியிருப்பு பெறவும், பயணம் செய்யவும் கோடீசுவரர்களால் மட்டுமே முடியும்!



38 comments:
சொர்க்க வாசல் போலல்லவா
காட்டியுள்ளீர்கள்!
அருமையோ அருமை. கண்ணைப்பறிக்குது.
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் போன்ற கோடீஸ்வரிகளுக்கு மட்டுமே சாத்தியமாகும் என்று பேசிக்கொள்கிறார்கள்.
கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் போன்ற கோடீஸ்வரிகளுக்கு மட்டுமே சாத்தியமாகும் என்று பேசிக்கொள்கிறார்கள்
கோடிகளில் பணம் சேர்ந்த பிறகு சாத்தியமாகும்!
நான் ஏற்கனவே சிலர் பேசிக்கொள்வதாகச் சொன்னதை, தங்களே ஒத்துக்கொண்டு விட்டீர்களே!!
சபாஷ். என் கணிப்பு எப்போதுமே த்வறுவது இல்லை.
பகிர்வுக்கு நன்றிகள்.
You can only give such a RICHEST post.
Thank you very much. vgk
இன்று ஏதோ ஒரு கோடியில் உள்ள நமக்கு, ஏதோ ஓரிரு கோடிகள் என்பது வியப்பான விஷயமாகக்கூட இருக்கலாம்.
தெய்வாம்சமும் தெய்வ நம்பிக்கையும் உள்ளவரான தாங்கள் பல கோடிகளுக்கு அதிபதியாவப்போவது நிச்சயம்.
அதுவும் அது நிகழப்போவது வெகு விரைவிலேயே.
மனம் நிறைந்த ஆசிகளுடன் நான் சொல்வது பலிக்கிறதா இல்லையா என்று பாருங்கள்.
ஒரு பேய்க்காற்று அடித்தால் உயரத்தில் உள்ள கோபுரக் கலசமும் கீழே விழுவதுண்டு, அதே காற்றில் கீழே தரையில் உள்ள சாதாரண ஒரு இலைச்சரகும் கோபுர உச்சிக்குப்போய் அமர்வதுண்டு. அதனால் எதுவும் எப்போதும் நடக்கும், மேடம்.
அம்பாள் அருளால் தங்களுக்கு என்றும் நல்லதே நடக்கும்.
என் அன்பான வாழ்த்துக்கள். vgk
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
அற்புதமான பதிவைத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தங்களுக்கு அதில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால்தான்
அனைவருக்கும் பயன்படும்
என்வே ஆண்டவன் உங்களுக்கு அந்த வாய்ப்பை அருள
மனமார வேண்டுகிறேன்
இவ்வளவு வசதிகள் நிறைந்த கப்பல் உருவாகபோவதைப்பற்றி அருமையானதொரு பதிவு... படங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலருக்கு... ஹா ஹா கப்பலில் இருந்து கொண்டே வலைப்பதிவுகள் எழுதலாம் அருமை... மிக அழகாக படங்களுடன் விளக்கங்களும் தந்தமைக்கு வாழ்த்துக்கள்...
தொடர்பான படங்கள் அருமை
அத்தனை பிரமிப்பு...
மனிதன் சுகவாசி என்பதை மறுபடி மறுபடி
பறைசாற்றும் கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று....
படங்கள் அத்தனையும் கண்களை குளிர்விக்கின்றன...
அழகிய படங்களுடன் அருமையான தகவல்களுக்கு நன்றி.
உண்மையிலே ஆச்சரியப்பட வைக்கிற பிரிட்டிஷ் ஷிப்பினைப் பற்றிய தகவல்களும் படங்களும்.
பகிர்விற்கு நன்றி!
அடியிற்கண்ட சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.
//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காணத்தவறாதீர்கள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும், சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
.
இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய / உதவும்
அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
ஒத்துழைப்புக்கு முன்கூட்டிய நன்றிகள்.
மிக்க நன்றி பதிவிட்டமைக்கு..!
இது நம்மூர் கப்பலா இருந்தா இதை தனி சட்டசபை தொகுதி ஆக்கிடுவாங்க..;;))
பிரமாண்டம்....!!!!
அருமையான படங்கள்.
வாழ்த்துக்கள்.